என் மலர்
நீங்கள் தேடியது "Sathankulam"
- சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரணக் கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
- சுப்பராயபுரம் ஊராட்சியில் சுய உதவிக்குழு கட்டிடம் படிக்கட்டுகளில் மேற்கூரை அமைக்க ரூ. 2.50 லட்சம் ஒதுக்கீடு செய்வது என்பன உள்ளிட்ட 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரணக் கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அப்பாதுரை, ஒன்றிய ஆணையர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் முருகேஸ்வரி தீர்மானங்களை வாசித்தார். இதில் ஒன்றிய தலநிதி கணக்கு உபரி நிதியில் இருந்து புதுக்குளம் ஊராட்சி வேலாயுதபுரத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் குழாய் விரிவாக்கம் செய்ய ரூ. 5.30 லட்சமும், சுப்பராயபுரம் ஊராட்சியில் சுய உதவிக்குழு கட்டிடம் படிக்கட்டுகளில் மேற்கூரை அமைக்க ரூ. 2.50 லட்சமும் ஒதுக்கீடு செய்வது என்பன உள்ளிட்ட 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் லதா, சுபா கிறிஸ்டி பொன்மலர், பிச்சிவிளை சுதாகர், செல்வம், ஜோதி, சசிகலா, ஜேசுஅஜிட் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரஞ்சித், பொறியாளர் அருணா, உதவியாளர் சிவா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- வேலாயுதபுர கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர்.
- அதில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க 2000 லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் முறையாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சிக்குட்பட்ட வேலாயுதபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த 6மாதமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை. கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி நடந்த கிராமசபை கூட்டத்தில் கிராம மக்கள் குடிநீர் முறையாக வழங்கிடகோரி மனு அளித்தனர். அப்போது ஊராட்சித் தலைவர், யூனியன் தலைவர் குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். மேலும் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய ஆணையாளரிடமும் முறையிட்டுள்ளனர். ஆனால் இதுவரை முறையாக குடிநீர் விநியோகிக்கப்படாததால் மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலையில் உள்ளனர்.
மேலும் கடந்த மாதம் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றபோது சாத்தான்குளம் போலீசார் குடிநீர் வழங்கிட ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளனர். ஆனால் இதுவரை குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். அதில் 6மாதமாக குடிநீர் வழங்கப்படாததால் அவதி அடைந்துள்ளோம். எனவே குடிநீர் பிரச்சினையை தீர்க்க 2000 லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் முறையாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
- கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்விற்காக பேச்சித்தாயும், அவரது தம்பியும் தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்தனர்.
- இதனையடுத்து கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின்பேரில் மாணவியின் வீட்டிற்கு மின்சாரம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தட்டார் ரஸ்தா தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு பேச்சித்தாய் என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவரது வீட்டிற்கு மின் வசதி இல்லாமல் இருந்ததால் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்விற்காக பேச்சித்தாயும், அவரது தம்பியும் தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்தனர். இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது.
இது தொடர்பாக தகவல் கலெக்டர் செந்தில்ராஜ் கவனத்துக்கும் வந்தது. இதனையடுத்து. கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின்பேரில் மாணவியின் வீட்டிற்கு மின்சாரம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து அவரது வீட்டை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது தங்களுக்கு வீடு கட்ட நிதி தரவேண்டும் என மாணவி மற்றும அவரது பெற்றோர் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து கலெக்டர் விருப்ப நிதியில் ரூ.2.10 லட்சம் நிதி அவர்களுக்கு வழங்கினார். அதன்பின் பேரூராட்சி சார்பில் வீடு கட்டி கொடுக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு திறந்து வைத்தார். அப்போது சாத்தான்குளம் வர்த்தக சங்க செயலர் மதுரம் செல்வராஜ், துணைத் தலைவர் கண்ணன் ஆகியோர் கலெக்டரிடம், சாத்தான்குளம் தாசில்தார் அலுவலகம் அருகில் காலியாக உள்ள பழைய கூட்டரங்கில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனர். இதனையடுத்து அந்த கட்டடத்தை பார்வையிட்டு அதில் அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அப்போது திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. குருசந்திரன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் வில்லியம் ஜேசுதாஸ், தாசில்தார் ரதிகலா, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் செந்தூர்ராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாசானமுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
- பள்ளக்குறிச்சி ஊராட்சிக்கு 7 பேட்டரியுடன் இயங்கும் குப்பை வாகனம் மற்றும் 1 டிராக்டர் வழங்கப்பட்டுள்ளது.
