என் மலர்
நீங்கள் தேடியது "reception"
- அதிகாலை 5.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக அகமதாபாத்துக்கு சென்று அடையும்.
- அதிகாலை திருச்சியில் இருந்து புறப்பட்ட ரெயில் காலை 6.30 மணிக்கு தஞ்சாவூர் ரெயில் நிலையம் வந்தது.
தஞ்சாவூர்:
அகமதாபாத்- திருச்சி இடையே வாராந்திர ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி கடந்த 27-ந் தேதி முதல் இந்த ரெயில் சேவை தொடங்கியது.
அதாவது வாரந்தோறும் வியாழக்கிழமையில் காலை 9.30 மணிக்கு அகமதாபாத்தில் புறப்பட்டு ரேணிகுண்டா, சென்னை, சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு சனிக்கிழமை அதிகாலை 3.15 மணிக்கு சென்று அடையும்.
மறுமார்க்கத்தில் ஞாயிற்றுகிழமை அதிகாலை 5.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர், கும்பகோணம், சென்னை வழியாக மறுநாள் இரவு 9.15 மணிக்கு அகமதாபாத்துக்கு சென்று அடையும்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்க திருச்சியில் இருந்து புறப்பட்ட ரெயில் காலை 6.30 மணிக்க தஞ்சாவூர் ரெயில் நிலையம் வந்தது.
ஒரிரு நிமிடங்கள் இந்த ரெயில் நின்றது.
அப்போது காவிரி டெல்டா ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்க தலைவர் அய்யனாபுரம் நடராஜன், செயலாளர் வக்கீல் ஜீவக்குமார் ஆகியோர் தலைமையில் ரெயிலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர்ரெயில்ஓட்டு னருக்க சால்வை அணிவிக்க ப்பட்டுகவுரவிக்கப்பட்டார்.
பயணிகளுக்குஇனிப்பு வழங்கி கொண்டாட ப்பட்டது.
இது குறித்து செயலாளர் வக்கீல் ஜீவக்குமார் கூறும்போது;-
அகமதாபாத்- திருச்சி இடையே இயக்கப்படும் வாராந்திர ரெயிலை வரவேற்கிறோம்.
இந்த ரெயிலில் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. பயணிகள் மத்தியில் வரவேற்பு உள்ளது.
எனவே வாராந்திர ரெயிலை தினமும் இயக்கும் ரெயிலாக மாற்ற வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் வழக்கறி ஞர்கள் உமர்முக்தார், பைசல் அகமது, கண்ணன், பேராசிரியர்கள் திருமேணி, செல்வகணேசன் மற்றும் காஜாமொய்தீன், கூத்தூர் ரங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சதய விழா தஞ்சை பெரிய கோவிலில் இன்று தொடங்கி நாளை வரை சதய விழா தொடங்கியது.
- பல்வேறு கலைநடனங்கள், கலை நாட்டியங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
தஞ்சாவூர்:
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் பிறந்தநாள் விழா ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் சதய நட்சத்திரம் அன்று கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவலால் 1 நாள் மட்டுமே சதய விழா கொண்டாடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் வெகுவாக குறைந்ததால் வழக்கம்போல் 2 நாள் விழாவாக நடைபெறுகிறது.
அதன்படி இந்த ஆண்டு சதய விழா தஞ்சை பெரிய கோவிலில் இன்று தொடங்கியது. நாளை வரை சதய விழா நடைபெற உள்ளது.
விழாவின் முதல் நாளான இன்று காலை 9 மணிக்கு இறை வணக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. முன்னதாக பெரியநாயகி அம்மனுக்கு சந்தனம் காப்பு அலங்காரமும், பெருவுடையாருக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.
காலை 9.15 மணிக்கு டி.கே.எஸ். பத்மநாபன் குழுவினரின் மங்கள இசை நடைபெற்றது . தொடர்ந்து களிமேடு அப்பர் பேரவையின் திருமுறை அரங்கம் நடைபெற்றது .
இதையடுத்து மேடை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சிக்கு சதய விழா குழு தலைவர் து.செல்வம் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசினார். போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, அரண்மனை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, சதய விழா குழு துணை தலைவர் மேத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பலர் கலந்துகொண்டு பேசினர்.
