என் மலர்
நீங்கள் தேடியது "விலை"
- தங்கம் கிராமுக்கு ரூ.11 அதிகரித்து ரூ.5,521 ஆகவும், சவரனுக்கு ரூ.88 அதிகரித்து ரூ.44,168 ஆகவும் உயர்ந்துள்ளது.
- வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் 79 ஆகவும், ஒரு கிலோ ரூ.79 ஆயிரம் ஆகவும் இருந்தது.
சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.5,410 ஆகவும், பவுனுக்கு ரூ.44,080 ஆகவும் இருந்தது. இன்று கிராமுக்கு ரூ.11 அதிகரித்து ரூ.5,521 ஆகவும், பவுனுக்கு ரூ.88 அதிகரித்து ரூ.44,168 ஆகவும் உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் 79 ஆகவும், ஒரு கிலோ ரூ.79 ஆயிரம் ஆகவும் இருந்தது. இன்று கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.79.30 ஆகவும், ஒரு கிலோ ரூ.79 ஆயிரத்து 300 ஆகவும் உயர்ந்துள்ளது.
- கடந்த ஆண்டு ஒரு மூட்டை நிலக்கடலை ரூ.3 ஆயிரம் வரை விற்பனையானது.
- நிலக்கடலைகளை தார்பாய்களில் கொட்டி காய வைத்து வருகின்றனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி, ஆவுடை யானூர், சிவசை லனூர், அரியப்பபுரம், திரவிய நகர் உள்ளிட்ட பகுதிகளில் விவசா யிகள் அதிக அளவில் நிலக்கட லை பயிரிட்டு இருந்தனர்.
நிலக்கடலை விளைச்சல் அடைந்துள்ளதால் அதனை எடுக்கும் பணியில் தீவிர மாக விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு தென்காசி மாவட்டத்தில் பருவ நிலை மாற்றம் மற்றும் தென்மேற்கு பருவ மழை போதிய அளவில் பெய்யாததால் கடலை விளைச்சல் குறைந்துள்ளதாகவும், வெள்ளை குட்டம் எனும் நோயும் தாக்கி உள்ளதால் நிலக்கடலை பருப்புகள் முழுமையான வளர்ச்சியை அடைய வில்லை. மேலும் கடந்த ஆண்டு ஒரு மூட்டை நிலக்கடலை ரூ.3 ஆயிரம் வரையில் விற்பனையான நிலையில் இந்த ஆண்டு ரூ.2 ஆயிரத்து 600 முதல் 2 ஆயிரத்து 800 வரையே விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
வயலில் இருந்து எடுக்கப்பட்ட நிலக்கடலைகளை வெயிலில் காய வைப்பதற்காக வயலுக்குள்ளேயே தார் பாய்களில் கொட்டி காய வைத்து வருகின்றனர். நிலக்கடலை அறுவடை செய்யப்பட்ட செடிகளை கட்டுகளாக கட்டி மாடுகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
- ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 530 ஆக உள்ளது.
- வெள்ளி கிலோவுக்கு ரூ.700 அதிகரித்து ரூ.78 ஆயிரத்து 200 ஆக உள்ளது.
சென்னை:
சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ.44 ஆயிரத்து 40-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 530 ஆக உள்ளது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.700 அதிகரித்து ரூ.78 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.78.20-க்கு விற்கிறது.
- மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை விலை திடீர் உயர்ந்துள்ளது.
- கிலோ ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மதுரை
மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை விலை திடீரென அதிகரித்துள்ளது. கிலோ 1500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் பொது மக்கள் மத்தியில் தயக்கம் ஏற்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் அனைவராலும் மிகவும் விரும்பி வாங்கப்படும் பூக்களில் மல்லிகை முதலிடம் பெற்றுள்ளது. அந்த வகையில் அவ்வப் போது மல்லிகையின் விலை வீழ்ச்சி அடைந்தாலும் பண்டிகை காலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மல்லிகை பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கமாகி விட்டது.
