search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fair"

    • அகில இந்திய நாய்கள் கண்காட்சி சேலம் நான்கு ரோடு சிறுமலர் பள்ளி வளாகத்தில் நடந்தது.
    • 45 வகையான 425 நாய்கள் கலந்து கொண்டன.

    சேலம்:

    அகில இந்திய நாய்கள் கண்காட்சி சேலம் நான்கு ரோடு சிறுமலர் பள்ளி வளாகத்தில் நடந்தது.

    இந்த கண்காட்சியில் பூனா, கோலாப்பூர், மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், போபால், கொல்கத்தா, மற்றும் பல மாநிலங்களில் இருந்து பொமோரியன், டேஸ் ஹவுண்ட், பீகிள், ராடுவில்லர், டால்மேசன், கேன் கார்சோ, செயின்ட், கிரேடன், ராஜபாளையம், புல்டாக், சலூகி, பூடுல், ஐரிஸ்டிடம் உள்பட 45 வகையான 425 நாய்கள் கலந்து கொண்டன.

    வெற்றி பெற்ற நாய்களுக்கு பழக்கம் வழங்கப்பட்டது. நடுவர்களாக டாசன், ஆண்டோனியா, ரஞ்சித், முன்ஜால் செயல்பட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தலைவர் விசு காளியப்பன் செயலாளர் சாந்தமூர்த்தி பொருளாளர் சீனிவாசன் துணைத் தலைவர்கள் நடராஜ், பிரகாஷ், இணைச் செயலாளர் மோகன்ராஜ், அண்ணாதுரை மற்றும் பலர் செய்திருந்தனர்.

    • கண்காட்சி இயற்கை முறையில் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழவகைகளை விற்பனை செய்தனர்.
    • இங்கிருந்த இளவட்டக் கல்லை இளைஞர்கள் தூக்கி ஆரவாரம் செய்தனர்.

    கண்ணமங்கலம்:

    தமிழ் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு இயற்கை விவசாயம் முக்கிய பங்கு வகித்தது.

    அனைத்து தொழில்களை விட மக்கள் விவசாயத்தை கவுரவ தொழிலக செய்து வந்தார்கள்.

    விவசாயம் செய்பவர்களை இந்த சமூகம் சுய மரியாதையுடன் வாழவைத்தது. தமிழர்கள் பல விதமான பயிர் வகைகள், மண்வகைகள், நீர்ப்பாசன முறைகளை அறிந்திருந்தனர். அதனால் விவசாயம் பெரும் வளர்ச்சி அடைந்தது.

    தற்போது செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் எனவே இயற்கை விவசாயத்திற்கு மீண்டும் திரும்ப வேண்டும் என விவசாய ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ஆட்கள் பற்றாக்குறையால் பழைய விவசாய கருவிகள் எல்லாம் தற்போது காணாமல் போய்விட்டன.

    இயற்கை விவசாயம் பழங்கால விவசாய கருவிகளை தற்போது உள்ளவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் கண்காட்சி நடந்தது.

    கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் இயற்கை விவசாயிகள் ஊர்தோறும் உணவுத் திருவிழா நடைபெற்றது.

    கண்ணமங்கலம் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் தானியங்கள், உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன.

    நாட்டு வகை மாடுகள், இளவட்டக்கல், விவசாய பயன்பாட்டுக்கு உண்டான பழைய கருவிகள், ஏர் கலப்பைகள் உள்பட பல்வேறு வகையான பொருட்கள், மூலிகைகள் கண்காட்சியில் வைத்திருந்தனர்.

    இங்கிருந்த இளவட்டக் கல்லை இளைஞர்கள் தூக்கி ஆரவாரம் செய்தனர்.

    இந்த கண்காட்சி இயற்கை முறையில் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழவகைகளை விற்பனை செய்தனர். இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் உண்டு மகிழ்ந்தனர். மேலும் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை தங்கள் வீடுகளுக்கு வாங்கிச் சென்றனர். 

    • தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு அரசு நடுநிலைப் பள்ளியில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
    • கண்காட்சி யினை பள்ளி கல்விதுறை முதன்மைக் கல்வி அதிகாரி தனசெல்வம்நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு அரசு நடுநிலைப் பள்ளியில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சி யினை பள்ளி கல்விதுறை முதன்மைக் கல்வி அதிகாரி தனசெல்வம்நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பள்ளிப் பொறுப்பாசிரியர் ஜோசப் தலைமை தாங்கினார்.

    நுண்கலை ஆசிரியர் தனராஜா வழிகாட்டலின் படி சங்கு, கிளிஞ்சல்கள், உபயோகமற்ற பொருட்கள், காகிதங்கள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி உருவாக்கிய 200-க்கும் மேற்பட்ட கைவினைப் பொருட்களை கண்காட்சிக்கு வைத்திருந்தனர்.

    பள்ளி மேலா ண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கண்காட்சி யினை பார்வையிட்டனர்.