- பள்ளக்குறிச்சி ஊராட்சி தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கி வாகனத்துக்கான சாவியை தூய்மை பணியாளர்களிடம் வழங்கி தொடங்கி வைத்தார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் டிராக்டர் மற்றும் பேட்டரியுடன் இயங்ககூடிய குப்பைவாக னங்கள் வழங்கப்பட்டு ள்ளன.
அதன்படி பள்ளக் குறிச்சி ஊராட்சிக்கு 7 பேட்டரியுடன் இயங்கும் குப்பை வாகனம் மற்றும் 1 டிராக்டர் வழங்கப் பட்டுள்ளது. இதையடுத்து பள்ளக்குறிச்சி ஊராட்சி மணிநகரில் மத்திய அரசின் திட்டத்தில் வழங்கப் பட்டுள்ள டிராக்டர் மற்றும் பேட்டரியுடன் இயங்க கூடிய குப்பை வாகனங்கள் மக்கள் பயன்பாட்டிற்க்கு வழங்கும் தொடக்க விழா நடை பெற்றது. பள்ளக்குறிச்சி ஊராட்சி தலைவர் சித்ராங்க தன் தலைமை தாங்கி வாகனத்து க்கான சாவியை தூய்மை பணியாளர்களிடம் வழங்கி தொடங்கி வைத்தார். ஊராட்சி துணைத் தலைவர் டார்வின் முன்னிலை வகி த்தார். ஊராட்சி செயலர் ராஜேஷ் வரவேற்றார். நிகழ்ச்சியில் கிராம தூய்மைக்கு வாகன ங்கள் வழங்கிய மத்திய அரசு க்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரி விக்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள் தனபால், சணமுகா னந்தம், கீதா, நிஷாந்தி, ராஜாத்தியம்மாள் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து தூய்மை இந்தியா திட்டத்தில் தூய் மைப் பணி நடை பெற்றது. இதனை பள்ளக் குறிச்சி ஊராட்சித் தலைவரும், தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவருமான சித்ராங்கதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட துணைத்தலைவர் எஸ். செல்வராஜ், ஒன்றிய தலை வர் எஸ்.கே. சரவணன், மாவட்ட பிரசார பிரிவு தலைவர் ஏ. மகேஸ்வரன், மாநில இளைஞரணி செயலர் அ. பூபதி பாண்டி யன், மாவட்ட சிறு பான்மை பிரிவு செயலர் ஜெரோம், ஒன்றிய துணைத்தலைவர் நவீன், ஒன்றிய செயலர் குமார வேல், உள்ளிட்ட பா.ஜ.க. பிரமுகர்கள், ஊர் பொது மக்கள் பலர் பங்கேற்றனர்.
- அம்பலச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், சுகாதாரம் குறித்தும், கைகழுவும் நிலை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே அம்பலச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவா தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், ஸ்ரீனிவாசன் சேவை அறககட்டளை நிர்வாகி இசக்கிமுத்து ஆகியோர் சுகாதார குறித்தும், கைகழுவும் நிலை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியை செலினா பிரின்ஸ் நன்றி கூறினார்.
- சாத்தான்குளத்தை சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் சாத்தான்குளம் பஜாரில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கிட தினமும் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
- விதிமுறைகளை மீறி எதிரே வரும் லாரி உள்ளிட்ட வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளத்தை சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் சாத்தான்குளம் பஜாரில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கிட தினமும் வாகனங்களில் வந்து செல்கின்றனர். மேலும் அரசு திட்ட உதவிகள் பெறுவது தொடர்பாக தாசில்தார் அலுவலகம், ஒன்றிய அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கும் வந்து செல்கின்றனர். இதனால் சாத்தான்குளம் பஜார் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
எனவே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வழிபாதை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் அதற்கென முறையான போக்குவரத்து போலீசார் நியமிககப்படா ததால் அது செயல்படாமல் உள்ளது. அரசு பஸ்கள், மினி பஸ்கள் முறையாக பயன்படுத்தினாலும், விதிமுறைகளை மீறி எதிரே வரும்லாரி உள்ளிட்ட வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
முகூர்த்த நாள், விழா காலங்களில் அதிக வாகனங்கள் பஜார் பகுதியில் வருவதால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து காணப்படுகிறது. எனவே இதனை தடுகக வாகனங்களை சாலை ஓரங்களிலும், ஒதுக்குப்பு றான இடங்க ளிலும் நிறுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியா பாரிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.
- முதல் நாள் காலை சுடலைமாடசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வருஷாபிஷேகம்,சிறப்பு பூஜை நடந்தது.
- 3-ம் நாள் கோவிலில் பொங்கல் இடுதல், கலை நிகழ்ச்சி, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குதல் நடந்தது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தச்சமொழி சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழா 10-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை 3 நாள்கள் நடந்தது. முதல் நாள் காலை உவரி ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், சுடலைமாடசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வருஷாபிஷேகம், அதனைத் தொடர்ந்து அபிஷேக அலங்கார தீபாராதனை, இரவு மாகாப்பு, அலங்கார தீபாராதனை, வில்லிசை, சிறப்பு பூஜை நடந்தது.