தற்போது சீசன் மந்தமாக இருப்பதாலும் மல்லிகை பூக்கள் வரத்து மதுரை மார்க்கெட்டில் கணிசமாக குறைந்துள்ளதாலும் விலை திடீரென அதிகரித்துள்ளது. வருகிற 18-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா என்பதாலும் பூக்களின் தேவை அதிகமாக இருப்ப தாலும் அதன் விலை உயர்வு இருமடங்காக அதிகரித்து உள்ளது.
இன்று காலை மல்லிகை பூ கிலோவுக்கு 1200 முதல் 1500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது அதுபோல முல்லை பிச்சி ஆகிய பூக்களின் விலை 700 ரூபாயாக விற்கப்பட்டது.
சம்மங்கி, அரளி 200 ரூபாய்க்கும், செவ்வந்தி 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதுபோல மற்ற பூக்களும் சற்று விலை அதிகரித்து உள்ளது.
- தக்காளி விலை அதிகரிப்பானது நாடு முழுவதும் மிகப்பெரிய அரசியல் பேசு பொருளாக மாறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.
- விவசாயிகள் அதிகளவில் தக்காளி பயிரிட்டதன் காரணமாக தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளது.
தென்காசி:
தமிழகத்தில் தக்காளி விளைச்சல் போதிய அளவில் இல்லாததால் அதன் விலையானது கடந்த 1½ மாதத்திற்கு முன்பு வரை வரலாறு காணாத அளவில் ஏற்றத்துடன் காணப்பட்டு வந்ததால் குடும்பப் பெண்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.
தக்காளி விலை அதிகரிப்பானது தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மிகப்பெரிய அரசியல் பேசு பொருளாக மாறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சந்தைகளாக விளங்கி வரும் பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை மார்க்கெட்டுகளிலும் அதன் விலையானது அதிகரித்த வண்ணமே இருந்தது. காரணம் உள்ளூர் விவசாயிகளிடம் அதிக அளவில் தக்காளி விளைச்சல் இல்லாதது முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
தக்காளி விலையேற்றத்தை அறிந்து பாவூர்சத்திரம், வீரகேரளம்புதூர், சுரண்டை, இலத்தூர், ஆலங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிட தொடங்கினர். குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் வீரகேரளம்புதூர் பகுதியில் அதிகளவில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டதன் காரணமாக தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளது.
பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் தினசரி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகளவில் இருப்பதால் அதன் விலையானது கிலோ ரூ.10 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. தொடர்ந்து தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் மேலும் இதன் விலை வீழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
எனவே விளைச்சல் அதிகம் இருக்கும் வேளாண்மை பொருட்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
- சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, பனமரத்துப்பட்டி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
- சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (கிலோ கணக்கில்) : குண்டு மல்லி - ரூ.400,
சேலம்:
சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, பனமரத்துப்பட்டி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கும், ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. வருகிற 6 ந் தேதி புதன்கிழமை கிருஷ்ண ஜெயந்தி, தொடர்ந்து 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வருவதையொட்டி சேலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு குண்டு மல்லி கிலோ ரூ.250, ரூ.300 என்கிற விலைகளில் விற்கப்பட்டது. ஆனால் இன்று குண்டு மல்லி கிலோ ரூ.400- க்கு விற்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது பண்டிகை சீசன் என்பதால் பூக்கள் விலை சற்று உயர்ந்து உள்ளது. ஒரு சில ரகங்கள் விலை குறைந்தும் உள்ளன. சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (கிலோ கணக்கில்) : குண்டு மல்லி - ரூ.400, முல்லை - ரூ.240, ஜாதி மல்லி - ரூ.260, காக்கட்டான் - ரூ.100, கலர் காக்கட்டான் - ரூ.100, மலை காக்கட்டான்- ரூ.100, சி.நந்தியா வட்டம் - ரூ.200, சம்மங்கி - ரூ.100, சாதா சம்மங்கி - ரூ.100, அரளி - ரூ.40, வெள்ளை அரளி - ரூ.60, மஞ்சள் அரளி - ரூ.60, செவ்வரளி - ரூ.80, ஐ.செவ்வரளி - ரூ.50, நந்தியா வட்டம் - ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- வெள்ளி கிலோவுக்கு ரூ.500 அதிகரித்து ரூ.80 ஆயிரமாக உள்ளது.
