ஆலங்குளம் அருகே இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்- 174 பேர் கைது

அச்சங்குட்டம் கிராமத்தில் அரசு பள்ளி வேண்டுமென அங்குள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆலங்குளம் போலீஸ் நிலையம் அருகில் சுமார் 300 பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆலங்குளம் அருகே இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்- 174 பேர் கைது
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் அச்சங்குட்டம் கிராமத்தில் அரசு பள்ளி வேண்டுமென அங்குள்ள பொதுமக்கள் அரசுக்கு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை திடீரென ஆலங்குளம் போலீஸ் நிலையம் அருகில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமையில் ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் என சுமார் 300 பேர் திரண்டு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக கூறி போலீசார் பொதுமக்களையும், இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சாக்ரடீஸ், விசுவஹிந்து பரிசத் மாவட்ட இணைச்செயலாளர் தங்கராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட 174 பேரை கைது செய்தனர்.

இதனையொட்டி அங்கு ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பர்னபாஸ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com