என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2-வுக்கு இணையான தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்
  X

  விருதுநகர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன்,

  எம்.எல்.ஏ.க்கள் அசோகன், ரகுராமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

  எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2-வுக்கு இணையான தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2-வுக்கு இணையான தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்.
  • விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

  விருதுநகர்

  விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  விருதுநகர் மாவட்டத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று NTC/NAC பெற்றவர்கள் 10-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 10-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று NTC/NAC பெற்றவர்கள் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி வழங்கப்படும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.

  இதைத்தொடர்ந்து அரசு தேர்வு இயக்ககத்தால் ஆகஸ்ட் 2022-ல் நடந்த மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்துகொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பபடிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழி காட்டுதல் www.skilltraining.tn.gov.in (http://www.skilltraining.tn.gov.in/) என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

  மேற்கண்ட சான்றிதழ் பெற விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உரிய விண்ணப்ப படிவத்தை விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 28-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை 04562-252655 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  Next Story
  ×