என் மலர்
நீங்கள் தேடியது "Demand"
- மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- கரூர் - வாங்கல் சாலையில்
கரூர்,
கரூர் -வாங்கல், நாமக்கல் மோகனூர் பகுதிகளை இணைக்கும் வகையில், வாங்கலில் காவிரியாற்றின் குறுக்கே, 2016ல் புதிய உயர் மட்ட பாலம் கட்டப்பட் டது. இதனால், மோகனூரில் இருந்து, கரூர் நகருக்குள் நாள் தோறும் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. மேலும், கரூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, மோகனூர் தினசரி சந்தைக்கு, விவசாயிகள் விளைபொருட்களை எடுத்து செல்கின்றனர். வாங்கல் பகுதியில் மின் விளக்குகள் இல்லாமல் உள்ளது. மேலும் மணல்கள், சென்டர் மீடியன் ஓரம் குவிந்துள்ன. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோர், நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துகளில் சிக்கி வரு கின்றனர்.எனவே, கரூர் சாலையில் போதிய மின் விளக் குகள் அமைக்க, சம்மந்தப் பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
.
- குமாரபாளையம் வட்டமலை அருகே தட்டான்குட்டை பிரிவு சாலை நுழைவுப்பகுதியில், மின் கம்பத்தை சுற்றி மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது.
- பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் வட்டமலை அருகே தட்டான்குட்டை பிரிவு சாலை நுழைவுப்பகுதியில், மின் கம்பத்தை சுற்றி மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. சாலையிலும் மழைநீர் தேங்கி உள்ளதால், வேலைக்கு செல்வோர், வேலை முடிந்து வீட்டுக்கு செல்வோர் என அனைவரும் இந்த பாதையில் தேங்கிய மழைநீரில் நடந்தபடிதான், செல்ல முடியும். மின் கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டால், தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உள்ளது. ஆகவே தாமதம் செய்யாமல், மின் கம்பத்தை சுற்றி நிற்கும் மழை நீரை அகற்றி, பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காளையார் கோவில் யூனியன் விட்டனேரி ஊராட்சியில் அடிப்படை வசதி செய்ய நிதி ஒதுக்க வேண்டும்.
- மாவட்ட நிர்வாகத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கவிஞர் வரதன் கோரிக்கை விடுத்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட விட்டனேரி ஊராட்சியில் அடிப்படை வசதி செய்வதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கவிஞர் வரதன் கோரிக்கை விடுத்தார்.
அவர் கூறுகையில், இந்த ஊராட்சி நிதி பற்றாக்குறையில் இயங்குவதால் மக்கள் பணிகள் உடனே செய்து முடிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இன்னும் அடிப்படை தேவைகளே நிறைவேற்றப்படாத எங்கள் ஊராட்சியின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அரசு உதவ வேண்டும்.
ஊராட்சிக்கு தேவை யான அடிப்படை வசதி களை செய்வதற்கு கடந்த 1 வருடமாக அரசு நிதி ஒதுக்காததால் அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டு ஊராட்சி நிர்வாகம் முடங்கி உள்ளது.ஊராட்சி களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் 14-வது நிதிக்குழு மானியம், ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானியம் மற்றும் மாநில நிதிக்குழு மானியத்தை அரசு வழங்குகிறது. இதை கொண்டு பணியாளர் சம்பளம், குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம், தெருவிளக்கு மற்றும் கழிவறை பராமரிப்பு உள்பட பல்வேறு பணிகள் செய்யப்படுகிறது.
மழைக்கு முன்பு கிராமத்தில் வாறுகால் வசதி ஏற்படுத்த, சேதமடைந்த சாலைகளை மேம்படுத்த, குடிநீர், சுகாதார பணிகள் உள்பட அடிப்படை வசதிகளை ஊராட்சியில் ெசய்ய அரசு ஒதுக்கீடு வேண்டி பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை.
அடிப்படை வசதி செய்வதற்கு நிதி ஒதுக்காததால் சிரமமாக உள்ளது. எனவே நிதி ஒதுக்க வேண்டும்.விட்டனேரி ஊராட்சியில் சாலை மற்றும் திட்டப்பணிகள் கேட்டு கொடுக்கப்படுகின்ற மனுக்கள் நிதி இல்லை என்று திரும்பி வந்துவிடுகிறது. எந்த கட்சியும் சாராத சமூக ஆர்வலரான செயல்படும் நான் மக்களை எப்படி எதிர் கொள்வது என்ற சூழலும் நிலவுகிறது.
