என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "traders"
- தினமும் சேரும் குப்பைகளை சாலையில் கொட்டாமல் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.
- கூட்டத்தில் சாலையோர கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சீர்காழி:
சீர்காழியில் தீபாவளி பண்டிகையொட்டி 13-வது வார்டுக்கு உட்பட்ட தேர் வடக்குவீதி, மேலவீதி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தற்காலிக சாலை யோரக டைகள் அமைக்க ப்படுவது வழக்கம்.அதன்படி நிகழாண்டு சாலையோர கடைகள் அமைக்கப்ப ட்டுவருகிறது. இதனிடையே சாலையோர கடை வியா பாரிகளுடனான ஆலோ சனைக்கூட்டம் அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் முபாரக் தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற உறுப்பினர் பாஸ்கரன், சீர்காழி அனைத்து வணிகர்கள் நல சங்க தலைவர் பாபு.கே.விஜயன் முன்னிலை வகித்தனர்.இதில் தகர கொட்டகை அமைத்து தற்காலிக கடை அமைத்துக்கொள்வது, நாள்தோறும் சேரும் குப்பைகளை சாலையில் கொட்டாமல் பெரிய நெகிழி பையில் வைத்து கடை உரிமையாளர்களே தூய்மைபணியாளர்களிடம் வழங்கிடுவது, கடைக்கு நகராட்சிக்கு மட்டும் உரிய தொகையை செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது. இந்த கூட்டத்தில் சாலையோர கடை உரிமையாளர்கள் பலர் பங்கேற்றனர்.
- காய்கறி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் வியாபாரிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
- கழிவறைகளை சுத்தம் செய்து உரிய முறையில் பராமரிப்பு செய்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போரூர்:
கோயம்பேடு, காய்கறி மார்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வரும் சில்லரை வியாபாரிகள், மளிகை, காய்கறி கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் என லட்சக்கணக்கானவர்கள் இங்கிருந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கடந்த சில நாட்களாகவே பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் ஒரிரு நாட்கள் பெய்த லேசான மழைக்கே கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் ஆங்காங்கே மழைநீர் குளம் போல தேங்கி கிடக்கிறது. இதனால் மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் வியாபாரிகள், மூட்டை தூக்கி செல்லும் கூலி தொழிலாளர்கள், பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் என அனைவரும் மார்க்கெட் வளாகத்தில் நடந்து செல்ல கூட முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் காய்கறி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் வியாபாரிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மார்க்கெட் வளாகத்தில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததே தண்ணீர் தேங்கி கிடப்பதற்கு காரணம் என்று வியாபாரிகள் தரப்பில் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் மழை காலம் தொடங்கி உள்ளதால் மார்க்கெட் வளாகத்தில் தேங்கும் குப்பை கழிவுகளை உடனுக்குடன் அகற்றிடவும், தொற்று நோய் பரவுவதை தடுத்திடும் வகையில் சுகாதாரமான குடிதண்ணீர் கிடைத்திடவும், கழிவறைகளை சுத்தம் செய்து உரிய முறையில் பராமரிப்பு செய்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அங்காடி நிர்வாக குழு அதிகாரிகளுக்கு வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.
- விவசாயிகள் அதனை குடித்து விட்டு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர்.
- கள்ளச்சாராயம் குடித்த 10-க்கும் மேற்பட் டோர் பலியான சம்பவம் நடைபெற்றது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பிரம்ம தேசம் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் வேலை செய்வது வழக்கம். பிரம்மதேசம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தினந்தோறும் காலை மாலையில் சாராயம் விற்பனை அேமாகமாக நடைபெறுகிறது. குறைந்த விலைக்கு கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படு வதால் விவசாயிகள் அதனை குடித்து விட்டு உடல் நலக்குறைவால் அவதிப் பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 10-க்கும் மேற்பட் டோர் பலியான சம்பவம் நடைபெற்றது. இந்த சாரா யத்தை விற்பனை செய்த வியாபாரிகள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பிரம்மதேசம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதை போலீசார் தடுத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களும் சமூக ஆர்வலர்க ளும் கோரிக்கை விடுத்துள்ள னர்.
- சாத்தான்குளம் மெயின் பஜாரில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு புதியதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது.
- அந்த கால்வாய் கட்டுமானப்பணியின் கழிவுகளை அருகே உள்ள ஒரு கடையின் வாசலில் போட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் மெயின் பஜாரில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு புதியதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணிக்காக சாத்தான்குளம் மெயின் பஜாரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து சிறு, குறு தெருக்கள் வழியாக மிகவும் சிரமத்துடன் சென்று வந்ததாக பொதுமக்கள் புகார் கூறினர்.
