search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு இயற்கை முறையில்  காய்கனி சாகுபடி குறித்த பயிற்சி
    X

    விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட போது எடுத்த படம்.

    விவசாயிகளுக்கு இயற்கை முறையில் காய்கனி சாகுபடி குறித்த பயிற்சி

    • சாததான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பொத்தகாலன்விளையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிரியல் துறை சார்பாக இயற்கை முறையில் காய்கனி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி அளிக்கப்பட்டது.
    • பயற்சிக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெபத்துரை தலைமை தாங்கினார்.

    சாத்தான்குளம்:

    சாததான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பொத்தகாலன்விளையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிரியல் துறை சார்பாக இயற்கை முறையில் காய்கனி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயற்சிக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெபத்துரை தலைமை தாங்கினார். சாஸ்தாவிநல்லூர் விவசாய நல சங்க செயலர் லூர்து மணி பயிற்சியை தொடங்கி வைத்தார். சாஸ்தாவிநல்லூர் விவசாய நல சங்கத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், சங்க செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார், சங்க பொருளாளர் ரூபேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தோட்டக்கலை விஞ்ஞானி வேல்முருகன், இயற்கை விவசாயம் பற்றி சிறப்பு பயிற்சி அளித்தார். உதவி வேளாண்மை அலுவலர் முனீஸ்வரி, பி.எம். கிசான் திட்டத்தைப் பற்றியும், அதை எவ்வாறு பதிவேற்றம் செய்வது குறித்தும் பேசினார். உதவி தோட்டக்கலை அலுவலர் அஜித்குமார் தோட்டக்கலை மானியங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

    இதில் சாஸ்தாவிநல்லூர் விவசாய சங்க செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார், விவசாய நலச் சங்க உறுப்பினர்கள் ராஜ மனோகரன், செல்வஜெகன், ஜஸ்டின், வெலிங்டன், ஜூலியன், ராஜ், பிலவேந்திரன், அலெக்ஸ், பேச்சி, மெர்சி, லிவிங்ஸ்டன். சவரிராயன் உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெபக்குமார், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் முருகன், ஜேக்கப் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×