search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட ஊராட்சி குழு தலைவர் இல்ல திருமண வரவேற்பில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
    X

    மணமக்களை முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்தினார். அருகில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மணமகளின் தந்தையும், சிவகங்கை மாவட்ட ஊராட்சி குழுத்தலைவருமான பொன்மணி பாஸ்கரன் உள்ளார்.

    மாவட்ட ஊராட்சி குழு தலைவர் இல்ல திருமண வரவேற்பில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

    • மாவட்ட ஊராட்சி குழு தலைவர் இல்ல திருமண வரவேற்பில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
    • முன்னாள் அமைச்சர்க ளுக்கும், நிர்வாகிகளுக்கும் பொன்மணி பாஸ்கரன் நன்றி கூறினார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ் புதூர் ஒன்றியம் பொன்னா டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன்.இவர் அ.திமு.க. மாவட்ட பேரவை துணைச் செயலாள ராகவும் பதவி வகித்து வருகிறார்.

    இவரது மகள் ஹரிப்பிரியாவுக்கும், மணமகன் ஜெயக்கு மாருக்கும் கடந்த பிப்ரவரி 12-ந் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. அதனைத் தொடர்ந்து தனது சொந்த கிராமத்தில் பிப்ரவரி 26-ந் தேதி நடந்த வரவேற்பு விழாவில் பங்கேற்க அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், முன்னாள் அமைச் சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    அந்த சமயத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரம் நடந்ததால் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மாவட்ட செயலாளர் பி.ஆர். செந்தில்நாதன் மற்றும் நிர்வாகிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.

    கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த எடப்பாடி பழனிச்சாமி குன்னத்தூரில் உள்ள ஓ.வி.எம். கார்டனில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு பந்தலில் மாவட்ட குழு சேர்மன் முன்னிலையில் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினார்.

    இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி, பாஸ்கரன், விஜய பாஸ்கர், செல்லூர் ராஜூ, நத்தம் விசுவநாதன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட ஒன்றிய, பேரூர், நிர்வாகிகள் உறுப்பி னர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மண மக்களை வாழ்த்திய எடப்பாடி பழனிச்சாமிக்கும், முன்னாள் அமைச்சர்க ளுக்கும், நிர்வாகிகளுக்கும் பொன்மணி பாஸ்கரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×