எனவே எங்கள் ஊராட்சியின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அரசு உதவ வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
- சாலையில் சுற்றிதிரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.
- குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்
கரூர்:
கரூர் நகரில் சுற்றி திரியும் மனநலம் பாதிக் கப்பட்டவர்களை, அவர் களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கரூர், கல்யாண பசுப தீஸ்வரர் கோவில், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், அரசு மருத்து வமனை, ஜவஹர் பஜார், தான்தோன்றிமலை வெங் கடரமண சுவாமி கோவில், சாய்பாபா கோவில் உள் ளிட்ட பகுதிகளில், மன நிலை பாதிக்கப்பட்ட வர்கள் ஏராளமானோர் சுற்றி திரிகின்றனர்.
இவர்களில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், கோவை சாலையில் வாகனங்கள் செல்லும் எதிர் திசையில் ஓடி, அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறார். மற்ற பகுதிகளிலும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களால் பொதுமக்களுக்கு தொந்தரவுகள் ஏற்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், சாலைகளில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட் டவர்களை, அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த போலீசார், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
அதேபோல், கரூரில் சுற்றிதிரியும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.
- கழிவு நீர் வாய்க்காலை துார்வார கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- சாலையில் ஆறாக ஓடுகிறது.
கரூர்:
கரூர் அருகே, படிக்கட்டு துறை பகுதியில் சாக்கடை வாய்க்கால் செல் கிறது. இதை சுற்றியுள்ள பகுதியில் அதிக அளவில் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் கழிவு நீர் வாய்க்காலில், புதர்கள் மண்டியுள்ளதால் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் அதிக அளவில் தேங்கியுள்ளன. மேலும் மண் மேடுகளும் ஏற்பட்டுள்ளதால், கழிவு நீர் செல்லாமல் மழைக்காலங்களில் சாலையில் ஆறாக ஓடி தேங்கி நிற்கிறது. எனவே, சுகாதார கேட்டை தடுக்க, படிக்கட்டு துறை பகுதியில் செல்லும், சாக்கடை வாய்க்காலை தூர்வாரி, சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மணிக்கூண்டு மற்றும் தம்பிதுரை பூங்கா சிதிலமடைந்து காணப்படுகிறது.
- பூங்கா சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நகரின் அடையாளமாக அமைந்துள்ள மணிக்கூண்டு மற்றும் தம்பிதுரை பூங்கா சிதிலமடைந்து காணப்படுகிறது. அதை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென்பது மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
இது தொடர்பாக நாகை எம்.எல்.ஏ ஷாநவாஸ் அங்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, விரைவில் மணிக்கூண்டு மற்றும் பூங்கா சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று உறுதியளித்தார்.
ஆய்வின் போது, நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், நகரச் செயலாளர் முத்துலிங்கம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- சாலைகளை சீர்ப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- அரியலூர் நகர் மன்ற கூட்டம்
அரியலூர்,
அரியலூர் நகராட்சி 18-வது வார்டில் கட்டி முடிக்கப்பட்டு கிடப்பில் உள்ள சாண எரிவாயு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வார்டு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
அரியலூர் நகராட்சி அலுவலலக கூட்டரங்கில், நகர் மன்ற உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர் மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கலியமூர்த்தி, ஆணையர் சித்ராசோனியா, பொறியாளர் தமயந்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதில் வார்டு உறுப்பினர்கள் செல்வராணி, புகழேந்தி, கண்ணன், வெங்கடாசலபதி உள்ளிட்டோர் பேசுகையில், வ.உசி நகர் பகுதியில் சாக்கடை கால்வாயில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முள்புதர்களை அகற்ற வேண்டும். 1 -வது வார்டில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். நகராட்சி பெண் வார்டு உறுப்பினர்களுக்கென தனி கழிவறை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். 18-வது வார்டில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட சாண எரிவாயு திட்டம் கிடப்பில் உள்ளது. இதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதைசாக்கடைக்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்களை உடனடியாக மூடி சாலைகளை சீர்ப்படுத்த வேண்டும். அனைத்து வார்டுகளிலும் கொள்ளிடம் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தினர்.தொடர்ந்து கூட்டத்தில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- கொரோனா பாதிப்புக்கு பிறகு தற்போதுதான் அதிலிருந்து மீண்டு வருகிறோம்.
