என் மலர்

  நீங்கள் தேடியது "tea shop"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டீக்கடையில் இருந்து அதிகமான புகைமூட்டத்துடன் தீ பற்றி எரிந்துள்ளது.
  • விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நிலைய அதிகாரி சீனிவாசன் தலைமையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

  கடையநல்லூர்:

  கடையநல்லூர் சட்டமன்ற அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பழக்கடை, மரக்கடை, பஞ்சர் கடை, ஓட்டல், டீக்கடை என தொடர்ச்சியாக கடைகள் உள்ளது.

  இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு டீக்கடையில் இருந்து அதிகமான புகைமூட்டத்துடன் தீ பற்றி எரிந்துள்ளது. இதனைப்பார்த்த பொதுமக்கள் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

  உடனே விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நிலைய அதிகாரி சீனிவாசன் தலைமையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். துரிதமாக விரைந்து தீயை அணைத்ததால் அருகில் உள்ள மரக்கடை உள்பட மற்ற கடைகளுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

  தீ விபத்து குறித்து கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கயத்தாறு அருகே டீக்கடையில் 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • போலீசாருக்கு புகார் சென்றுள்ளதால் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

  கயத்தாறு:

  கயத்தாறு அருகே ராஜாபுதுக்குடி காலனி தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவர் நாற்கரச் சாலையில் நடத்தி வரும் டீக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு புகார் சென்றுள்ளது.

  அதன் பேரில் கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்–பெக்டர் ஆண்டோணிதீலிப் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.

  அங்கிருந்த 30 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கூடலூர் பகுதியில் ஓட்டல் மற்றும் டீக்கடைகளில் சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்துவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  கூடலூர்:

  தேனி அருகே கூடலூர் நகரம் மற்றும் கிராமப்புறங்களான குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூர்பாளையம், லோயர்கேம்ப் ஆகிய பகுதி மக்களுக்கு 2 தனியார் நிறுவனங்கள் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வினியோகிக்கப்படுகிறது.

  இந்த சிலிண்டர்கள் வீட்டு இணைப்பு மற்றும் வர்த்தக இணைப்பு என்று இருவகையான இணைப்புகளாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது.

  கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் வர்த்தக எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக மத்திய அரசு மானியத்துடன் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை குறிப்பாக வீட்டு இணைப்பிற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்களை முறைகேடாக பயன்படுத்துகின்றனர். இதனால் சில நேரங்களில் வீட்டு இணைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

  எனவே மானிய விலையில் வழங்கப்படும் வீட்டு இணைப்பிற்கான எரிவாயு சிலிண்டர்கள் முறையாக பயன்படுத்தப்படுகிறதா? என்று மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் ஓட்டல் மற்றும் டீக்கடைகளில் பயன்படுத்தப்படுவதை தடுக்க சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லையில் உள்ள டீ கடையில் டீ பார்சல் வழங்க ‘எவர்சில்வர்’ தூக்கு பாத்திரம் வழங்கப்படுகிறது. அடையாளம் தெரியாதவர்கள் பார்சல் டீ கேட்டால், முன் பணம் ரூ.200 கட்டி எவர்சில்வர் பாத்திரத்தை வாங்கி செல்ல வேண்டும். #Plasticban
  நெல்லை:

  பிளாஸ்டிக் தடை காரணமாக நெல்லையில் பிளாஸ்டிக்குக்கு மாற்று பொருட்கள் உபயோகம் நடைமுறைக்கு வந்தது.

  நெல்லையில் டவுன் உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள சுவீட்ஸ் கடைகளில் அல்வா மற்றும் ஜிலேபி, இனிப்புகள் அனைத்தும் பனை ஓலை பெட்டியில் வழங்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. பெரும்பாலான புரோட்டா கடையில் வாழை இலையில் பார்சல் செய்யப்பட்டு எவர்சில்வர் பேப்பரில் சால்னா வழங்கப்படுகிறது.

  பாளை வண்ணார்பேட்டையில் உள்ள டீ கடையில் டீ பார்சல் வழங்க ‘எவர்சில்வர்’ தூக்கு பாத்திரம் வழங்கப்படுகிறது.

