search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agriculture Dept"

    • வேளாண் அடுக்கு திட்டம் தொடர்பாக வேளாண்மை இணை இயக்குனர் தமிழ் மலர் எடுத்து கூறினார்.
    • மேலநீலிதநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஞான தீபா கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து பேசினார்.

    சங்கரன்கோவில்:

    மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுரையின்படி, வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலமாக வேளாண் பொறியியல் துறை சார்பில் பண்ணை எந்திரமயமாக்கல் மற்றும் புதிய எந்திரங்களை பிரபலப்படுத்துதல் பற்றி விவசாயிகள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. வேளாண்மை இணை இயக்குனர் தமிழ் மலர் தலைமை தாங்கி விவசாயிகளிடையே உரையாற்றினார். வேளாண் அடுக்கு திட்டம் தொடர்பாக விவசாயிகளிடையே எடுத்து கூறினார். கிராம நிர்வாக அலுவலர் தங்களுடைய ஆவணங்களை கொடுத்து வலைதளத்தில் பதிவேற்றம் செய்து 13 துறை திட்டங்களின் பயன்களைப் பெற பயனுள்ளதாக இருக்கும் என்றும், வேளாண் உழவர் நலத்துறை சம்பந்தமான திட்டங்கள் பற்றியும், பயிர் காப்பீடு செய்வதன் அவசியம் பற்றியும் எடுத்துக்கூறினார். மேலநீலிதநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஞான தீபா கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். வேளாண் பொறியாளர் திருப்பதி பேசுகையில், மானிய விலையில் சோலார் பம்ப்செட் அமைப்பது மற்றும் டிராக்டர் மானிய விலையில் பெறுவது, பண்ணை குட்டை அமைப்பது மற்றும் பல புதிய பண்ணை எந்திரங்களை மானிய விலையில் பெற முடியும் என்பதை பற்றி விவசாயிகளிடையே தெளிவாக எடுத்துக் கூறினார். வேளாண்மை அலுவலர் மகேஷ் திட்டங்கள் மானிய விவரங்கள் பற்றி பேசினார். பயிற்சியில் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் திருமலை குமார் திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆனந்தன், பயிர் அறுவடை பரிசோதகர் மகேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • திட்டத்தினால் கிடைக்கும் பயன்கள் பற்றி வேளாண்மை உதவி இயக்குநர் ஏஞ்சலின் பொன்ராணி விளக்கி பேசினார்.
    • வேளாண்மை உதவி அலுவலர் கமல்ராஜன் நுண்ணுயிர் பாசன திட்டத்தின் பயன்கள் பற்றி விளக்கி கூறினார்.

    கடையம்:

    கடையம் வட்டாரம் அணைந்த பெருமாள் நாடானூர் பஞ்சாயத்தில் 2023-2024-ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டம்- கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து துறைகளின் சிறப்பு முகாம் நூலகத்தில் பஞ்சாயத்து தலைவர் அழகுதுரை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் கடையம் வேளாண்மை உதவி இயக்குநர் ஏஞ்சலின் பொன்ராணி கலந்து கொண்டு வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் இத்திட்டத்தினால் கிடைக்கும் பயன்கள் பற்றி விளக்கி பேசினார். கால்நடை துறை சார்பில் கலந்து கொண்ட கால்நடை ஆய்வாளர் கிருஷ்ணவேணி, கால்நடைதுறை மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் பயன்கள் பற்றி விளக்கி கூறினார். வேளாண்மை உதவி அலுவலர் கமல்ராஜன் நுண்ணுயிர் பாசன திட்டத்தின் பயன்கள் பற்றி விளக்கி கூறினார். மேலும் பஞ்சாயத்து தலைவர் அழகுதுரை ஊரக உள்ளாட்சி துறை மூலம் பஞ்சாயத்து பகுதியில் நடைபெறும் வேலைகள் பற்றி விளக்கினார். வேளாண்மை உதவி அலுவலர் தீபா கூட்டத்திற்கான ஏற்பாடு களை செய்திருந்தார். கடையம் வட்டாரத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்- கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தேர்வாகி யுள்ள துப்பாக்குடி, முதலி யார்பட்டி, திருமலை யப்பபுரம் பஞ்சாயத்து களிலும் அனைத்து துறைகளின் சிறப்பு முகாம் நடைபெற்றது. கூட்டத்தில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சேதாரம் ஏற்படுவதற்கு முன்னரே விவசாயிகள் பயிர் காப்பீடு மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
    • சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய வரும் 21-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் நெற்பயிரில் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், இழப்பினை தவிர்த்திட பயிர் காப்பீடு செய்ய வேளாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டு சம்பா, தாளடி, பிசான பருவ பயிர்களுக்கான காப்பீடு கடந்த செப்டம்பர் 15-ம் தேதி பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் தொடங்கப்பட்டது. இதுவரை 11 லட்சம் விவசாயிகளால் 15.95 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருப்பூர், ஈரோடு, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான அவகாசம் கடந்த நவம்பர் 15-ம் தேதியுடன் முடிவடைந்தது.

    நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்நிலையில், சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்காக நவம்பர் 21-ம் தேதி வரை கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. பயீர் காப்பீடு செய்ய நாளை, நாளை மறுநாள் வங்கிகள், வேளாண் கூட்டுறவு சங்கங்கள் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்பட 27 மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை வேளாண் இயக்குனரக கூடுதல் இயக்குனர் சங்கரலிங்கம் தரிசுநில தொகுப்பினை ஆய்வு செய்தார்.
    • தூத்துக்குடி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முகைதீன் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்

    சாத்தான்குளம்:

    சென்னை வேளாண் இயக்குனரக கூடுதல் இயக்குனர் சங்கரலிங்கம் சாத்தான்குளம் வட்டாரம் வேளாண்-உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்தார்.