- தமிழகம் முழுவதும் இரவு நேரத்தில் வணிக நிறுவனங்கள் திறந்து செயல்பட அரசாணை வெளியிட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்டத்தில் இரவு நேர கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று காவல் துறைக்கு வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் கணேசன், பல்லடம் சங்க செயலாளா் அண்ணாதுரை ஆகியோா் திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:-
திருப்பூா் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை மட்டுமே வணிக நிறுவன கடைகள் திறந்திருக்க வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்புக்கு பிறகு தற்போதுதான் அதிலிருந்து மீண்டு வருகிறோம். இந்த நிலையில் இரவு 10 மணிக்கு மேல் கடையை திறக்கக்கூடாது என்பதால் பெரிதும் பாதிக்கப்படுகிறோம். வியாபாரிகள் நலன் கருதி தமிழக அரசு தமிழகம் முழுவதும் இரவு நேரத்தில் வணிக நிறுவனங்கள் திறந்து செயல்பட கடந்த ஜூன் மாதம் 2-ந் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. அதனால் மாவட்டம் முழுவதும் இரவு 10 மணிக்கு மேலும் கடையை திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் 32-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டது.
- சாக்கடை நீர் வெளியே செல்ல முடியாதபடி சிக்கலான சூழ்நிலை உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 32-வது வார்டு மடவார் வளாகம் பகுதிக்குட்பட்ட தன்யா நகர்பகுதியில் மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, மற்றும் சாலை வசதிகள் பிரதான குறைகளாக உள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் 500 குடியிருப்புகள் இருக்கும் தன்யா நகருக்கு செல்வதற்கும் தன்யா நகரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்ப்பகுதிக்கு செல்வதற்கும் ஒரே ஒரு பாதை வசதி மட்டுமே உள்ளது. தன்யா நகரில் சில இடங்களில் 20 அடி ரோடு வசதியும், பல தெருக்களில் 16 அடி அகலம் கொண்ட ரோடு வசதியும் மட்டுமே உள்ளது.
குறிப்பாக தன்யாநகர் உள்ளே நுழையும் சுமார் 50 அடி நீளமுள்ள பாதையில் அகலமானது 10 அடிக்கும் குறைவாக உள்ளதால் இந்த பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே தன்யா நகருக்கு இப்பாதையை தவிர்த்து வேறு ஒரு மாற்றுப் பாதை வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தன்யா நகர் உட்புறம் உள்ள பாரதி நகர் மற்றும் குறிஞ்சி நகர் தெருக்களுக்கு பேவர் பிளாக், மின்கம்பம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவைப்படுகிறது. 500 குடியிருப்பு உள்ள இப்பகுதிக்கு தனியாக ரேஷன் கடை கோரிக்கையும் பொதுமக்கள் விடுத்துள்ளனர்.
பூங்கா மற்றும் உடற்பயிற்சி மைதானம் தேவை என்ற கோரிக்கையும், தன்யா நகர் பகுதி முழுவதிலும் சாக்கடை நீர் வெளியே செல்ல முடியாதபடி சிக்கலான சூழ்நிலை உள்ளதால் அதையும் சரி செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள் வைத்துள்ளனர்.
- மதுரையில் வீரமாமுனிவருக்கு முழு உருவ சிலை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
- புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி மாணவர் சுபநிதி சுப்பிரமணியன், வீரமாமுனிவரின் தமிழ் தொண்டை எடுத்துரைத்தார்.
மதுரை
வீரமாமுனிவரின் 343-வது பிறந்த நாளையொட்டி மதுரை பாத்திமா கல்லூரி ரவுண்டானாவில் உள்ள அவரது சிலைக்கு புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி தாளாளர் சேவியர், உதவி தலைமை ஆசிரியர் மரிய அருள்செல்வம், தலைமை ஆசிரியர் ஜோசப், தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி வளாக அதிபர் மரியநாதன், தாளாளர் ஸ்டீபன் லூர்து பிரகாசம், தலைமை ஆசிரியர் சேவியர் ராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அறக்கட்டளை செயலாளர் ஜெயராஜ் வரவேற்றார். புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி மாணவர் சுபநிதி சுப்பிரமணியன், வீரமாமுனிவரின் தமிழ் தொண்டை எடுத்துரைத்தார்.
