என் மலர்
நீங்கள் தேடியது "Organic farming"
- விவசாயத்திற்கு உதவி புரிய அரசாங்கம் அனைத்து வழிகளையும் திறந்துவிட்டுள்ளது.
- இந்தியா இயற்கை விவசாயத்தில் உலக அளவிலான மையப் புள்ளியாக மாறி வருகிறது.
கோவை கொடிசியாவில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் 3 நாள் இயற்கை வேளாண் மாநாடு இன்று தொடங்கியது. முதல் நாள் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.
பின்னர் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:-
இந்தியா இயற்கை விவசாயத்தில் உலக அளவிலான மையப் புள்ளியாக மாறி வருகிறது. கடந்த 11 ஆண்டுகளில் வேளாண் துறயைில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.
விவசாயத்திற்கு உதவி புரிய அரசாங்கம் அனைத்து வழிகளையும் திறந்துவிட்டுள்ளது.
இந்தியா இயற்கை விவசாயத்தில் உலக அளவிலான மையப் புள்ளியாக மாறி வருகிறது.
இயற்கை விவசாயிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரி உரங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதால் விவசாயிகள் ஆதாயங்கள் கிடைத்துள்ளன.
தமிழ்நாட்டில் 35,000 ஹெக்டேர் நிலத்தில் இயற்கை வேளாண்மை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் முருகப்பொருமானுக்கு தேனும் தினை மாவையும் பிரசாதமாக படைக்கிறோம். கேரளா, கர்நாடகாவிலும் சிறுதானயங்கள் தான் இறைவனுக்கு படைக்கப்படுகின்றன.
இயற்கை வேளாண்மை நமது பாரதத்தின் சொந்த சுதேசி கருத்து, அது நமது பாரம்பரியத்திற்கு கொண்டு செல்கிறது.
நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சிறு, குறு விவசாயிகளுக்கு தற்போது வரை ரூ.4 லட்சம் கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளால் விவசாய நிலத்தின் வளம் குறைகிறது. இயற்கை வேளாண்மை பாதையில் நாம் முன்னேற வேண்டும் என்பதே அத்தியாவசிய தேவை.
இயற்கை வேளாண்மை நோக்கி நகர மத்திய அரசு விவசாயிகளுக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறது.
நமது அரசாங்கம் இயற்கை வேளாண்மை மேற்கொள்ள நிறைய ஊக்கம் அளித்து வருகிறது.
இயற்கை வேளாண்மையில் விவசாயிகள் சிறுகுறு தானியங்களை பயிரிட வேண்டும். ஒற்றைப் பயிர் மட்டும் சார்ந்து இருக்காமல், பல வகைப் பயிர்களை நமது நிலத்தில் நாம் பயிரிட வேண்டும். இயற்கை வேளாண்மை, ரசாயனம் இல்லாத வேளாண்மைக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
நமது சூப்பர் உணவு உலகளாவிய சந்தைகளை சென்றுசேர வேண்டும்.
தென்னிந்தியா விவசாயத்தின் வாழும் பல்கலைக்கழகமாக திகழ்ந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொறியியல் படித்தவர்கள், இஸ்ரோவில் வேலையை விட்டுவிட்டு இயற்கை வேளாண் தொழிலுக்கு வந்துள்ளனர்.
- மாநாட்டிற்கு வராமல் போயிருந்தால் இயற்கை விவசாயம் குறித்து நிறைய விஷயங்கள் எனக்கு தெரியாமல் போயிருக்கும்.
கோவை கொடிசியாவில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் 3 நாள் இயற்கை வேளாண் மாநாடு இன்று தொடங்கியது. முதல் நாள் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.
பின்னர் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:-
தென்னிந்திய இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டிற்கு தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
புட்டபர்த்திக்கு சென்றதால் கோவை விவசாயிகள் மாநாட்டிற்கு வருகைதர ஒரு மணி நேரம் தாமதமானது.
தமிழை கற்றுக்கொண்டிருக்கலாமே என்று நான் அடிக்கடி நினைத்தது உண்டு. சிறு வயதிலேயே தமிழ் கற்றுக்கொடுத்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.
விவசாயிகள் துண்டை சுழற்றியபோது பீகார் காற்று இங்கேயும் வீசுகிறதோ என்று என் மனம் மகிழ்ச்சி அடைந்தது.
கோவையின் எம்பியாக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று குடியரசு துணை தலைவராக நம்மை வழிநடத்துகிறார்.
