மின் கம்பத்தை சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீரால் அபாயம்

குமாரபாளையம் வட்டமலை அருகே தட்டான்குட்டை பிரிவு சாலை நுழைவுப்பகுதியில், மின் கம்பத்தை சுற்றி மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது.பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின் கம்பத்தை சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீர்.
மின் கம்பத்தை சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீர்.
Published on

குமாரபாளையம்:

குமாரபாளையம் வட்டமலை அருகே தட்டான்குட்டை பிரிவு சாலை நுழைவுப்பகுதியில், மின் கம்பத்தை சுற்றி மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. சாலையிலும் மழைநீர் தேங்கி உள்ளதால், வேலைக்கு செல்வோர், வேலை முடிந்து வீட்டுக்கு செல்வோர் என அனைவரும் இந்த பாதையில் தேங்கிய மழைநீரில் நடந்தபடிதான், செல்ல முடியும். மின் கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டால், தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உள்ளது. ஆகவே தாமதம் செய்யாமல், மின் கம்பத்தை சுற்றி நிற்கும் மழை நீரை அகற்றி, பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com