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வீரமாமுனிவருக்கு முழு உருவ சிலை அமைக்க வேண்டும். சிலை வளாகத்தை சீர்மிகு வளாகமாக மாற்றி அமைக்கவும், அறக்கட்டளை சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
- உரிய மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது
- கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் 39 ஊராட்சிகள் மற்றும் ஒரு பேரூராட்சி உள்ளது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்க ள் வசித்து வருகின்றனர். கறம்பக்குடியில் செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையம். பொது மக்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தாலுகா தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.
2 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்
இந்த மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 30 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவும் உள்ளது. ஆனால் தாலுகா மருத்துவமனைக்கான எந்த ஒரு வசதிகளும் இந்த மருத்துவமனையில் இல்லை. 6 டாக்டர்கள் பணியிடங்கள் உள்ள நிலையில் இரண்டு பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
அவர்களும் அவ்வப்போது விடுமுறை பெற்று மாற்று பணி என செ ன்று விடுகின்றனர். இரவு பணிக்கு மருத்துவர்கள் இருப்பதில்லை. 5-கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. மேலும் ஒரு தாலுகா மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உப கரணங்கள் இங்கு இல்லை. போதிய ஊழியர்கள் மற்றும் இடவசதி இல்லாததால் சில மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தாமலேயே உள்ளன.
நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முடியாத நிலை
இதனால் நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை ஒட்டிய பகுதி என்பதால் சாலை விபத்து களுக்கு உள்ளாவோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் இந்த மருத்துவமனை க்கு கொண்டு வரப்படுகின்றனர். ஆனால் முதல் உதவி சிகிச்சை அளிக்கக்கூட மருத்துவர்கள் இல்லா ததால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதுக்கோட்டை அரசு மரு த்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்ற னர்.
இதனால் பல உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் இது சம்பந்தமா க சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் எந் த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் உடனடியாக மா வட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காலி பணியிடங்களை உடனடியாக நியமிக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விடுத லை சிறுத்தை கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விரைந்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் விடுதலை சிறு த்தை கட்சி சார்பாக மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்த உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை விரைவாக வழங்க கோரிக்கை விடுத்தனர்
- பெரம்பலூரில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட மாநாடு
பெரம்பலூர்:
பெரம்பலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டிற்கு மாவட்ட அமைப்பாளர் சண்முகம் தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் ஜெயராமன், முத்துசாமி, மகாலெட்சுமி, ராஜாங்கம், தனராஜ், கல்யாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட தலைவர் வேணுகோபால் மாநாட்டு கொடியினை ஏற்றி வைத்தார். மாநில கட்டுப்பாட்டக்குழு உறுப்பினர் ஞானசேகரன், மாவட்ட செயலாளர் ஜெயராமன் ஆகியோர் பேசினர். சிறப்பு அழைப்பாளராக ஏஐடியுசி மாநில செயலாளர் சந்திரக்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
மாநாட்டில் சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஆஷா பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து குறைந்தபட்ச மாத சம்பளமாக ரூ. 18 ஆயிரம் வழங்கவேண்டும், நுகர்பொருள் வாணிபக் கழக சுமைத்தூக்கும் பணியாளர்களை நிரந்தரம் செய்து தொகுப்பூதியம் நிர்ணயம் செய்யவேண்டும் , திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.
நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்தி, குறைந்த பட்ச கூலி ரூ.281-ஐ முழுமையாக வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களுக்கு குடும்ப உதவிதொகை மற்றும் ஓய்வூதியத்தை காலதாமதம் செய்யாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும்.
நடப்பாண்டில் பாதிக்கப்பட்டுள்ள மானா வாரி பயிர்களான பருத்தி, மக்காச்சோளம், சின்னவெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் பயிர் காப்பீடு தொகையை விரைவாக வழங்கவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர் சீனிவாசன் நன்றி கூறினார்.