search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Work stopped"

    • ரூ.17 கோடி செலவில் நெட்டூர் சாலை அமைக்கும் போது இந்த 400 மீட்டர் பகுதி மட்டும் புறக்கணிக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டது.
    • பேவர் பிளாக் சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை ரூ. 22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் காய்கனி மார்க்கெட் சாலையை வியாபாரிகள், பொதுமக்கள் மட்டுமின்றி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

    ரூ.17 கோடி செலவில் நெட்டூர் சாலை அமைக்கும் போது இந்த 400 மீட்டர் பகுதி மட்டும் புறக்கணிக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டது. இச்சாலையை சீரமைக்க வேண்டும் என மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும் கலெக்டர், நெடுஞ்சாலைத்துறையினர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளித்து வந்தனர்.

    இதையடுத்து அதனை பேவர் பிளாக் சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை ரூ. 22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இப்பணி தொடங்கப்பட்டு கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. சாலையின் இருபுறமும் சில அடி இடைவெளி விட்டு அமைக்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்படி அமைத்தால் மழை நீர் தேங்கி வெளியேற இயலாது, விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சாலை முழுவதும் பேவர் பிளாக் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காய்கனி சந்தை வியபாரிகள் முற்றுகையிட்டு பணியை தடுத்து நிறுத்தினர்.

    தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பூமிநாதன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஒப்பந்தப் புள்ளி அடிப்படையில்தான் சாலை அமைக்க முடியும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வியாபாரிகள் தரப்பில் இதற்கு ஒப்புக்கொள்ளாததால் தென்காசி கலெக்டரிடம் புகார் அளித்து தீர்வு காண முடிவு செய்தனர்.

    ×