    இந்த கைவினைக் கண்காட்சி க்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஜார்ஜியஸ், அமுதன், ஆசிரியைகள் ராஜஜித்தேந்திரி, ரேணுகாதேவி, தனவந்தினி, புவனேஸ்வரி, ஹேமலதா, அருள்ஜோதி, ஜெயந்தி, வள்ளி மற்றும் பள்ளி ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் இந்த கண்காட்சியில் கைத்தறி ஆடைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் நகைகள் இடம்பெற்றுள்ளன.
    • வீடுகளை அலங்கரிக்கும் ஏராளமான கைவினை கலைப்பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

    சென்னை:

    திருவான்மியூர் கலாஷேத்ரா மற்றும் பாம்பன் சுவாமி கோவில் எதிர்புறம் சிஇஆர்சி கண்காட்சி மைதானத்தில் கிருஷ்ணா ஆர்ட்ஸ் அன்ட் கிராப்ட்ஸ் நடத்தும் ஹஸ்தகலா உத்சவ் எனப்படும் கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் கண்காட்சி நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் இந்த கண்காட்சியில் கைத்தறி ஆடைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் நகைகள் இடம்பெற்றுள்ளன.

    கைத்தறி வகைகளில் பெண்களுக்கான ஆடைகள், அழகான வண்ணங்களிலும், புதுமையான டிசைன்களிலும் இடம் பெற்றுள்ளன. ஒடிசா இக்கத் சேலைகள், டிரஸ் மெட்டீரியல் போன்றவை வெஜிடபிள் டை வண்ணத்தில் கிடைக்கின்றன. இவை கையால் நெய்யப்பட்ட ஆடைகள் ஆகும். மத்திய பிரதேசத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள சந்தேரி சில்க் காட்டன் சேலைகள், காட்டன் டிரஸ் மெட்டீரியல், ஜம்தானி காட்டன் சேலைகள், ஜம்தானி சில்க் சேலைகள் போன்றவையும் உள்ளன.

    பெண்கள் விரும்பி அணியும் மேலாடைகள் காட்டன் வகைகளிலும், சில்க் வகைகளிலும் கிடைக்கின்றன. மேலும் குழந்தைகளுக்கான ஷார்ட் மேலாடைகள், அனார்கலி மேலாடைகள், ஸ்கர்ட் போன்றவை உள்ளன.

    வீடுகளை அலங்கரிக்கும் ஏராளமான கைவினை கலைப்பொருட்களும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. பிளாக் மெட்டலால் ஆன சாமி சிலைகள் இங்கு ஏராளம் உள்ளன. விநாயகர், கிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்து சாமி சிலைகளை இங்கு தேர்வு செய்யலாம். பித்தளையால் ஆன சாமி சிலைகள், நூக்க மரத்தினால் ஆன சிலைகள், சிற்பங்கள், ஜோத்பூர் மரத்தினால் ஆன சிற்பங்கள், கலைபொருட்கள் போன்றவையும் உள்ளன.

    இளம்பெண்கள் விரும்பி அணியும் ஒரு கிராம் தங்க நகைகளும் இங்கு கிடைக்கின்றன. நெக்லஸ், மோதிரம், வளையல், ஒட்டியாணம், நெத்திச்சுட்டி, கொலுசு, பிரேஸ்லெட், செயின், ஆரம் உள்ளிட்ட நகைகளும் ஒரு கிராம் தங்க நகைகள் ஆகும்.

    வருகிற 15-ந் தேதி வரை இந்த கண்காட்சி நடக்கிறது. காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சி உண்டு.

    • குழந்தைகளுக்கான விளையாட்டு, கலையரங்கம், அறிவியல் கண்காட்சிகளை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
    • கல்வி தான் ஒரு குழந்தைக்கு சரியான அணிகலன்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அடுத்து நீடூர் ஊராட்சி நஸ்ருல் முஸ்லிமீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரூ.10 லட்சம் செலவில் கலையரங்கம் கட்டப்பட்டுள்ளது.

    இதில் எல்.கே.ஜி. குழந்தை களுக்கான ரப்பர் தரைத்தளம் கொண்ட விளையாட்டு அரங்கம் மற்றும் அறிவியல் கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.

    பள்ளித் தாளாளர் இராமன் தலைமை தாங்கி னார். தனியார் கல்லூரி தலைவர் ஜாபீர் மற்றும் பர்வீன் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் பிரியா வரவேற்றார். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் இரா.லலிதா குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கம் மற்றும் கலையரங்கம், அறிவியல் கண்காட்சிகளை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    அப்போது கலெக்டர் தன்னுடைய பள்ளிகால நிகழ்வுகளை எடுத்து கூறினர். ஆசிரியர்கள் மாணவர்களை தங்களுடைய சொந்த குழந்தைகள் போல் போற்றி அவர்களுக்கு கல்வி போதிக்க வேண்டும் எனவும், பெற்றோர்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் அதாவது ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் சமமாக நினைத்து அவர்களை வளர்க்க வேண்டும்.

