search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இயற்கை விவசாய விழிப்புணர்வு: பழைய ஏர்கலப்பை, நாட்டு மாடுகளுடன் கண்காட்சி

    • கண்காட்சி இயற்கை முறையில் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழவகைகளை விற்பனை செய்தனர்.
    • இங்கிருந்த இளவட்டக் கல்லை இளைஞர்கள் தூக்கி ஆரவாரம் செய்தனர்.

    கண்ணமங்கலம்:

    தமிழ் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு இயற்கை விவசாயம் முக்கிய பங்கு வகித்தது.

    அனைத்து தொழில்களை விட மக்கள் விவசாயத்தை கவுரவ தொழிலக செய்து வந்தார்கள்.

    விவசாயம் செய்பவர்களை இந்த சமூகம் சுய மரியாதையுடன் வாழவைத்தது. தமிழர்கள் பல விதமான பயிர் வகைகள், மண்வகைகள், நீர்ப்பாசன முறைகளை அறிந்திருந்தனர். அதனால் விவசாயம் பெரும் வளர்ச்சி அடைந்தது.

    தற்போது செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் எனவே இயற்கை விவசாயத்திற்கு மீண்டும் திரும்ப வேண்டும் என விவசாய ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ஆட்கள் பற்றாக்குறையால் பழைய விவசாய கருவிகள் எல்லாம் தற்போது காணாமல் போய்விட்டன.

    இயற்கை விவசாயம் பழங்கால விவசாய கருவிகளை தற்போது உள்ளவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் கண்காட்சி நடந்தது.

    கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் இயற்கை விவசாயிகள் ஊர்தோறும் உணவுத் திருவிழா நடைபெற்றது.

    கண்ணமங்கலம் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் தானியங்கள், உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன.

    நாட்டு வகை மாடுகள், இளவட்டக்கல், விவசாய பயன்பாட்டுக்கு உண்டான பழைய கருவிகள், ஏர் கலப்பைகள் உள்பட பல்வேறு வகையான பொருட்கள், மூலிகைகள் கண்காட்சியில் வைத்திருந்தனர்.

    இங்கிருந்த இளவட்டக் கல்லை இளைஞர்கள் தூக்கி ஆரவாரம் செய்தனர்.

    இந்த கண்காட்சி இயற்கை முறையில் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழவகைகளை விற்பனை செய்தனர். இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் உண்டு மகிழ்ந்தனர். மேலும் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை தங்கள் வீடுகளுக்கு வாங்கிச் சென்றனர்.

    Next Story
    ×