இதையடுத்து கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் தொடக்க உரையாற்றினார். தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினார். திருக்கோவில் தேவார இன்னிசை முழக்கம் என்ற தலைப்பில் திருவையாறு அரசர் கல்லூரி முதல்வர் சண்முக செல்வகணபதி பேசினார். இதேபோல் ராஜராஜன் பெற்ற வெற்றிகள் என்ற தலைப்பில் தமிழ் வேள் உமாமகேசுவரனார் கல்லூரி பேராசிரியர் இளமுருகன், மாமன்னரின் சமயபொறை என்ற தலைப்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் சிவபெருமான், செம்பியன் மாதேவி குந்தவை நாச்சியார் வளர்ப்பில் அருண்மொழித்தேவன் என்ற தலைப்பில் ந.மு.வே. நாட்டார் கல்லூரி குழு உறுப்பினர் விடுதலை வேந்தன், தஞ்சை ராஜராஜேஸ்வரமும் திருவிசை பாவும் என்ற தலைப்பில் சென்னை புலவர் பிரபாகரமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இன்று மாலையில் திருமுறை பண்ணிசை, திருமுறையின் திரு நடனம், பரதநாட்டியம், நாதசங்கமம், வயலின் இசை நிகழ்ச்சி , கவியரங்கம், நகைச்சுவை சிந்தனை பாட்டு பட்டிமன்றம் ஆகியவை நடைபெறுகிறது.
இன்று நடந்த முதல் நாள் விழாவில் சதய விழா குழு உறுப்பினர் இறைவன், கோவில் உதவி ஆணையர் கவிதா, மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் , தாசில்தார் சக்திவேல் மற்றும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.
தொடர்ந்து நாளை இரண்டாம் நாள் விழா நடைபெற உள்ளது. நாளை காலை கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து மாமன்னர் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதேபோல் பல்வேறு கட்சியினர், இயக்கத்தினர் மாலை அணிவிக்கின்றனர். பின்னர் திருமுறை திருவீதி உலா, பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடைபெறும்.
இதையடுத்து பள்ளி மாணவ- மாணவிகளுக்காக நடத்தப்பட்ட தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு மேடை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
- உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது குறித்து தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை நடந்தது.
- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் தி.மு.க. ஒன்றியம் மற்றும் பேரூர் நிர்வாகிகள் இந்த கூட்டம் நடைபெற்றது.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் தி.மு.க. ஒன்றியம் மற்றும் பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன் ஆகியோர் தலைமை தாங்கினர். பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஒன்றிய அவை தலைவர் நடராஜன், பேரூர் செயலாளர்கள் ரகுபதி, மனோகரவேல் பாண்டியன், பேரூராட்சி சேர்மன் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி துணை சேர்மன் சுவாமிநாதன் வரவேற்று பேசினார்.
இந்த கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்க மதுரை வருவதையொட்டி அவருக்கு அலங்காநல்லூர் ஒன்றியம் மற்றும் பேரூர் தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய சேர்மன் பஞ்சு, துணை சேர்மன் சங்கீதா மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞரணி சந்தனகருப்பு, மாணவரணி பிரதாப் ஆகியோர் நன்றி கூறினர்.
- கீழடிக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராமிய கலைநிகழ்ச்சியுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் மதுரை-ராமேசுவரம் சாலையில் உள்ள கீழடியில் உலகதரம் வாய்ந்த சுமார் ரூ.18.43 கோடி செலவில் அமைக்கப்பட்ட அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகம் திறப்பு விழா நடந்தது.
இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். தனது செல்போனில் செல்பி படம் எடுத்து கொண்டார்.
முன்னதாக கீழடி வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் நிகழ்ச்சியில் நான்கு வழிச்சாலையின் இருபுறமும் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில் சிவகங்கை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
கீழடி கிராமத்துக்கு செல்லும் வழியில் கிராமிய பாடல்கள் பாடியும், கரகம் ஆடியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார், மாவட்ட துணை செயலாளர்- திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை முன்னாள் எம்.எல்.ஏ.- நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, இளையான்குடி முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜிமுதீன், மானாமதுரை ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர் வழக்கறிஞர் அண்ணாதுரை, நகராட்சி, யூனியன் துணைத் தலைவர்கள் பாலசுந்தரம், முத்துசாமி, கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கட சுப்பிரமணியன் மற்றும் தி.மு.க. தொண்டர்கள், கிராம மக்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.
- மாவட்ட ஊராட்சி குழு தலைவர் இல்ல திருமண வரவேற்பில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
- முன்னாள் அமைச்சர்க ளுக்கும், நிர்வாகிகளுக்கும் பொன்மணி பாஸ்கரன் நன்றி கூறினார்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ் புதூர் ஒன்றியம் பொன்னா டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன்.இவர் அ.திமு.க. மாவட்ட பேரவை துணைச் செயலாள ராகவும் பதவி வகித்து வருகிறார்.
