search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stations"

    • தனியார்‌ தொழிற்‌ பயிற்சி நிலையங்களில்‌ அரசு ஒதுக்கீட்டு இடங்க ளுக்கு சேரவும்‌ www_skilltraining.tn.gov.in என்ற இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
    • பெண்‌ பயிற்சியாளர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்‌.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரவும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்க ளுக்கு சேரவும் www_skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    இதில் வெல்டர், வயர்மேன் போன்ற பிரிவுக ளுக்கு 8-ம் வகுப்பிலும் எலக்ட்ரீசியன், பிட்டர், மெசினிஸ்ட், டர்னர், மோட்டார் மெக்கானிக், ஏ.சி. மெக்கானிக், கோபா மற்றும் தொழிற்சாலைக ளின் நவீன தொழில்நுட்பத் திற்கு ஏற்ப புதியதாக தொடங்க உள்ள டெக்னா லஜி சென்டர் 40-ல் மானு பாக்சரிங் பிராசஸ் கண்ட் ரோல் அண்ட் ஆட்டோ மேசன், இண்டஸ்ட்ரியல் ரோபாட்டிக்ஸ் அண்டு டிஜிட்டல் மானுபாக்சரிங், மெக்கானிக் எலக்ட்ரிக் வெகிக்கிள், அட்வான்ஸ்டு சி.என்.சி. மெஷினிங் டெக்னீசியன் போன்ற பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பி லும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், கைபேசி எண், மின்அஞ்சல், ஆதார் அட்டை, சாதிச்சான் றிதழ் மற்றும் முன்னுரிமை கோரினால் முன்னுரிமைச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சேலத்தில் உள்ள சேர்க்கை உதவி மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.50 ஆகும்.

    பயிற்சி பெறும் மாண வர்களுக்கு இலவசமாக சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக் கருவி, காலணி, பஸ் பாஸ், மாதாந்திர உதவித்தொகை ரூ.750 மற்றும் மூவலூர் ராமா மிர்தம் அம்மையார் நினைவு பெண்கள் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் மூலம் பெண் பயிற்சியாளர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்த பின் முன்னனி நிறுவனங்களின் மூலம் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலை பெற்றுத்தரப்படும்.

    இந்த பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்க தேதி வருகிற 20-ந்தேதி வரை நீட்டிக்கப் பட்டு உள்ளது என்று மாவட்ட கலெக்டர் கார்மே கம் தெரிவித்துள்ளார்.

    • இடைதரகர்கள் மூலம் வெளி வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்து விசாரித்தனர்.
    • கையூட்டு கேட்பது உள்ளிட்ட தவறுகள் தெரிந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தாராபுரம், அலங்கியம் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    விவசாயிகளிடம் இருந்து முறையாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா அல்லது பணம் கையூட்டு பெறப்படுகிறதா அல்லது இடைதரகர்கள் மூலம் வெளி வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்து விசாரித்தனர்.

    இதுதவிர, நெல்கொள்முதல் நிலைய அலுவலர்களின் கலந்தாய்வு கூட்டத்தில், சட்டத்துக்கு புறம்பாக விவசாயிகளிடம் இருந்து கையூட்டு கேட்பது உள்ளிட்ட தவறுகள் தெரிந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

    • 70 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.
    • அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், மாலங்குடி கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், பார்வையிட்டு ஆய்வு செய்தார்

    அப்போது அவர் தெரிவிக்கையில்,

    ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க 70 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்க திட்டமிடப்பட்டது. இதில் முதற்கட்டமாக அனைத்து ஊராட்சி ஒன்றியங்களையும் உள்ளடக்கி 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட துவங்கி உள்ளது. தொடர்ந்து திட்டமிட்டபடி மேலும் 20 அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்படுத்தப்படும். இதன் நோக்கம் இடைத் தரர்களை தடுத்து நேரடியாக அரசு கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்து அதிக லாபம் பெற வேண்டும் என்பதே ஆகும்.

    அந்த வகையில் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் அந்தந்த பகுதி விவசாயிகள் பதிவு செய்து தங்களது நெல் மூட்டைகளை எடுத்துச் சென்று விற்பனை செய்திடும் வகையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி நெல் மூட்டைகளை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு அவரவர் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். ஒவ்வொரு நாளும் 125 டன்னுக்கு மேல் நெல் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து பெற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நடப்பாண்டிற்கு விவசாயிகளிடமிருந்து 50,000 மெட்ரிக் டன் நெல் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். வியாபாரிகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் விவசாயிகளின் தேவைக்கேற்ப கூடுதல் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பயன்படுத்தி உரிய விலைக்கு விற்பனை செய்து சரியான லாபத்தை பெற்று பயனடைய வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் ஜோதி பாசு, தரக்கட்டுப்பாட்டு அலுவலர் பன்னீர் செல்வம், துணை மண்டல மேலாளர் மேகவர்ணம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×