என்னடா கேட்ட.. டீ குடிக்க கூப்பிட்டவரின் மண்டையை பீர் பாட்டிலால் பொளந்த கணவன் - மனைவி

டேம்ஸ் சாலை சந்திப்பில் டீ குடித்துக் கொண்டிருந்தார். சாலையில் கிடந்த காலி பீர் பாட்டிலை எடுத்து ராகுலின் தலையில் அடித்துள்ளனர்.
என்னடா கேட்ட.. டீ குடிக்க கூப்பிட்டவரின்  மண்டையை பீர் பாட்டிலால் பொளந்த கணவன் - மனைவி
Published on

சென்னை எழும்பூர் அருகே உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் டீ குடிக்க அழைத்த நபரை தாக்கிய கணவன்-மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெரு ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் (வயது 20) என்பவர் நேற்று முன் தினம் மதியம் டேம்ஸ் சாலை சந்திப்பில் டீ குடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாகப் பிரபு என்பவரும் அவரது மனைவி காயத்திரியும் வந்துள்ளனர். இவர்கள் ராகுலின் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. எனவே பிரபுவையும், காயத்திரியையும் டீ குடிக்க அழைத்துள்ளார் ராகுல். அப்போது கணவன் மனைவி இருவரும், "நாங்கள் என்ன பிச்சைக்காரர்களா? ஓசியில் டீ குடிக்க" என்று ராகுலிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் சாலையில் கிடந்த காலி பீர் பாட்டிலை எடுத்து ராகுலின் தலையில் அடித்துள்ளனர். இதில் ரத்தக்காயம் ஏற்பட்டு ராகுல் நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதற்கிடையே இந்த தாக்குதல் தொடர்பாக ராகுல் அளித்த புகாரின் பேரில் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்கின் கீழ் பிரபு, காயத்ரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். ராகுலுக்கும் இவர்களுக்கும் ஏற்கனவே முன்பகை இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் போலீஸ் விசாரணைக்கு பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com