கூட்டுறவு சங்கம் சார்பில் விவசாயிகள்- வியாபாரிகளுக்கு கிடங்கு பராமரித்தல் குறித்து பயிற்சி

கிடங்கு பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனம் மூலம் நடத்தப்பட்டது.
முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி கையேடு வழங்கப்பட்ட காட்சி. 
முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி கையேடு வழங்கப்பட்ட காட்சி. 
Published on

அவினாசி :

திருப்பூர் மாவட்டம் , அவினாசி வட்டாரம் நடுவச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், விவசாயிகள்- வியாபாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்களுக்கான கிடங்கு பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாம் மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனம் மூலம் நடத்தப்பட்டது. திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சொ. சீனிவாசன் முகாமை தொடங்கி வைத்தார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அழகுபாண்டியன், இயக்குனர் முனைவர் தர்மராஜ் மற்றும் கள அலுவலர் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி கையேடு மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com