இவரது மகள் ஹரிப்பிரியாவுக்கும், மணமகன் ஜெயக்கு மாருக்கும் கடந்த பிப்ரவரி 12-ந் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. அதனைத் தொடர்ந்து தனது சொந்த கிராமத்தில் பிப்ரவரி 26-ந் தேதி நடந்த வரவேற்பு விழாவில் பங்கேற்க அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், முன்னாள் அமைச் சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அந்த சமயத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரம் நடந்ததால் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மாவட்ட செயலாளர் பி.ஆர். செந்தில்நாதன் மற்றும் நிர்வாகிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.
கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த எடப்பாடி பழனிச்சாமி குன்னத்தூரில் உள்ள ஓ.வி.எம். கார்டனில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு பந்தலில் மாவட்ட குழு சேர்மன் முன்னிலையில் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினார்.
இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி, பாஸ்கரன், விஜய பாஸ்கர், செல்லூர் ராஜூ, நத்தம் விசுவநாதன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட ஒன்றிய, பேரூர், நிர்வாகிகள் உறுப்பி னர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மண மக்களை வாழ்த்திய எடப்பாடி பழனிச்சாமிக்கும், முன்னாள் அமைச்சர்க ளுக்கும், நிர்வாகிகளுக்கும் பொன்மணி பாஸ்கரன் நன்றி கூறினார்.
- சென்னை - முதல் குமரி வரை பெண் போலீசார் சைக்கிள் பேரணி
- திருமாந்துறை சுங்கச்சாவடியில் வரவேற்பு
பெரம்பலூர்,
தமிழ்நாடு காவல்துறையில் பெண்களின் 50-வது ஆண்டு பொன் விழாவை கொண்டாடும் விதமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரியை நோக்கி 100-க்கும் மேற்பட்ட பெண் போலீசார் சைக்கிளில் பேரணியாக புறப்பட்டனர். நேற்று மாலை பெரம்பலூர் மாவட்டத்துக்கு வருகை தந்த அவர்களை திருமாந்துறை சுங்கச்சாவடியில் மங்களமேடு போலீசார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவர்கள் அருகே உள்ள தனியார் பள்ளியில் இரவு தங்கி ஓய்வெடுத்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவர்கள் திருச்சிக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
- டெல்லி போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய விவசாய சங்க தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
- பிரதமரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பாராளுமன்றம் நோக்கி நீதி கேட்டு நெடும் பயணம் சென்றனர்.
சோழவந்தான்
டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் பிரதமரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பாராளுமன்றம் நோக்கி நீதி கேட்டு நெடும் பயணம் சென்றனர். இதற்கு விவசாயிகள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் கலந்துகொண்ட சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள முதலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்க மாநில கவுரவத் தலைவர் எம்.பி. ராமன் கிராமத்திற்கு திரும்பினார். அவரை முதலைக்குளம் கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் வரவேற்றனர். இதில் திருமங்கலம் பாசன கால்வாய் உறுப்பினர்கள் ஜெயக்குமார், சிவஅறிவழகன், ம.தி.மு.க. அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் முனியாண்டி, அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் ராமன், கிளைச்செயலாளர் தவமணி, தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மூக்கன், தொழிலதிபர் பால்பாண்டி, ஊராட்சி செயலாளர் பாண்டி, காங்கிரஸ் நிர்வாகி செல்லசாமி, விவசாயிகள் பால்சாமி, பாண்டி, ஒச்சு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இருப்பிடம் திரும்பிய வீர அழகருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
- சுவாமி தூக்கி வந்த பக்தர்களுக்கு உணவு வழங்கி உபசரித்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகைஆற்று தென்கிழக்கு பகுதியில் வீர அழகர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறும். கடந்த 1-ந்தேதி தொடங்கிய திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் 5-ந்தேதி வீர அழகர் இறங்கினார்.
அதைதொடர்ந்து கிராமத்தார் மண்டகப்படி, கோர்ட்டார் மண்டகப்படி, கடைதெரு மண்டகப் படிகளில் எழுந்தருளி கருட வாகனம் மற்றும் பல்லக்கில் மானாமதுரையில் உள்ள பல்வேறு பகுதிக்கு சென்று வீர அழகர் கோவிலுக்கு திரும்பினார்.