இயற்கை விவசாயம் என்பது விசேஷமான ஒன்று, எனது இதயத்திற்கு நெருக்கமானது. பொறியியல் படித்தவர்கள், இஸ்ரோவில் வேலையை விட்டுவிட்டு இயற்கை வேளாண் தொழிலுக்கு வந்துள்ளனர்.
கோவை மாநாட்டிற்கு வராமல் போயிருந்தால் இயற்கை விவசாயம் குறித்து நிறைய விஷயங்கள் எனக்கு தெரியாமல் போயிருக்கும்.
இயற்கை விவசாயிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக விவசாயிகள் பேசியதை புரிந்து கொள்ளமுடியவில்லை என்றாலும் உணர முடிந்தது. எதிர்காலத்தில் வேளாண்துறையில் பல மாற்றங்கள் ஏற்பட உள்ளதை நாம் காணவிருக்கிறேன.
இவ்வாறு அவர் கூறினார்.
- அகமதாபாத்தில் நடைபெற்ற 'சஹகர் சம்வாத்' நிகழ்ச்சியில் அமித் ஷா பேசினார்.
- அதில் பல நன்மைகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.
அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாரஸ்யமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற 'சஹகர் சம்வாத்' நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, ஓய்வுக்குப் பிறகு, வேதங்கள் மற்றும் உபநிடதங்களைப் படிப்பதற்கும், இயற்கை விவசாயம் செய்வதற்கும் தனது நேரத்தை ஒதுக்க விரும்புவதாகக் கூறினார்.
இயற்கை விவசாயம் என்பது அறிவியல் சார்ந்த நுட்பம் என்றும், அதில் பல நன்மைகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.
மேலும், ரசாயன உரங்களைப் பயன்படுத்தி வளர்க்கப்படும் கோதுமை பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு மற்றும் புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
இயற்கை விவசாயத்தால், உடலை நோய்களிலிருந்து பாதுகாக்க முடியும் என்றும், மருந்துகளைச் சார்ந்திருப்பது குறையும். இயற்கை விவசாயமும் பயிர் உற்பத்தியை அதிகரிக்கிறது என்றும், தனது விவசாய நிலத்தில் பயிரை 1.5 மடங்கு அதிகரித்த அனுபவம் தனக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.
- இயற்கை வேளாண்மையில் நம்மாழ்வார் சிறந்த முதுகலை ஆராய்ச்சி விருதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.
- பல்கலைக்கழகத்தின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் இந்த விருது வழங்கப்படும்.
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது.
இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசியதாவது:-
இந்தியாவில் நடைபெற்ற பசுமை புரட்சி, விவசாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து விவசாயிகள் ரசாயனம் கலந்த உரங்களை தவிர்த்து, இயற்கை முறைக்கு மாற தொடங்கினர். இதனால், உணவு உற்பத்தி அதிகரித்து நாடு முழுவதும் இயற்கை வளம் செழித்தது.
இந்தியாவில் உற்பத்தியாகும் உணவுகள் நமக்கு மட்டுமின்றி, மற்ற நாடுகளின் பசியையும் போக்குகின்றன. எனவே நாம் விவசாயிகளை மறந்து விடக்கூடாது.
நானும் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன்தான். உயர்கல்வி படிக்கும்போது விவசாயம் செய்து உள்ளேன். எனவே பொதுமக்கள் அனைவரும் இயற்கை முறைக்கு மாற வேண்டும்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கை வேளாண்மையில் நம்மாழ்வார் சிறந்த முதுகலை ஆராய்ச்சி விருதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.
சிறந்த வேளாண் விஞ்ஞானியும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான மறைந்த டாக்டர் ஜி.நம்மாழ்வாரின் நீடித்த பாரம்பரியத்தையும், இயற்கை வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையில் அவரது முன்னோடி பணிகளையும் முன்னெடுத்து செல்வத ற்காக இந்த விருது நிறுவப்பட்டுள்ளது.
இந்த விருது இயற்கை வேளாண்மையை முன்னேற்ற ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்தியாவின் நிலையான விவசாய முன்னேற்றத்தையும், உலகளாவிய இயற்கை வேளாண்மைத்துறையில் அதன் வளர்ந்து வரும் இருப்பையும் ஆதரிக்கிறது.
இந்த விருது ஆண்டுதோறும் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் இயற்கை வேளாண்மையில் சிறந்த குறிப்பிடத்தக்க ஆராய்ச்சியை மேற்கொண்ட மாணவருக்கு வழங்கப்படும். பல்கலைக்கழகத்தின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் இந்த விருது வழங்கப்படும்.