    கல்வி தான் ஒரு குழந்தைக்கு சரியான அணிகலன் எனவும் நன்றாக படிக்கவும், விளையாட்டு போட்டிகளில் பங்கு கொள்ளவும் கேட்டுக்கொண்டார்.

    பிறகு மாநில அளவில் விளையாட்டு போட்டியில் பங்கு பெற்ற முகமது மோசின்க்கு நினைவு பரிசினை மாவட்ட கலெக்டர் வழங்கினர். பின்னர் அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டு மாணவ-மாணவிகளை உற்சாகப்படுத்தினார்.

    நிகழ்ச்சியில் தாசில்தார் மகேந்திரன், வி.ஏ.ஒ. பஞ்சநாதன், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொன்டனர். முடிவில் அறிவியல் ஆசிரியர் ரானிஸ் நன்றி கூறினார்.

    • கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது
    • அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் விஞ்ஞான கருவிகளையும் செயல்முறைகளையும் சிறப்பாக நடத்திக் காட்டினர்.

    வள்ளியூர்:

    கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் விஞ்ஞான கருவிகளையும் செயல்முறைகளையும் சிறப்பாக நடத்திக் காட்டினர். கண்காட்சிக்கு பள்ளி தாளாளர் டாக்டர் தினேஷ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் முருகேசன், துணை முதல்வர் ஜெனி மற்றும் டேனியல் ஆகியோர் கண்காட்சியை சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தனர்.

    • கொரோனோ பரவல் காரணமாக தொடர்ந்து 3-வது ஆண்டாக குருநாதசாமி கோவில் பண்டிகை ரத்து செய்யப்பட்டதால், பக்தர்களும், பொது மக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    • திருவிழா ரத்து செய்யப்பட்டதன் காரணமாக தென்னிந்தியாவின் புகழ்பெற்ற குதிரை சந்தையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் புகழ்பெற்ற குருநாதசாமி கோவில் அமைந்துள்ளது.இ க்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தேர் திருவிழா மற்றும் அதையொட்டி நடைபெறுகின்ற குதிரை சந்தை, பாரம்பரிய கால்நடை சந்தை தென்னிந்திய அளவில் பிரபலமானது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோவில் பண்டிகை ரத்து செய்யப்பட்டது.த ற்போது கொரோனா பரவல் தமிழகத்தில் சற்று அதி கரித்து வரும் நிலையில், திருவிழாவின் போது தமி ழகம் மட்டும் இன்றி அண்டை மாநி லங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் இந்த ஆண்டு திருவிழா நடைபெறுமா என்று பொதுமக்கள் எதி ர்பார்த்து காத்திருந்தனர்.

    இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த ஆண்டும் திருவிழாவை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டது.மேலும் சிறப்பு பூஜைகள் மட்டும் மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திருவிழா ரத்து செய்யப்பட்டதன் காரணமாக தென்னிந்தியாவின் புகழ்பெற்ற குதிரை சந்தையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.கொரோனோ பரவல் காரணமாக தொடர்ந்து 3-வது ஆண்டாக குருநாதசாமி கோவில் பண்டிகை ரத்து செய்யப்பட்டதால், பக்தர்களும், பொது மக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    • பல்வேறு வகையான புத்தகங்கள் லட்சக்கணக்கில் இடம்பெறும் வகையில் அரங்கம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    • அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அரண்மனை வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தக கண்காட்சி வரும் 15 -ம் தேதி தொடங்க உள்ளது.இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை இன்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    புத்தக வாசிப்பை பெரியவர்கள் மட்டுமல்லாமல் மாணவர்களும் நேசிக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சரின் ஆலோசனைப்படி தஞ்சை மாவட்டத்தில் வரும் 15 -ம் தேதி புத்தக கண்காட்சி தொடங்க உள்ளது.பல்வேறு வகையான புத்தகங்கள் லட்சக்கணக்கில் இடம் பெறும் வகையில் அரங்கம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பபாசி அமைப்புடன் இணைந்து கண்காட்சி அமைப்பதால் சிறப்பாக அமையும்.

    இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த அரங்கமும் இடம்பெறும். கொரோனா தொற்று சற்று அதிகரித்து வரும் வரும் காரணத்தினால் முதலமைச்சரின் உத்த–ரவுப்படி தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய–வேண்டும். கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

    அனைத்து பள்ளிகளும் அரசின் விதிகளை கடைபிடிக்க வேண்டும்.இது குறித்து பல்வேறு பள்ளிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக அரசு பள்ளி மற்றும் உதவிபெறும் பள்ளிகள் என இந்த ஆண்டு மொத்தமாக 9 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளை தேடி வந்துள்ளனர்.

    முதல்-அமைச்சர் மீது வைத்துள்ள நம்பிக்கை காரணமாக பெற்றோர்கள் மிகுந்த ஆர்வத்தோடு அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கின்றனர். அதிகளவில் சேர்க்கை நடந்துள்ளது.இந்தாண்டு நீட் தேர்வுக்கு 16 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதே நேரத்தில் நீட் நுழைவு தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் துரைசந்திரசேகரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ×