தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது குறித்து தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை நடந்தது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் தி.மு.க. ஒன்றியம் மற்றும் பேரூர் நிர்வாகிகள் இந்த கூட்டம் நடைபெற்றது.
தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Published on

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் தி.மு.க. ஒன்றியம் மற்றும் பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன் ஆகியோர் தலைமை தாங்கினர். பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஒன்றிய அவை தலைவர் நடராஜன், பேரூர் செயலாளர்கள் ரகுபதி, மனோகரவேல் பாண்டியன், பேரூராட்சி சேர்மன் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி துணை சேர்மன் சுவாமிநாதன் வரவேற்று பேசினார்.

இந்த கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்க மதுரை வருவதையொட்டி அவருக்கு அலங்காநல்லூர் ஒன்றியம் மற்றும் பேரூர் தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய சேர்மன் பஞ்சு, துணை சேர்மன் சங்கீதா மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞரணி சந்தனகருப்பு, மாணவரணி பிரதாப் ஆகியோர் நன்றி கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com