இந்த நிலையில் பொதுமக்கள், வியாபாரிகள் எதிர்ப்பு காரணமாக கடந்த 19-ந்தேதி கழிவு நீர் கால்வாய் பணிகள் அவசர கதியில் முடிக்கப்பட்டு பின்னர் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் அந்தப் பணியினை செய்த ஒப்பந்ததாரர் அந்தப் கால்வாய் கட்டுமானப் பணியின் கழிவுகளை அருகே உள்ள ஒரு கடையின் வாசலில் போட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்த கடையை திறக்க வந்த வியாபாரி கடந்த 4 நாட்களாக கடையை திறக்க முடியாமல் மிகவும் அவதியடைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து வியாபாரிகள் சங்க செயலாளர் மதுரம் செல்வராஜ் கூறுகையில், இந்த கழிவுநீர் கால்வாய் பணிக்காக வியாபாரிகள் ஒரு மாத காலத்திற்கு மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதினால் அவதி அடைந்து வந்த நிலையில் தற்போது பணிகள் முடிந்தும் அங்குள்ள கடையின் வாசலில் கால்வாய் கட்டுமான கழிவுகளை கொட்டப்பட்டு இருந்ததால் வியாபாரிகள் அவதி அடைந்து வருவது மிகவும் வேதனைக்குரியது. எனவே இந்த விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கட்டிட கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
- ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு, குறு வணிகர்கள் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
- வணிகர்களின் வாழ்வாதரத்தை காப்பாற்ற மின்கட்டணத்தை குறைக்க வேண்டும்.
சென்னை:
தென் சென்னை கிழக்கு மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவர் கிருஷ்ணகுமார் விடுத்துள்ள அறிக்கையில், அரசின் சமாதான திட்டத்தின்படி வணிகர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான வரி நிலுவைத் தொகையை வட்டியுடன் தள்ளுபடி செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிய முதலமைச்சருக்கும் , இதற்கு உறுதுணையாக இருந்து எங்களை வழிநடத்தி செல்லும் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை மாநிலத் தலைவர் வெள்ளையன் மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தற்போது ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு, குறு வணிகர்கள் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதில் தற்போது மின்சார கட்ட ணமும், சொத்து வரியும் கூடுதலாக இருப்பதால் சிறு குறு வணிகர்கள் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வருமானமும் பின்தங்கிய நிலையில் உள்ளது. எனவே, வணிகர்களின் வாழ்வாதரத்தை காப்பாற்ற மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
- தடுப்பணை கட்டி தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
- தண்ணீரை தேக்கி உணவு தானிய உற்பத்தியை பெருக வேண்டும்.
சீர்காழி:
சீர்காழியில் வர்த்தகர்கள் பாதுகாப்பு நல சங்கத்தின் சார்பில்பொறுப்பாளர்கள்ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ஞானமணி தலைமை வகித்தார்.
செயலாளர் சத்யநாராயணன், பொருளாளர் வெங்கட்ராஜ், கௌர வதலைவர் கார்த்தி கேயன், ஆலோசகர் சேதுராமன், இளங்கோவன், பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத கர்னாடக அரசை கண்டித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
வரும் காலத்தில் இது போன்ற தண்ணீர் பிரச்சனை ஏற்படாத வகையில் கூடுதலாக தடுப்பணைகளை தமிழக அரசு கட்டவேண்டும்.
அவ்வாறு தடுப்பணை கட்டி தண்ணீரை தேக்கி உணவு தானிய உற்பத்தியை பெருக்கிடவேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.
- தட்டார்மடம் போலீஸ் நிலையம் அருகே முன்பு செயல்பட்ட இடத்தில் மீண்டும் வாரச்சந்தை தொடங்கப் பட்டது.
- வாரந்தோறும் புதன்கிழமை இந்த வாரச்சந்தை நடைபெறும் எனவும் தெரிக்கப்பட்டது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் ஒன்றியம் நடுவக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட தட்டார்மடத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வாரச்சந்தை முறையாக செயல்பட்டு வந்தது. இதன் மூலம் பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். மேலும் அந்த வாரச்சந்தை செயல்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்பு இருந்ததால் அதனை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் மக்கள் கோரிக்கையை ஏற்று வாரச்சந்தை இடம் தேர்வு செய்யப்பட்டது. இதனையடுத்து ஊராட்சி தலைவர் சபிதா செல்வராஜ் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக நேற்று கோழி மற்றும் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. அவைகளை முறையாக வியாபாரிகள் வாங்கி சென்றனர். காய்கறி மற்றும் இதர கடைகள் வருகிற வாரம் செயல்படும் என தெரிவிக்கப் பட்டது. வாரந்தோறும் புதன்கிழமை இந்த வாரச்சந்தை நடைபெறும் எனவும் தெரிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேல், மாவட்ட பா.ஜனதா துணைத் தலைவர் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், ஒன்றிய அ.தி.மு.க. இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன், தி.மு.க. கிளை செயலாளர் முரளி, முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் கிருஷ்ண குமார், கோவில் தர்மகர்த்தா ஆதி லிங்கராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர் சகாய் விஜயன், ஆடு வியாபாரிகள் கிருஷ்ணன், நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பைகளை திரும்பக் கேட்டு நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- வியாபாரிகளை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி அறிவிப்பு செய்யுங்கள்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.
