என் மலர்

  நீங்கள் தேடியது "Alangulam"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஏற்கனவே மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த பொ.சிவபத்மநாதன், மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக ஆலங்குளம் வந்தார்
  • ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் எம் திவ்யா மணிகண்டன் தலைமையில் மேள தாளங்கள் முழங்க தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  ஆலங்குளம்:

  தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருக்கு ஆலங்குளத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

  ஏற்கனவே மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த பொ.சிவபத்மநாதன், மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக ஆலங்குளம் வந்தார். அவருக்கு ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் எம் திவ்யா மணிகண்டன் தலைமையில் மேள தாளங்கள் முழங்க தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  அம்பாசமுத்திரம் சாலையில் இருந்து பேருந்து நிலையம் வரை 101 தேங்காய் விடலை போடப்பட்டு ஊர்வலமாக வந்த பின்னர் பொ. சிவபத்மநாதன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை ஊர்வலம் நீடித்தது.

  வரவேற்பு நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஊராட்சித் தலைவர் தமிழ்செல்வி போஸ், ஒன்றிய தி.மு.க. செயலர்கள் செல்லதுரை, அன்பழகன், அரசு ஒப்பந்த தாரர்கள் மாரிதுரை, மணிகண்டன், இராமகிருஷ்ணன், கவுன்சிலர் சுந்தரம், உதயநிதி நற்பணி மன்ற மாவட்ட துணை அமைப்பாளர் அருணன், உதயநிதி ஸ்டாலின் ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமரன்உ ள்பட பலர் பங்கேற்றனர்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆலங்குளம் அருகே உள்ள நாலாங்கட்டளை கிராமத்தில் தீர்த்தாரபுரம் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.
  • நேற்று கடைக்கு வந்த மதுப்பிரியர் ஒருவர் 590 ரூபாய்க்கு மது வாங்கியுள்ளார்.

  ஆலங்குளம்:

  ஆலங்குளம் அருகே உள்ள நாலாங்கட்டளை கிராமத்தில் தீர்த்தாரபுரம் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.

  அங்கு விற்பனையாளராக செல்வம் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று கடைக்கு வந்த மதுப்பிரியர் ஒருவர் 590 ரூபாய்க்கு மது வாங்கியுள்ளார். ரூ.600 கொடுத்து மீதி 10 ரூபாய் சில்லரை கேட்டுள்ளார்.

  அதற்கு செல்வம் மது வாங்கியதற்கு மொத்த ரூபாயும் சரியாக போய்விட்டது என்றும் மீதி சில்லரை இல்லை என்றும் செல்வம் கூறியுள்ளார். அதற்கு மது பிரியர் மது வாங்கியதற்கான கணக்குகளை திரும்ப அவரிடம் சொல்லி மீதி 10 ரூபாய் கேட்டுள்ளார்.

  இதில் ஆத்திரமடைந்த விற்பனையாளர் செல்வம் மதுக்கடையின் உள்ளிருந்து கதவை திறந்து கொண்டு வெளியில் வந்து மது பிரியரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு தாக்கவும் முற்பட்டார். இதனை அருகில் இருந்த மற்றொரு நபர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

  செல்வம் ஏற்கனவே ஆலங்குளம் அருகே மதுக்கடையில் வேலை பார்க்கும் பொழுது மது பிரியர் ஒருவரை சில்லரை கேட்டதற்காக அடித்து உதைத்த வீடியோ சிசிடிவி காட்சிகள் வெளியாகி சிறிது காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பணியில் சேர்ந்து அதே பாணியை கடைபிடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளத்தை சேர்ந்தவர் ஆதி நாராயணன்
  • பூலாங்குளத்தில் இருந்து ஆண்டிப்பட்டி செல்லும் சாலையில் ஒரு தோட்டத்தில் புகையிலை பதுக்கி வைத்திருப்பதாக ஆலங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  ஆலங்குளம்:

  ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளத்தை சேர்ந்தவர் ஆதி நாராயணன்(வயது 38). இவர் பூலாங்குளத்தில் இருந்து ஆண்டிப்பட்டி செல்லும் சாலையில் ஒரு தோட்டத்தில் புகையிலை பதுக்கி வைத்திருப்பதாக ஆலங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது மூட்டைகளில் சுமார் 30 கிலோ எடை கொண்ட புகையிலை பண்டல்கள் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆதிநாராயணனை போலீசார் கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆலங்குளம் பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
  • கழிவறையில் கதவு இல்லாமலும், கதவுகள் இருந்தால் தாழ்பாழ் இல்லாமலும் உள்ளது.