இந்த விருது ரூ.50 ஆயிரம், தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுப்பத்திரம் ஆகியவற்றை கொண்டிருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சாததான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பொத்தகாலன்விளையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிரியல் துறை சார்பாக இயற்கை முறையில் காய்கனி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி அளிக்கப்பட்டது.
- பயற்சிக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெபத்துரை தலைமை தாங்கினார்.
சாத்தான்குளம்:
சாததான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பொத்தகாலன்விளையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிரியல் துறை சார்பாக இயற்கை முறையில் காய்கனி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி அளிக்கப்பட்டது.
பயற்சிக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெபத்துரை தலைமை தாங்கினார். சாஸ்தாவிநல்லூர் விவசாய நல சங்க செயலர் லூர்து மணி பயிற்சியை தொடங்கி வைத்தார். சாஸ்தாவிநல்லூர் விவசாய நல சங்கத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், சங்க செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார், சங்க பொருளாளர் ரூபேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தோட்டக்கலை விஞ்ஞானி வேல்முருகன், இயற்கை விவசாயம் பற்றி சிறப்பு பயிற்சி அளித்தார். உதவி வேளாண்மை அலுவலர் முனீஸ்வரி, பி.எம். கிசான் திட்டத்தைப் பற்றியும், அதை எவ்வாறு பதிவேற்றம் செய்வது குறித்தும் பேசினார். உதவி தோட்டக்கலை அலுவலர் அஜித்குமார் தோட்டக்கலை மானியங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
இதில் சாஸ்தாவிநல்லூர் விவசாய சங்க செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார், விவசாய நலச் சங்க உறுப்பினர்கள் ராஜ மனோகரன், செல்வஜெகன், ஜஸ்டின், வெலிங்டன், ஜூலியன், ராஜ், பிலவேந்திரன், அலெக்ஸ், பேச்சி, மெர்சி, லிவிங்ஸ்டன். சவரிராயன் உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெபக்குமார், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் முருகன், ஜேக்கப் ஆகியோர் செய்திருந்தனர்.
- வேளாண்மைக் கல்லூரி இறுதிஆண்டு மாணவிகளுக்கு கிராம அளவிலான ஊரக வேளாண்மை பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் மணிவாசகம் முன்னிலையில் பூலாம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.
- இதில் வேளாண் தொழில்நுட்ப அலுவலர் மோகன்ராஜ் மற்றும் பூலாம்பட்டி பகுதி உதவி வேளாண்மை அலுவலர் சாந்திலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சேலம்:
எடப்பாடி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரி இறுதிஆண்டு மாணவிகளுக்கு கிராம அளவிலான ஊரக வேளாண்மை பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் மணிவாசகம் முன்னிலையில் பூலாம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.
அந்த பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமியின் வயலில் இயற்கை விவசாயம் குறித்த இடுப்பொருட்கள் தயாரித்தல் பஞ்சகவ்யம், தேர்மோர் கரைசல், இயற்கை பூச்சி விரட்டி, வேஸ்ட் டீ கம்போஸ்ட், ஜீவாமிர்த கரைசல் தயாரித்தல் மற்றும் வெட்டி சீலியம் தயாரித்தல் பற்றிய செயல் விளக்கம் நேரில் அளிக்கப்பட்டது.
இதில் வேளாண் தொழில்நுட்ப அலுவலர் மோகன்ராஜ் மற்றும் பூலாம்பட்டி பகுதி உதவி வேளாண்மை அலுவலர் சாந்திலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் நோக்கங்கள், அதன் நன்மைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
- தச்சநல்லூர் சிதம்பராநகர் நல்லமுத்து இயற்கை வேளாண் மையத்தில், மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது.
- ஈஷா யோகா மையம் சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் பயிற்சி அளிக்கப்பட்டது
நெல்லை:
தச்சநல்லூர் சிதம்பரா நகர் நல்லமுத்து இயற்கை வேளாண் மையத்தில், மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது.