    சாத்தான்குளம் வட்டார பழங்குளம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் தரிசுநில தொகுப்பினை ஆய்வு செய்தார்.

    மேலும் பனை மேம்பாட்டு இயக்ககத்தின் சார்பாக பழஙகுளம் பள்ளிக் கோவில் குளக்கரையில் பனை விதைகள் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் மூலம் நடவு செய்ப்பட்டதையும் ஆய்வு செய்தார் .

    தூத்துக்குடி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முகைதீன், உழவர் பயிற்சி நிலையம் துணை இயக்குனர் ஜெபசெல்வின் இன்பராஜ் ஆகியோர் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் பழங்குளம் ஊராட்சித் தலைவர் செல்லக்கனி செல்லத்தரை, சாத்தான்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுதாமதி, வட்டார வேளாண அலுவலர் சுஜாதா உதவி, வேளாண் அலுவலர்கள் சிவராம், கோபாலகிருஷ்ணன், முனீஸ்வரி, கீர்த்திகா மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பூங்கார் ரக நெல் விதை 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
    • வயலில் 10 நாட்களுக்கு மேலாக தண்ணீர் இருப்பினும் விதை பாதிப்படைவதில்லை

    செய்துங்கநல்லூர்:

    கருங்குளம் வட்டாரத்தில் 50 சதவீத மானியத்தில் பூங்கா ரக நெல் விதை வழங்கப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    கருங்குளம் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் 2022-23 -ம் ஆண்டு நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்திட்டத்தின் கீழ் பூங்கார் ரக நெல் விதை 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    பூங்கார் நெல் பாரம்பரிய நெல் ரகங்களில் ஒன்று. இது நெல் வகைகளில் குறுகிய கால பயிராகும். பாரம்பரிய நெல் வகைகளில் மாறுபட்ட ரகமான இந்த பூங்கார் நெல் 40 நாட்களுக்கு விதை உறக்கத்திலிருந்து அதற்கு பிறகு முளைக்கக் கூடிய திறன் கொண்டதாகும். சிவந்து காணப்படும் நெல் பயிர் அரிசியும் சிவப்பாகவே இருக்கும். இதன் வயது 70 நாட்கள் என்றாலும் பருவத்திற்கு ஏற்ப பயிர் செய்யும்போது 70 லிருந்து 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகிறது.

    விதைப்பு செய்த நாற்றங்கால் வயலில் 10 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வடிய வழியில்லாமல் இருப்பினும் முளைக்கும் திறனும், முளைத்த விதையும் பாதிப்படைவதில்லை. இதன் நெல் கதிர் மூப்படைந்த அறுவடை நேரத்தில் தொடர் மழையாலும் மழை நீர் சூழ்ந்திருக்கும் காலத்தில் நெல் கதிர் தண்ணீருக்குள் இருந்தாலும் அது முளைக்காது.

    இந்த பூங்கார் ரக நெல் விதை பெற்று இந்த திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்கள் ஆதார் கார்டு நகல், குடும்ப அட்டை நகல், கணினி பட்டா மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மை துறை அலுவலர்களை அணுகி பயன் பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 56 கிராம பஞ்சாயத்துகளிலும் செயல்படுத்தப்படுகிறது.
    • ஆய்வு கூட்டம் மண்டல அலுவலர் ஆசீர் கனகராஜன் தலைமையில் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 35 பஞ்சாயத்துக்களிலும் 2022-23-ம் ஆண்டில் 56 கிராம பஞ்சாயத்துகளிலும் செயல்படுத்தப்படுகிறது. இப்பணிகளை ஆய்வு செய்திட வேளாண்மை இணை இயக்குனர், நெல்லை மாவட்ட அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் மண்டல அலுவலர் ஆசீர் கனகராஜன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து மானூர் வட்டாரம் சேதுராயன்புதூர் தரிசு நில தொகுப்புகளை மண்டல அலுவலர் பார்வையிட்டார்.

    மதவக்குறிச்சியில் கலைஞர் திட்டத்தின் கீழ் வேளாண்மை துறை மூலம் வழங்கப்பட்ட தென்னங்கன்றுகள் மற்றும் தோட்டக்கலை மூலம் வினியோகிக்கப்பட்ட பழமரங்கன்றுகளை ஆய்வு செய்தார்.

    மேலும் இலந்தைகுளம் கிராமத்தில் முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பயன்அடைந்த விவசாயி களுக்கு இடுபொருட்களை வழங்கினார். தொடர்ந்து பாரம்பரிய நெல் ரகமான கருங்குருவை விதைகள் மற்றும் உளுந்து வரப்பு பயிர் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினார். உக்கிரன்கோட்டை தரிசு நிலத் தொகுப்பினை ஆய்வு செய்தார்.

    வேளாண்மை பொறி யியல் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஊரணி தூர்வாருதல் பணிகள், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் பாரத பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் ராமையன்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள எண்ணை பிழியும் கருவியின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். அனைத்து துறைகளும் ஒருங்கிணைப்புடன் இத்திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்திட ஆலோசனையும் வழங்கினார்.

    ஆய்வின்போது நெல்லை வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) அசோக்குமார், தோட்டக்கலை துணை இயக்குனர் பாலகிருஷ்ணன், வேளாண்மை துணை இயக்குனர் சுந்தர் டேனியல் பாலஸ், விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார், வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) பூவண்ணன், உதவி செயற்பொறியாளர் ஜெயராமன், விதைச்சான்று உதவி இயக்குனர் ரொனால்டு ரமணி மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் கிருபா ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×