  ஆலங்குளம்:

  ஆலங்குளம் பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வெளியூர் பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் இங்கு தினமும் வந்து செல்கின்றனர். இங்கு பயணிகள் பயன்பாட்டிற்கு கட்டண கழிப்பறை ஒன்றும், கட்டணமில்லா கழிப்பறை ஒன்றும் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கட்டண கழிப்பறை மூடப்பட்டு விட்டது.

  இதனால் பயணிகள் இலவச கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர். அந்த கழிவறையில் கதவு இல்லாமலும், கதவுகள் இருந்தால் தாழ்பாழ் இல்லாமலும் உள்ளது. மேலும் சிறுநீர் கழிக்குமிடத்தில் உள்ள கோப்பைகள் சிதிலமடைந்து காணப்படுகிறது.இதனால் பயணிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். பேரூராட்சிக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைகளை சுகாதாரமாக வைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோவில் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தசரா ஊர்வலத்துடன் தொடங்கியது.
  • பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமிகள் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

  ஆலங்குளம்:

  ஆலங்குளம் முத்தாரம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று பூக்குழித் திருவிழா நடைபெற்றது.

  இக்கோவில் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தசரா ஊர்வலத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் பல்வேறு வேடமணிந்த பக்தர்கள் வீதி உலா வந்தனர்.

  இதையடுத்து சனிக்கிழமை குழந்தைகள் பங்குபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவிளக்குப் பூஜையில் 1,503 பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

  26-ந் தேதி காலை கோமாதா பூஜை, இரவு சாமகால பூஜை ஆகியவை நடைபெற்றது. நேற்று பூக்குழி இறங்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி, பால்குடம் எடுத்தல் ஆகியவை நடைபெற்றது. நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமிகள் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

  இதில் விரதம் இருந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்கினி குண்டம் இறங்கினர். ஆலங்குளம் தீயணைப்பு நிலைய ஊழியர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

  தொடர்ந்து இரவு அம்பாள் சப்பரத்தில் வீதி உலா, சாம பூஜையும் நடைபெற்றது. இன்று சிபு பூஜை, மஞ்சள் நீராட்டு மற்றும் அன்னதானத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

  ஏற்பாடுகளை நிர்வாகப் பொறுப்பாளர் எஸ்.எஸ். ராமசுப்பு மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் அன்னபுஷ்பம்(வயது 55)
  • மாரியப்பன்(35) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அன்னபுஷ்பம் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

  நெல்லை:

  ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் அன்னபுஷ்பம்(வயது 55). இவர் சம்பவத்தன்று குருவன்கோட்டை-ஆலங்குளம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

  அப்போது அந்த வழியாக அப்பகுதியை சேர்ந்த மாரியப்பன்(35) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அன்னபுஷ்பம் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு ஆலங்குளத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

  அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அண்ணாவின் 114- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆலங்குளத்தில் அவரது உருவப் படத்திற்கு நகர தி.மு.க. சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது
  • நகர செயலாளர் நெல்சன் தலைமை தாங்கினார்.

  ஆலங்குளம்:

  அண்ணாவின் 114- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆலங்குளத்தில் அவரது உருவப் படத்திற்கு நகர தி.மு.க. சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

  நகர செயலாளர் நெல்சன் தலைமை தாங்கினார். தொழிலதிபர் சுந்தரம், கவுன்சிலர் மாவட்ட பிரதிநிதி அன்ப ழகன், ஒன்றிய பிரதிநிதி ஆதிவிநாயகம், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சரஸ்வதி பாஸ்கரன், ராசையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆலங்குளம் தாலுகா சிவலார்குளம் பஞ்சாயத்தில் திருவேங்கடப்பேரி குளம் உள்ளது.
  • குளத்தில் 360 யூனிட் கரம்பை மண் எடுப்பதற்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் சிற்றாறு வடிநில உப கோட்ட செயற்பொறியாளர் முன்னிலையில் ஆலங்குளத்தை சேர்ந்த ஒருவருக்கு அனுமதி வழங்கி உள்ளார்.

  ஆலங்குளம்:

  ஆலங்குளம் தாலுகா சிவலார்குளம் பஞ்சா யத்தில் திருவேங்கடப்பேரி குளம் உள்ளது.

