என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலைகளை சீர்ப்படுத்த கோரிக்கை
    X

    சாலைகளை சீர்ப்படுத்த கோரிக்கை

    • சாலைகளை சீர்ப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
    • அரியலூர் நகர் மன்ற கூட்டம்

    அரியலூர்,

    அரியலூர் நகராட்சி 18-வது வார்டில் கட்டி முடிக்கப்பட்டு கிடப்பில் உள்ள சாண எரிவாயு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வார்டு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

    அரியலூர் நகராட்சி அலுவலலக கூட்டரங்கில், நகர் மன்ற உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர் மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கலியமூர்த்தி, ஆணையர் சித்ராசோனியா, பொறியாளர் தமயந்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

    இதில் வார்டு உறுப்பினர்கள் செல்வராணி, புகழேந்தி, கண்ணன், வெங்கடாசலபதி உள்ளிட்டோர் பேசுகையில், வ.உசி நகர் பகுதியில் சாக்கடை கால்வாயில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முள்புதர்களை அகற்ற வேண்டும். 1 -வது வார்டில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். நகராட்சி பெண் வார்டு உறுப்பினர்களுக்கென தனி கழிவறை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். 18-வது வார்டில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட சாண எரிவாயு திட்டம் கிடப்பில் உள்ளது. இதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதைசாக்கடைக்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்களை உடனடியாக மூடி சாலைகளை சீர்ப்படுத்த வேண்டும். அனைத்து வார்டுகளிலும் கொள்ளிடம் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தினர்.தொடர்ந்து கூட்டத்தில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×