2-ம் நாள் சிறப்பு அபிஷேகம், வில்லிசை, பொங்கல் இடுதல், சுவாமி மஞ்சள் நீராடுதல், சிறப்பு அலங்கார பூஜை, மாலை திருவிளக்கு பூஜை, இரவு வில்லிசை, சாமக் கொடை நடந்தது. 3-ம் நாள் கோவிலில் பொங்கல் இடுதல், கிடா வெட்டி சாமிக்கு உணவு படைத்தல், மாலை சிறுவர்- சிறுமியர் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சி, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குதல் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர், கமிட்டியினர் செய்திருந்தனர்.
- சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா ஆலயத்தில் திருப்பலி நடந்தது.
- இதில் மழை வர வேண்டும் என்று கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வேண்டி கொண்டனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தக்காலன்விளை புனித திருக்கல்யாண மாதா ஆலயத்தில் அப்பகுதியில் போதிய மழை பெய்ய வேண்டி, திருத்தல அதிபர் வெனீஷ் குமார் தலைமையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்,மழை பொழிய வேண்டுகிறோம் தாயே "நிலத்தடி நீர் பெருக வேண்டும் தாயே " என்ற முழக்கத்துடன் ஆலயத்தில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா ஆலயத்துக்கு நடைபயணம் சென்றனர்.
இதில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள், ஊர் பொது மக்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து அதிசய மணல் மாதா ஆலயத்தில் திருப்பலி நடந்தது. இதில் மழை வர வேண்டும் என்று கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வேண்டி கொண்டனர். இதில் தென் மண்டல இளைஞர் இயக்குனர் சேசு மற்றும் பெரியநாயகம், எமலி உள்ளிட்ட திரளான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
- ஜெபராஜ் சாத்தான்குளம் அழகம்மன்கோவில் தெருவை சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார்.
- விசாரணைக்கு ஆஜராகாமல் ஜெபராஜ் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
சாத்தான்குளம்:
நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் சப்பாணி மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி மகன் ஜெபராஜ் (வயது 26). இவர் சாத்தான்குளம் அழகம்மன்கோவில் தெருவை சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார்.
கொலை முயற்சி வழக்கு
இதனிடையே கடந்த 2019-ம் ஆண்டு இவருக்கும், சாத்தான்குளம் ஆர்.சி. வடக்கு தெரு பேச்சிமுத்து (47) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் பேச்சிமுத்துவை ஜெபராஜ், அரிவாளால் வெட்டியதுடன் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து சாத்தான்குளம் போலீசார் ஜெபராஜ் மீது கொலை முயற்சி மற்றும் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ஜெபராஜ், விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
கைது
இதையடுத்து அவரை கைது செய்து ஆஜர்ப டுத்துமாறு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சாத்தான்குளம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையிலான தனிப்படை போலீசார், ஜெபராஜை தேடி வந்தனர்.
இந்நிலையில் சாத்தான்குளம் பகுதியில் பதுங்கி இருந்த ஜெபராஜை போலீசார் நேற்று கைது செய்தனர்.
- சாத்தான்குளம் பேரூராட்சி 9-வது வார்டில் ரூ. 10 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.
- இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் பேரூராட்சி 9-வது வார்டில் ரூ. 10 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் ஸ்டெல்லாபாய் தலைமை தாங்கினார். சாத்தான்குளம் தாசில்தார் ரதிகலா முன்னிலை வகித்தார். இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
விழாவில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜோசப், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் வேணுகோபால், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் சங்கர், ஒன்றிய கவுன்சிலர்கள் குருசாமி, பிச்சிவிளை சுதாகர், பேரூராட்சி துணைத்தலைவர் மாரியம்மாள், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜோசப், அலெக்ஸ், சுந்தர், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சக்திவேல்முருகன், பார்த்தசாரதி, நகர மகிளா காங்கிரஸ் தலைவர் ராணி, மாவட்ட மகிளா காங்கிரஸ் செயலாளர் வசுமதி, முன்னாள் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் ஜாக்குலின், தி.மு.க. நகர செயலாளர் மகாஇளங்கோ, அழகம்மன் கோவில் அறங்காவல் குழுத்தலைவர் சரவணன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ரமேஷ் பாபு (பேய்குளம்), கோதண்டராமன் (ஆழ்வார்), ஸ்ரீவைகுண்டம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் பாஸ்கர், தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் இசை சங்கர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.