என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jobfair"

    • இது கனடாவின் யதார்த்தம். நீங்கள் இதற்குத் தயாராக இருந்தால் கனடாவுக்கு வாருங்கள்.
    • இல்லையெனில் இந்தியா சிறந்தது என்பது புரியும் என வீடியோவில் தெரிவித்துள்ளார்.

    ஒட்டாவா:

    கனடாவில் சாதாரண வேலைக்கு கூட நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கும் வீடியோவை அங்குள்ள இந்திய பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

    இந்த வீடியோ கனடாவில் வேலை நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் வேலையின்மையை எடுத்துக்காட்டுகிறது. அந்த வீடியோவில் அந்தப் பெண் கூறியிருப்பதாவது:

    வெளிநாடுகளில் வாழ்க்கை என்பது பலருக்கும் கனவாகவே இருக்கும். ஆனால் சில நேரங்களில் அது இப்படி வெறும் நீண்ட வரிசையாகக்கூட இருக்கும்.

    இது சர்வதேச மாணவர்களிடையே வேலைவாய்ப்புக்கான கடுமையான போட்டியை எடுத்துக்காட்டுகிறது. வெளிநாடுகள் ஏராளமான வேலைவாய்ப்புகளையும் சிறந்த வாழ்க்கை முறையையும் உத்தரவாதம் அளிக்கின்றன என்று இந்தியர் பலர் பொதுவான நினைக்கிறார்கள்.

    இங்குள்ள நிலைமையை பார்த்தால் உங்களுக்கே புரியும், வெளிநாடு சென்றுள்ளவர்கள் வேலைக்கு எப்படி காத்திருக்கிறார்கள் என்று தெரியும்.

    இது கனடாவின் யதார்த்தம். நீங்கள் இதற்குத் தயாராக இருந்தால், கனடாவுக்கு வாருங்கள் ,இல்லையெனில் இந்தியா சிறந்தது என்பது புரியும் என தெரிவித்துள்ளார்.

    கனடாவின் பல நகரங்களிலும் இதே நிலைமை இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


    மத்தியபிரதேசத்தில் உள்ள நிறுவனங்கள் அம்மாநிலத்தின் படித்த இளைஞர்களை 70% கட்டாயம் பணியில் அமர்த்த வேண்டும் என முதல் மந்திரி உத்தரவிட்டுள்ளார். #MPGovernment #Localyouthjob #KamalNath
    போபால்:

    மத்தியபிரதேச மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில்  முதல் மந்திரி கமல் நாத் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில், நேற்று அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அம்மாநிலத்தின் அனைத்து தொழில் நிறுவனங்களும் அந்தந்த பகுதியில் இருக்கும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு 70% பணி கட்டாயம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    புதிய தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசின் சலுகைகளை பெற நினைக்கும் அனைத்து நிறுவனங்களும் இதனை பின்பற்ற வேண்டும் என கூறினார். இதனையடுத்து அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைகளை வேண்டாம் என்று கூறி எந்தவொரு வேண்டுகோளும்  வராததால், புதிய உத்தரவின்படி அனைத்து தொழில் நிறுவனங்களும் விதிமுறையை பின்பற்ற வேண்டும் என தொழில் துறையின் முதன்மை செயலாளர் முகமது சுலைமான் தெரிவித்தார்.

    முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான புதிய தொழில் கொள்கை மற்றும் புதிய வேலைவாய்ப்பு குறித்து கமல் நாத் கடந்த டிசம்பரில் ஏற்கனவே அறிவித்த நிலையில், தற்போது நடைமுறைபடுத்தப்பட உள்ளது. வரும் பிப்ரவரி 19-ம் தேதி இந்த புதிய நடைமுறையின்படி தொழில்துறைகளுடன் கலந்து ஆலோசனை நடத்திய பின்னர் வேலையில்லாத படித்த இளைஞர்களுக்கு பணி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

    மத்தியபிரதேச மாநில அரசு தொழில் நிறுவனங்கள் அமைக்க அனைத்து உதவிகளையும் முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது. மேலும்  ‘இன்வெஸ்ட் மத்தியபிரதேஷ்’ உச்சிமாநாடு இந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடக்க உள்ளது.  இந்த மாநாட்டின்போது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என தலைமை செயலாளர் மோகந்தி தெரிவித்துள்ளார்.

    புதிய தொழில் கொள்கையின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு பல்வேறு பயிற்சி வகுப்புகளும், வேலைவாய்ப்புக்கான முகாம்களும் நடத்தப்பட்டு, உதவித் தொகை வழங்கப்படும். பின்னர் 70 சதவீத வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் வேலை வழங்கப்படும். #MPGovernment #Localyouthjob #KamalNath 
    ×