  அடையாளம் தெரியாதவர்கள் பார்சல் டீ கேட்டால், முன் பணம் ரூ.200 கட்டி எவர்சில்வர் பாத்திரத்தை வாங்கி செல்ல வேண்டும். பாத்திரத்தை திருப்பி கொடுத்ததும் முன்பணம் ரூ.200 திருப்பிக்கொடுக்கப்படுகிறது.

  கடைகளில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் துணிப்பை கொண்டு செல்லாவிட்டால், கடைகளிலேயே துணிப்பை ரூ.5, ரூ.10 என்று இரண்டு வகைகளாக வழங்கப்படுகிறது.

  ஆனாலும் சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கலந்து செய்யப்படும் பைகளை தொடர்ந்து உபயோகப்படுத்தி வருகிறார்கள். #Plasticban

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரக்கோணத்தில் டீ கடைக்குள் கார் புகுந்த விபத்தில் பெண் ஒருவர் பலியானார். 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

  அரக்கோணம்:

  அரக்கோணம் காந்திநகரை சேர்ந்தவர் ராணி (வயது 40). இவர் இன்று காலையில், வழக்கம்போல் கூலி வேலைக்கு செல்ல சில தொழிலாளர்களுடன் அரக்கோணம் சுவால்பேட்டை மேட்டுத்தெருவில் உள்ள ஜானி என்பவரின் டீக்கடை முன்பு நின்றிருந்தார்.

  அப்போது, திருத்தணி நோக்கி வேகமாக சென்ற கார் திடீரென நிலைதடுமாறி டீக்கடைக்குள் புகுந்தது. அங்கிருந்த பொதுமக்கள் பலரின் மீது கார் பயங்கரமாக மோதி நின்றது. இதில் பலத்த காயமடைந்த ராணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.

  மேலும் அரக்கோணம் சிறுணமல்லியை சேர்ந்த சந்திரன், காந்தி நகரை ஜீவ ரத்தினம், நெமிலியை சேர்ந்த ராஜவேலு மற்றும் மங்கம்மாபேட்டையை சேர்ந்த சேகர் ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர்.

  உயிருக்கு போராடிய அவர்களை அங்குள்ளவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக சேகரை தவிர மற்ற 3 பேரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப் பட்டனர்.

  அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த கார் டிரைவர் சீனிவாசனை (48) கைது செய்தனர்.

  காருக்குள் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அவரது மனைவி, குழந்தை உள்பட 4 பேர் இருந்தனர். இவர்கள், அரக்கோணம் நேதாஜி நகரில் நடந்த உறவினரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வந்தபோது கார் விபத்தில் சிக்கியது. விபத்தில் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பள்ளிபாளையத்தில் டீக்கடை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன.
  பள்ளிபாளையம்:

  பள்ளிபாளையத்தில் பாலம் ரோட்டில் ஸ்ரீபுற்றுமாரியம்மன் கோவில் அருகில் மணி என்பவர் டீக்கடை வைத்து உள்ளார். நேற்று முன்தினம் இரவு டீக்கடையை மூடி விட்டு அவர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் இரவு 9 மணியளவில் அவரது டீக்கடை திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.

  அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து டீக்கடை உரிமையாளர் மணியிடம் தெரிவித்தனர். இதை அறிந்து அவர் பதற்றத்தோடு சம்பவ இடத்துக்கு ஓடி வந்தார். அங்கே டீக்கடை தீயில் எரிந்து கொண்டு இருந்தது. டீக்கடையை ஒட்டி இருந்த பெட்டிக்கடையும் தீயில் எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் மணி மற்றும் அக்கம், பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

  தகவல் அறிந்த ஈரோடு தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் டீக்கடை எரிந்தது. அதில் இருந்த தின்பண்டங்கள், அலமாரி, மினிவிசிறி மற்றும் கடை அருகே இருந்த இரும்பு கடையின் முன்கூரையும் தீப்பிடித்து எரிந்தது. இதன் சேத மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

  தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு படை வீரர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  ×