  மண் எடுக்க அனுமதி

  இந்த குளத்தில் 360 யூனிட் கரம்பை மண் எடுப்பதற்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் சிற்றாறு வடிநில உப கோட்ட செயற்பொறியாளர் முன்னிலையில் ஆலங்குளத்தை சேர்ந்த ஒருவருக்கு அனுமதி வழங்கி உள்ளார்.

  அதன்படி கடந்த 6-ந் தேதி முதல் 10-ந்தேதி வரை காலை 8 மணியில் இருந்து மாலை 6 மணி வரை அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கரம்பை மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் அனுமதி காலம் முடிந்த பின்னரும் அந்த குளத்தில் மண் எடுக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.

  தாசில்தார் விசாரணை

  இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் தாசில்தார் பரிமளம் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று விசாரித்தனர். அவர்களுடைய அனுமதி சீட்டை வாங்கி பார்த்தபோது அதில் 12-ந் தேதி முதல் நாளை மறுநாள்(16-ந்தேதி) வரை கூடுதலாக 5 நாட்கள் கரம்பை மண் எடுப்பதற்கு அனுமதி இருந்தது.

  எனினும் அந்த அனுமதி சீட்டு போலியானதா என்று தாசில்தார் சந்தேகம் அடைந்து விசாரித்து வருகிறார். இதற்கிடையே மாவட்ட கலெக்டர் அனுமதியின்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலமாக அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும், உதவி செயற்பொறியாளர் கையொப்பமிட்டு போலியாக அனுமதி சீட்டு தயாரித்து அங்கு கரம்பை மண் எடுப்பதாகவும் தாசில்தாரிடம் சமூக ஆர்வலர்கள் புகார் கூறினர்.

  இதையடுத்து அந்த அனுமதி சீட்டுகளை பறிமுதல் செய்து கலெக்டரின் அனுமதி இன்றி வழங்கப்பட்டதா என்று தாசில்தார் விசாரணை நடத்தி வருகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆலங்குளம் அருகே உள்ள ஆ.மருதப்பபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியதுரை (வயது 32).
  • மனைவி கோபித்துக்கொண்டு அவரை பிரிந்து சென்றுவிட்டதால் மன வேதனை அடைந்த பெரியதுரை சம்பவத்தன்று விஷம் குடித்தார்.

  நெல்லை:

  ஆலங்குளம் அருகே உள்ள ஆ.மருதப்பபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியதுரை (வயது 32). இவருக்கு திருமணமாகி முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டதால் வேறு ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

  அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. சமீப காலமாக அவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததால் கடன் தொல்லையாலும் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.

  இந்த நிலையில் அவரது 2-வது மனைவியும் கோபித்துக்கொண்டு அவரை பிரிந்து சென்றுவிட்டதால் மன வேதனை அடைந்த பெரியதுரை சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு தலைமை தாங்கி 290 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.

  ஆலங்குளம்:

  ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.

  தொடர்ந்து அவர் 290 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி, ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லதுரை, நகர செயலாளர் நெல்சன், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், தொழிலதிபர் மணிகண்டன், மோகன்லால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  தலைமை ஆசிரியர் கிறிஸ்டல் மேரி வரவேற்றார். மாணவி ஜென்ஸி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் செந்தாமரை செல்வி நன்றி கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆலங்குளத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
  • அந்த வழியாக வந்த மினி வேனை தடுத்து நிறுத்தினர். உடனே வேனில் இருந்த வாலிபர் ஒருவர் தப்பி ஓடினார்.

  நெல்லை:

  ஆலங்குளத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

  போலி பீடி

  அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை தடுத்து நிறுத்தினர். உடனே வேனில் இருந்த வாலிபர் ஒருவர் தப்பி ஓடினார். இதனால் போலீசார் டிரைவரை பிடித்து வைத்துக்கொண்டு வேனை சோதனை செய்தனர்.

  அப்போது அதில் ஏராளமான பண்டல்களில் பீடி கட்டுகள் இருந்தன. அதை பிரித்து பார்த்தபோது அவை போலியான லேபிள் ஒட்டி கேரளாவிற்கு கடத்தி செல்ல கொண்டுவரப்பட்டது என்பது தெரியவந்தது.

  கைது

  இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மினிவேன் டிரைவரான செங்கோட்டை அருகே உள்ள கோட்டை வாசலை சேர்ந்த சந்தோஷ்(வயது 34) என்பவரை கைது செய்தனர்.

  வேனில் இருந்த 2,800 பீடி பண்டல்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய குருவன்கோட்டையை சேர்ந்த முருகன் என்பவரை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print