மேலும், இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அதனை விற்பனை மற்றும் பயன்படுத்தும் கடைகள் மீதும் நடவ டிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
அதனையடுத்து, உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் நேற்று திலாசுப்பேட்டை பகுதியில் இத்தகைய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என திடீர் ஆய்வு நடத்தினர். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் இருப்பதை கண்டு, அவற்றை பறிமுதல் செய்தனர். மேல் நடவடிக்கைக்காக அவற்றை வாகனங்களில் ஏற்றினர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகளுக்கும் அபராதம் விதித்தனர்.
இதையறிந்த திலாசுப்பேட்டை பகுதியில் உள்ள வியாபாரிகள் அங்கு ஒன்று திரண்டு வந்து பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனத்தை சிறை பிடித்தனர். பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பைகளை திரும்பக் கேட்டு நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
'வியாபாரிகளை ஒருங் கிணைத்து கூட்டம் நடத்தி அறிவிப்பு செய்யுங்கள். அதன் பிறகு வியாபாரிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் பறி முதல் செய்யுங்கள்'என ஆவேசமாக கூறினர். அதையடுத்து நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பைகளை வியாபாரிகளிடம் திரும்ப கொடுத்து விட்டு சென்றனர்.
- சாலையோர கடைகளை, வாரச் சந்தை வளாகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இடமாற்றம் செய்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது
- போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.
அவிநாசி
அவிநாசி நகரப் பகுதியில் வைக்கப்படும் சாலையோர கடைகளால் விபத்துகள் ஏற்படுவதாகவும், அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் சாலையோர கடைகளை முறைப்படுத்தவும் வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துவந்தனா்.
இதையடுத்து, அண்மையில் நடைபெற்ற பேரூராட்சி ஆலோசனைக் கூட்டத்தில் சாலையோர கடைகளை, வாரச் சந்தை வளாகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இடமாற்றம் செய்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால், சாலையோர கடைகள் வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை செயல்பட்டன.
இதனைக் கண்டித்தும், சாலையோர கடைகளை இடமாற்றம் செய்வதற்காக நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை அமல்படுத்த வலியுறுத்தியும் அவிநாசி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.போராட்டத்துக்கு அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் முத்துக்குமரன் தலைமை வகித்தாா்.சங்க பொருளாளா் தனசேகரன், வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஒருங்கிணைப்பாளா் பழனிசாமி, மாா்க்கெட் அசோசியேஷன் தலைவா் காா்த்திகேயன், மெடிக்கல் அசோசியேஷன் சங்கத் தலைவா் ஈசுவரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
- அசைவம் உண்ணாமல் மக்கள் விரத முறையை கடைபிடித்து சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வருவது வழக்கம்.
- வஞ்சிரம் மீன் 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடலூர்:
புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபடுவதற்கு உகந்த மாதமாக இருப்பதோடு, மாதம் முழுவதும் அசைவம் உண்ணாமல் மக்கள் விரத முறையை கடைபிடித்து சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வருவது வழக்கம். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கடலூர் துறைமுகம் பகுதியில் மீன் வாங்குவதற்கு பொதுமக்கள் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்வமுடன் மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்று வந்தனர். இந்த நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பரபரப்பாக காணப்படக்கூடிய துறைமுகத்தில் பொதுமக்கள் மிக மிக குறைந்த அளவில் மீன்களை வாங்கி சென்று சென்றனர். இதன் காரணமாக கடலூர் துறைமுகம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
இதன் காரணமாக மீன் வியாபாரிகள் மற்றும் மீனவர்கள் மிகுந்த தொய்வுடன் காணப்பட்டனர். மேலும் வரத்து குறைவால் மீன்களின் விலையும் சற்று குறைந்து காணப்பட்டது. பொதுவாக ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படும் பன்னி சாத்தான் மீன் கிலோ 250 ரூபாய்க்கும், ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படும் கனவா வகை மீன் ரூ.150-க்கும், 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் வஞ்சிரம் மீன் 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.