- ஒரு கிராம் வெள்ளி ரூ.80-க்கு விற்கிறது.
சென்னை:
சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.43 ஆயிரத்து 840க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 480-ஆக உள்ளது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.500 அதிகரித்து ரூ.80 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.80-க்கு விற்கிறது.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு 250 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ ஒரு கிலோ நேற்று ரூ. 360-க்கு விற்கப்பட்டது.
- இன்று விலை மேலும் உயர்ந்து ஒரு கிலோ மல்லிகை பூ 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனாலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முகூர்த்த நாளைெயாட்டி அதிக அளவில் மல்லிகை பூக் களை வாங்கி செல்கின்றனர்.
சேலம்:
சேலம் பூ மார்க்கெட்டுக்கு சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூர், நாமக்கல் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. இந்த பூக்களை சேலம் மற்றும் பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள். இந்த நிலையில் பூக்களின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 250 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ ஒரு கிலோ நேற்று ரூ. 360-க்கு விற்கப்பட்டது. இன்று விலை மேலும் உயர்ந்து ஒரு கிலோ மல்லிகை பூ 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனாலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முகூர்த்த நாளைெயாட்டி அதிக அளவில் மல்லிகை பூக் களை வாங்கி செல்கின்றனர். மற்ற பூக்களின் விலை விவரம் ஒரு கிலோவுக்கு வருமாறு:- முல்லை ரூ.360 ஜாதிமல்லிகை ரூ. 260, காக்கட்டான் ரூ.320, கலர் காக்கட்டான் ரூ.280 ,மலைக்காக்கட்டான் ரூ.320, அரளி ரூ.160, வெள்ளைஅரளி ரூ.260, மஞ்சள் அரளி ரூ.260, செவ்வரளி ரூ.260, ஐ.செவ்வரளி ரூ.180, நந்தியாவட்டம் ரூ.140, சி.நந்திவட்டம் ரூ.200, சம்பங்கி ரூ.200, சாதா சம்பங்கி ரூ.200.
- கொடிகுறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் 1000 ஏக்கருக்கும் மேலாக நாட்டு சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
- தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடக்கத்தில் சில நாட்கள் பெய்ததால் குண்டாறு அணை நிரம்பியது
செங்கோட்டை:
செங்கோட்டையை அடுத்துள்ள சுப்பிரமணியபுரம், கணக்கப்பிள்ளை வலசை, இலத்தூர், அச்சன்புதூர், சீவநல்லூர், கொடிகுறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் சுமார் 1000 ஏக்கருக்கும் மேலான மானாவாரி பயிரான மருத்துவ குணம் வாய்ந்த நாட்டு சோளம் சாகுபடி செய்து வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக போதிய வருமானம் கிடைக்காததால் தற்போது பெரும்பாலான பகுதிகளில் பூ மகசூல் என சொல்லபடும் கேப்பை சோளம், மொச்சை, தக்காளி வெண்டை, கத்தரி உள்ளிட்ட பயிர்களை பயிரிடாமல் தரிசாகவே போட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தென்காசி மாவட்டத்தில் தொடக்கத்தில் சில நாட்கள் பெய்ததால் குண்டாறு அணை நிரம்பியது. இதனால் செங்கோட்டை தாலுகா இலத்தூர் விவசாயிகள் தக்காளி, வெங்காயம், வாழை, நெல் மற்றும் சோளம் போன்ற வற்றை சாகுபடி செய்தனர். ஆனால் பின்னர் பருவமழை கண்ணாமூச்சி காட்டி சென்றது. இதனால் போதிய விளைச்சல் இல்லை. கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் தாங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக விவசாயி கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி விவசாயி சோழராஜன் கூறும்போது, சோளம் விதைத்து சுமார் 80, 90 நாட்கள் வரை ஏக்கருக்கு சுமார் ரூ.18 முதல் ரூ. 20 ஆயிரம் வரை செலவு செய்தோம். ஆனால் போதிய மழை இல்லாததால் விளைச்சல் இல்லாமல் நஷ்டம் அடைந்துள்ளோம். இதற்கு காரணம் முழுக்க முழுக்க நிலத்தடிநீரை மட்டுமே நம்பி உள்ளதால் கூடுதலாக செலவு செய்தும் எதிர்பார்த்த அளவு விளைச்சல் இல்லாமலும் அதற்கேற்ப விலை இருந்தும் சோளம் பயிரிட்ட விவசாயிகள் ஓவ்வொரு ஆண்டும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம் என்றார்.