மக்கள் மருத்துவர் ராமகுரு தலைமை தாங்கினார். நம்மாழ்வார் சிலையை ஓவியர் சந்துரு திறந்து வைத்தார். நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக எழுத்தாளர்கள் சுகா, ராமனுஜம், காந்தி கிராம பல்கலை கழக பேராசிரியர் டாக்டர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் டாக்டர் பிரேம சந்திரன், ரமேஷ் ராஜா, சேசுராஜ், இயற்கை விவசாய சங்கம் சுப்பிரமணியம், நடராஜன், உஷாராமன், உழவர் கூட்டுப்பண்ணை கிருசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஈஷா யோகா மையம் சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது இயற்கை விவசாயம் செய்வது எப்படி? என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
- ஆலங்குளம் வட்டாரத்தில் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லுரி இளங்கலை இறுதியாண்டு மாணவிகள் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவங்களை பெற்று வருகின்றனர்.
- இயற்கை முறையில் விவசாயம் செய்வதன் நன்மைகளையும் , இயற்கை விவசாய சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பது பற்றியும் மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கினர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் வேளாண் உதவி இயக்குநர் சிவகுருநாதன், துணை வேளாண் அலுவலர் முருகன், வேளாண் அலுவலர் சண்முகப்பிரியா ஆகியோர் மாணவிகளை வழி நடத்தி வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக மாணவிகள் பேபிசாலினி, ஹேனா குமாரி, இந்துஜா, கவிதா, கீர்த்தனா, லக்ஷயா ஆகியோர் ஆலங்குளம் அருகே மாறாந்தை கிராமத்தில் இயற்கை முறை வேளாண்மை குறித்து விவசாயிகளிடையே விளக்கி கூறினர். இயற்கை முறையில் விவசாயம் செய்வதன் நன்மைகளையும் இயற்கை விவசாய சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பது பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கினர்.
மேலும் இயற்கை விவசாய சான்றிதழ் பெறுவதால் கிடைக்கும் சலுகைகளையும், நன்மைகளையும் பற்றி விவசாயிகளிடையே எடுத்துரைத்தனர். செயற்கை உரங்களுக்கு மாற்றான இயற்கை உரங்களை பற்றிய துண்டு பிரசுரங்களை விவசாயிகளுக்கு வழங்கினர்.
- தேயிலை தொழிற்சாலையில் 800-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
- விவசாயம் இதுவரை மேற்கொள்ளாதவர்களுக்கு ரூ.12 வழங்கப்பட்டுள்ளது
ஊட்டி
தமிழக கேரள எல்லையையொட்டி கிண்ணக்கொரை கிராமம் உள்ளது. இங்குள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் 800-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கிண்ணக்கொரை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களை இயற்கை முறையில் மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததை அடுத்து, தோட்டக்கலை துறைமூலம் அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதில், விவசாயிகள் படிப்படியாக இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இத்தொழிற்சாலையில் உறுப்பினர்கள் கடந்த மாதம் வினியோகித்த தேயிலைக்கு சராசரி விலையாக கிலோவுக்கு, ரூ.10 வழங்க முடிந்தது. ஆனால், இயற்கை விவசாயம் முழுமையாக மேற்கொண்டவர்களுக்கு, கிலோவுக்கு, ரூ.18 விலை வழங்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் ரவிசந்திரன் கூறுகையில், இயற்கை விவசாயம் மேற்கொண்ட விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.18, இயற்கை மேற்கொள்வதாக எழுதி கொடுத்தவர்களுக்கு கிலோவுக்கு ரூ.14, இயற்கை விவசாயம் இதுவரை மேற்கொள்ளாதவர்களுக்கு ரூ.12 வழங்கப்பட்டுள்ளது என்றார்.
- கிருஷ்ணன், தோட்டத்தில் இயற்கை முறையில் பருத்தி விவசாயம் செய்து வருகிறார்.
- இங்கிலாந்து நாட்டிலிருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வந்த விக்கி, கிலோமினா, ஆகியோர் பார்வையிட்டனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே இயற்கை விவசாயம் செய்து வருபவர் பால கிருஷ்ணன்(வயது 41).இந்நிலையில் இவரது தோட்டத்தில்,இயற்கை முறையில் பருத்தி விவசாயம் செய்து வருகிறார்.
இதனை நேற்று இங்கிலாந்து நாட்டிலிருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வந்த விக்கி, கிலோமினா, ஆகியோர் பார்வையிட்டனர். அங்குள்ள பருத்தி தோட்ட த்தை பார்வையிட்டு விவசாய பணிகள் குறித்த விவரங்களை கேட்ட றிந்தனர்.தமிழர்களின் கலாசாரம், விருந்தோம்பல் தங்களை மிகவும் கவர்ந்ததாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
- கண்காட்சி இயற்கை முறையில் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழவகைகளை விற்பனை செய்தனர்.
