ஆலங்குளம் யூனியன் சேர்மனுக்கு விருது

விருது பெரும் போட்டியில் வாடியூர், மாயமான்குறிச்சி, மேலவீராணம் ஆகிய ஊராட்சிகள் மாநில அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளனர். தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், மாயமான்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் பால்தாய் ஆகியோரிடம் சான்றிதழை வழங்கினார்.
ஆலங்குளம் யூனியன் சேர்மனுக்கு விருது
Published on

ஆலங்குளம்:

மத்திய அரசின் 2023-ம் ஆண்டிற்கான தேசிய ஊராட்சிகள் விருது பெரும் போட்டியில் பங்கு கொண்டு தமிழ்நாடு மாநில அளவில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த வாடியூர், மாயமான்குறிச்சி, மேலவீராணம் ஆகிய ஊராட்சிகள் மாநில அளவில் முதல் இடத்தையும், மாறாந்தை ஊராட்சி மாநில அளவில் 2-ம் இடத்தையும் பெற்றுள்ளனர். அதன் அடிப்படையில் மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் துறையின் சார்பாக வழங்கப்பட்ட சான்றிதழை தென்காசியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், மாயமான்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் பால்தாய் ஆகியோரிடம் வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com