- நாமக்கல் மண்டலத்தில் 1350 கோழிப்பண்ணை கள் உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 6 1/2 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
- கடந்த வாரம் ஒரு முட்டை ரூ 4.35 ஆக இருந்த நிலையில் இன்று ரூ 4.65 க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு ள்ளன.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் 1350 கோழிப்பண்ணை கள் உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 6 1/2 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இங்கு உற்பதத்தி செய்யப்படும் முட்டைகள் சத்துணவு மற்றும் உள்மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்கின்றன. வடமாநிலங்களில் உற்பத்தி குறைவால் நாமக்கல் மண்டலத்தில் இருந்து முட்டை அதிகளவில் செல்கின்றன.
இது மட்டுமின்றி துபாய், மஸ்கட், இலங்கை உள்பட பல்வேறு வெளிநா டுகளுக்கு முட்டைகள் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் ஒரு முட்டை ரூ 4.35 ஆக இருந்த நிலையில் இன்று ரூ 4.65 க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு ள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணை யாள ர்கள் சங்க தலைவர் சிங்க ராஜ் கூறியதாவது:-
நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் வடமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு அனுப்புவது அதிகரித்துள்ளது. மழைகாரணமாக நுகர்வு அதிகம் உள்ளதால் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.
- சென்னை, வேலூர் மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் சித்தூர் மாவட்டத்தில் இருந்து தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- தொடர்ந்து தக்காளி வரத்து அதிகரித்து வருவதால் குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி:
தக்காளி கடந்த வாரம் கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலத்தில் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியதால் தக்காளி விலையும் ஓரளவு குறைய தொடங்கியுள்ளது. அனந்தப்பூர் மாவட்டத்தில் இருந்து சித்தூர் சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், மொத்த சந்தைகளில் தக்காளி விலை குறைந்துள்ளது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, கடந்த 3 நாட்களில் வருகை 25 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய தக்காளி சந்தையான மதனபள்ளியில் இருந்து சந்தைகளுக்கு அதிக அளவில் தக்காளி வருவதால், தமிழ்நாடு, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் சித்தூர் மாவட்டத்திற்கு வந்து தக்காளி கொள்முதல் செய்து வருகின்றனர்.
இதனால் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மொத்த விலையில் தக்காளி கிலோ ரூ.30 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக அனந்தப்பூர் மாவட்டத்தின் அனைத்து சந்தைகளில் இருந்தும் தினமும் சுமார் 35 முதல் 40 லாரிகள் தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சென்னை, வேலூர் மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் சித்தூர் மாவட்டத்தில் இருந்து தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதனால் தமிழகத்திலும் விலை குறைய வாய்ப்புள்ளது. தற்போது தமிழகத்தில் தக்காளி கிலோ ரூ.50 முதல் 60 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து தக்காளி வரத்து அதிகரித்து வருவதால் குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.