- இங்கிருந்த இளவட்டக் கல்லை இளைஞர்கள் தூக்கி ஆரவாரம் செய்தனர்.
கண்ணமங்கலம்:
தமிழ் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு இயற்கை விவசாயம் முக்கிய பங்கு வகித்தது.
அனைத்து தொழில்களை விட மக்கள் விவசாயத்தை கவுரவ தொழிலக செய்து வந்தார்கள்.
விவசாயம் செய்பவர்களை இந்த சமூகம் சுய மரியாதையுடன் வாழவைத்தது. தமிழர்கள் பல விதமான பயிர் வகைகள், மண்வகைகள், நீர்ப்பாசன முறைகளை அறிந்திருந்தனர். அதனால் விவசாயம் பெரும் வளர்ச்சி அடைந்தது.
தற்போது செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் எனவே இயற்கை விவசாயத்திற்கு மீண்டும் திரும்ப வேண்டும் என விவசாய ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆட்கள் பற்றாக்குறையால் பழைய விவசாய கருவிகள் எல்லாம் தற்போது காணாமல் போய்விட்டன.
இயற்கை விவசாயம் பழங்கால விவசாய கருவிகளை தற்போது உள்ளவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் கண்காட்சி நடந்தது.
கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் இயற்கை விவசாயிகள் ஊர்தோறும் உணவுத் திருவிழா நடைபெற்றது.
கண்ணமங்கலம் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் தானியங்கள், உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன.
நாட்டு வகை மாடுகள், இளவட்டக்கல், விவசாய பயன்பாட்டுக்கு உண்டான பழைய கருவிகள், ஏர் கலப்பைகள் உள்பட பல்வேறு வகையான பொருட்கள், மூலிகைகள் கண்காட்சியில் வைத்திருந்தனர்.
இங்கிருந்த இளவட்டக் கல்லை இளைஞர்கள் தூக்கி ஆரவாரம் செய்தனர்.
இந்த கண்காட்சி இயற்கை முறையில் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழவகைகளை விற்பனை செய்தனர். இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் உண்டு மகிழ்ந்தனர். மேலும் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை தங்கள் வீடுகளுக்கு வாங்கிச் சென்றனர்.
- சிறப்பு முகாம்கள் ஜூன் 26-ந்தேதி முதல் நடத்தப்படுகிறது.
- குளிா்பதன கிடங்கு விரைவில் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது.
இது குறித்து அவா் வெளியி ட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-
நீலகிரி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயனடையும் வகையில் வட்டார அளவில் சிறப்பு முகாம்கள் ஜூன் 26-ந்தேதி முதல் நடத்தப்படுகிறது. இயற்கை வேளாண்மைக்காக தோட்டக்கலைத் துறை மூலம் நடப்பு ஆண்டில் ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் வழி காட்டு நெறிமுறை களின்படி மாதந்தோறும் அங்கக வேளாண்மைக்கான கூட்டம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தோட்டக்கலைத் துறையி ன்கீழ் அரசு ரோஜா பூங்கா அருகில் அமைந்துள்ள குளிா்பதன கிடங்கு விரைவில் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
தனியாா் விற்பனை நிலையங்களில் உரத்தின் விலை கடந்த ஓராண்டில் அதிக அளவில் உயா்ந்து ள்ளதாக தகவல் வந்த நிலையில், அங்கு ஆய்வு செய்யுமாறு சம்பந்த ப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை யையொட்டி அபாயக ரமான நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளை களை வெட்டுவதற்காக வருவாய்த் துறை அலுவ லா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறையின் மூலம் 2023-24 ஆம் ஆண்டில் தேசிய தோட்ட க்கலை இயக்கம் திட்டத்தி ன்கீழ் நிழல்வலை குடில் 50 சதவீதம் மானியத்தில் அமைக்கவும், 2023-2024 ஆம் ஆண்டில் 20 யூனிட் தேனீ வளா்ப்பு க்கும் இலக்கு நிா்ணயிக்கப்ப ட்டுள்ளது.
எனவே, தேவைப்படும் விவசாயிகள் விண்ண ப்பித்து பயன்பெறலாம். கடந்த ஆண்டு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 274 தேயிலை அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சிறப்புப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் ஆயிரம் தேயிலை அறுவடை இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் உழவா் உற்பத்தியாளா் சந்தைக்கு சி.சி.டி.வி. காமிரா மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






