search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முண்டியம்பாக்கம் மருத்துவமனை அருகில் ஒரத்தூர் பிரிவு சாலை வரை மேம்பாலத்தை நீட்டிக்க வேண்டும்: மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமார் கோரிக்கை
    X

     முன் மாதிரி ரேஷன் கடையை உணவுமற்றும் கூட்டுறவுத் துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன திறந்து வைத்தார். அருகில் கலெக்டர் பழனி, திண்டிவனம் சப்- கலெக்டர் கட்டா ரவி தேஜா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் யசோதா தேவி உள்ளனர்.

    முண்டியம்பாக்கம் மருத்துவமனை அருகில் ஒரத்தூர் பிரிவு சாலை வரை மேம்பாலத்தை நீட்டிக்க வேண்டும்: மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமார் கோரிக்கை

    • ஒரத்தூர் சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டியதின் அவசர அவசியம் குறித்து தீர்மானம் கொண்டு வந்தார்
    • அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வின் பொது பணித் துறையால் நிறை வேற்றப்பட வேண்டியதுகுறித்து சிவகுமார் எம்.எல்.ஏ. பேசினார்

    விழுப்புரம்,

    சட்டமன்ற கூட்டத் தொடரில் மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமார் முண்டியம்பாக்கம் ஒரத்தூர் சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டியதின் அவசர அவசியம் குறித்து தீர்மானம் கொண்டு வந்தார். அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வின் பொது பணித் துறையால் நிறை வேற்றப்பட வேண்டியது குறித்து சிவகுமார் எம்.எல்.ஏ. பேசினார்.

    இது குறித்து தமிழக சட்ட சபையில் சிவக்குமார் எம்.எல்.ஏ. பேசியதாவது:- சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை முண்டி யம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே அமையுள்ள மேம்பா லத்தை ஒரத்தூர் பிரிவு சாலை வரை அமைக்கப்பட வேண்டும். இந்த மேம்பா லம் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளதாகவும், கூடுதலாக ரூ.17.245 கோடி நிலம் எடுப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முண்டியம்பாக்கம் மருத்துவமனை மட்டும் அல்லாமல் இதன் அருகே 300 மீட்டர் தொலைவில் ஒரத்தூர் பிரிவு சாலையும் 200 மீட்டர் தொலைவில் முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 4 ஆண்டுகளில் சாலை விபத்தில் 2100 பேர் மரணம் அடைந்துள்ளனர். 6300 விபத்துக்கள் நடை பெற்றுள்ளன. இப்பகுதியில் தொடர் விபத்தில் நடைபெறுவதால் முண்டியம்பாக்கம் மருத்து வக் கல்லூரி மருத்துவமனை மேம்பாலம் ஒரத்தூர் பிரிவு சாலை வரை நீடிக்கப்பட வேண்டுமென தமிழக முதல்வரையும், பேரவை தலைவரையும் துறை அமைச்சரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதில் அளித்த துறை அமைச்சர், இது சம்பந்த மாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரி களிடம் நேரடியாகவும் தொலை பேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு பேசப் பட்டுள்ளது. முண்டியம் பாக்கம் மேம்பாலம் நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என்று பதில் அளித்தார்.

    Next Story
    ×