இந்த விழாவில் முதல்நாளில் வீர அழகர் நகராட்சி அலுவலகம், ஆற்றில் இறங்குவதற்கு முன்பு போலீஸ் நிலையம், ஆற்றில் இறங்கும் அன்று சார்-குற்றவியல் நீதிமன்றம் சார்பில் நடைபெறும் கோர்ட்டார் மண்டகப்படி, அதை தொடர்ந்து மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மெயின் கடைவீதியில் எழுந்தருளும் நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
அரசுஅலுவலகத்திற்கு வீரஅழகர் வரும்போது நகராட்சி தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்துத்துறை அதிகாரிகள் வீர அழகரை வணங்கி வரவேற்பு கொடுத்தனர். சுவாமி தூக்கி வந்த பக்தர்களுக்கு உணவு வழங்கி உபசரித்தனர்.
- தமிழகத்தில் அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன.
- இவற்றில் தொழில்நுட்ப பட்டய படிப்புகளுக்கு 19120 இடங்கள் உள்ளன.
சேலம்:
தமிழகத்தில் அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில்நுட்ப பட்டய படிப்புகளுக்கு 19120 இடங்கள் உள்ளன.
விண்ணப்பதிவு தொடங்கியது
இதில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர படிப்புக ளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணைய வழியில் நேற்று தொடங்கியது.
இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 நிர்ணயிக்கப்ப ட்டுள்ளது. எஸ்.சி.,எஸ்.டி. பிரிவின ருக்கு கட்டண மில்லை. விருப்பமுள்ள வர்கள் http://www.tnpoly.in/ எனும் வலைதளம் வரியாக வருகிற ஜூன் 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி பெற்ற மாணவர்களுக்கான தர வரிசைப் பட்டியல், அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரி களில் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும்.
கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணைய தளத்தில் அறிந்து கொள்ள லாம் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
- (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் தமிழக நீர்வள துறையில் உள்ள 40 பணியிடங்க ளுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- இதில் நீர்வள ஆதார துறையில் உதவியாளர் ஜியால ஜிஸ்ட்-11 பேர், கனிமம் துறையில் உதவியாளர் ஜியாலஜிஸ்ட்- 29 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சேலம்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் தமிழக நீர்வள துறையில் உள்ள 40 பணியிடங்க ளுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் நீர்வள ஆதார துறையில் உதவியாளர் ஜியால ஜிஸ்ட்-11 பேர், கனிமம் துறையில் உதவியாளர் ஜியாலஜிஸ்ட்- 29 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி ஜியாலஜி, அப்ளைடு ஜியாலஜி, ைஹட்ரோ ஜியாலஜி பிரிவில் எம்.எஸ்.சி. படித்து முடித்திருக்க வேண்டும். வயது 1.7.2023 அடிப்ப டையில் பொதுப்பிரிவினர் 18-32 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது உச்சவரம்பு இல்லை. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் ேதர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசிநாள் வருகிற 23-ந்தேதி ஆகும். விண்ணப்பதாரர்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
- பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5 வரை மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது.
பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஷாஜஹான் பானு, ஜவஹர் அலிகான் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ரோட்டரி சங்க தலைவர் திருநாவுக்கரசு, வார்டு உறுப்பினர்கள் சல்மா பீவி, மஹ்ஜபின் சல்மா பீவி முன்னிலை வகித்தனர்.
பெற்றோர் ஆசிரிய கழகத் தலைவர் ஜெயந்தன் அனைவரையும் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
பழைய மாணவர்கள் கல்வியின் முக்கியத்த்துவம் குறித்த வாசகம் அடங்கிய பதாதைகளை ஏந்தி ஊர்வலம் வந்தனர். பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ரம்யா நன்றி கூறினார்.
- 500 மதுக்கடைகளை மூடும் முடிவுக்கு மனிதநேய மக்கள் கட்சி வரவேற்றுள்ளது.
- முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
ராமநாதபுரம்
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எம். எல். ஏ. கூறியதாவது:-
தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்படும் என சட்டமன்றப் பேரவை யில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்தார். அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 500 மது கடைகளைக் கண்டறிந்து அதனை மூட அரசாணை வெளியிடப்பட்டது.
அதன் அடிப்படையில் 500 மதுக்கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
தற்போது மூடப்பட்டுள்ள 500 மது கடைகள் மட்டுமின்றி தமிழகம் மதுவில்லா மாநிலமாகத் திகழ முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுக்கடைகள் மூடப்படும் பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்டால் அந்த விற்பனையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.