search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "edapadi pazhanisamy"

    • தங்கத்தின் விலையை குறைப்பேன் என வாக்குறுதி கொடுக்க திமுக தயாரா ?
    • தேமுதிக நியாயத்திற்கும், தமர்மத்திற்கும் துணை நிற்கும்.

    திருச்சியில் அ.தி.மு.கவின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தினார்.

    இந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட அதிமுக கூட்டணி தலைவர்களும் பங்கேற்றனர்.

    அப்போது, விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.

    அப்போது, கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

    அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி என்பது வெற்றிக் கூட்டணி. அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலிலும் தொடரும். உறுதியாக, இறுதியாக என்றைக்கும் எங்கள் கூட்டணி தொடரும்.

    முதலமைச்சராக இருந்த போது, எடப்பாடி பழனிசாமி கொரோனா தொற்று, வெள்ளம் போன்ற சூழ்நிலைகளை சிறப்பாக கையாண்டார்.

    சென்னையில் கடந்த ஆண்டு மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, தி.மு.க. அரசு அதை சிறப்பாக கையாளவில்லை. நீட் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.கவால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது.

    தங்கத்தின் விலையை குறைப்பேன் என வாக்குறுதி கொடுக்க திமுக தயாரா ?

    தேமுதிக நியாயத்திற்கும், தமர்மத்திற்கும் துணை நிற்கும்.

    இரண்டு நாட்கள் வரை கூட்டணியில் இருக்கிறோம் என நாடகம் நடத்தியவர்கள், தங்களுக்கு வேண்டியது கிடைத்தவுடன் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என கூடாரத்தையே காலி செய்து வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்கள்.

    ஆனால் தேமுதிக அப்படி கிடையாது. துளசி வாசம் மாறும், தவசி வார்த்தை மாறாது. துண்ட காணோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் விடியவிடிய மழை பெய்து வருகிறது.
    • சாலைகளில் சூழ்ந்துள்ள மழைநீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தலைநகர் சென்னை தொடங்கி குமரி வரை பரவலாக மழை கொட்டி வருகிறது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் விடியவிடிய மழை பெய்து வருகிறது.

    இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகர் பொறுத்தவரை முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொண்டாலும் சில இடங்களில் இன்னமும் தண்ணீர் தேங்கி நிற்பதை பார்க்க முடிகிறது.

    இவற்றை மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த பணிகளை மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை, ஆலந்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் பார்வையிட உள்ளார்.

    • எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை தவிடு பொடியாக்கி மீண்டும் ஆட்சியமைப்போம்.
    • பாராளுமன்ற தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து அமோக வெற்றி பெறும்.

    நாமக்கல்லில் பொம்மைக்குட்டைமேட்டில் அதிமுக பொன்விழா ஆண்டு நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி பொது மக்களிடம் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    அதிமுகவை முடக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறவில்லை. அதிமுகவில் பி டீம் ஒன்றை உருவாக்கி பிளவை ஏற்படுத்தி திமுக நினைக்கிறது. அதிமுக உடையவில்லை ஒன்றாக இருக்கிறது என்பதை நாமக்கல் பொதுக்கூட்டம் காட்டுகிறது.

    எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை தவிடு பொடியாக்கி மீண்டும் ஆட்சியமைப்போம்.

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து அமோக வெற்றி பெறும்.

    அரசியல் ரீதியாக நம்மை எதிர்கொள்ள முடியாத திமுக கொல்லைப்புறமாக வந்து செயல்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சட்டசபை தொடங்குவதற்கு முன்பு சபாநாயகரை சந்திக்க பழனிசாமி தரப்பை சேர்ந்த 62 அதிமுக எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளனர்.
    • பன்னீர் செல்வத்திற்குப் பதில் உதயகுமார் நியமனத்தை அங்கீகரிக்க கோரிக்கை.

    தமிழக சட்டசபை கூட்டம் இன்று 10 மணியளவில் நடைபெறுகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகரை சந்திக்க பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் தலைமை செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

    சட்டசபை தொடங்குவதற்கு முன்பு சபாநாயகரை சந்திக்க பழனிசாமி தரப்பை சேர்ந்த 62 அதிமுக எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளனர்.

    இந்த சந்திப்பில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக பன்னீர் செல்வத்திற்குப் பதில் உதயகுமார் நியமனத்தை அங்கீகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது தொடர்பாக பரிசீலிக்க வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் விசாரணையை ஒத்திவைத்தனர்.
    • ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் ஆஜராக அவகாசம்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இதில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்ககோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், ஜூன் 23-ந்தேிக்கு முன்பு இருந்த நிலையே அ.தி.மு.க.வில் தொடர வேண்டும். கட்சி விதிகளின்படி 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனுதாக்கல் செய்தார்.

    இந்த நிலையில் தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட உத்தரவு நகல் இல்லாமல் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வக்கீல் விஜய் நாராயணன் ஆஜராகி மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று வாதிட்டார்.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மேல் முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உத்தரவிட்டனர்.

    அதன்படி இந்த மேல் முறையீட்டு மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

    அதற்கு நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு வழக்கில், இடைக்கால மனுவை விசாரித்து, தடை எதையும் பிறப்பிக்க தேவையில்லை. வழக்கின் இறுதி விசாரணைக்காக வருகிற 25-ந் தேதிக்கு (வியாழக்கிழமை) தள்ளிவைக்கிறோம்" என்று உத்தரவிட்டனர்.

    ஓ.பன்னீர்செல்வம் வக்கீலுக்கு அவகாசம் வழங்கி இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென லேசான மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு.
    • போராட்டத்தின்போது வெயிலால் எடப்பாடி பழனிசாமிக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

    மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென லேசான மயக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தின்போது வெயிலால் ஒரு மணி நேரம் நின்றபடி தொடர்ந்து பேசிய நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு தண்ணீர் கொடுத்து மேடையில் அதிமுகவினர் அமர வைத்தனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி வீடு திரும்பினார்.

    • சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜரானார்.
    • முறையீட்டை ஏற்று நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி அனுமதி.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

    மோதல் சம்பவத்தையடுத்து கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சட்டம் ஒழுங்கு தொடர்பாக, ராயப்பேட்டை காவல் நிலையத்தில், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆலோசனை நடத்தினர். அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்க முடிவு செய்தனர். அதன்பின்னர் கட்சி அலுவலகத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

    இந்நிலையில், அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முறையீடு செய்துள்ளார்.

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி முறையீட்டுள்ளார்.

    அதிமுக அலுவலக சீலை அகற்றும் முறையீட்டை ஏற்று நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

    ×