search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "foreign tourists"

    • மருத்துவம் மற்றும் விளையாட்டு, அயல்நாட்டினரை ஈர்க்கும் காரணங்களில் முக்கியமானவை
    • 2019ல் 10.93 மில்லியன் அயல்நாட்டினர் இந்தியாவிற்கு சுற்றுலா வந்தனர்

    இந்தியர்கள், தொன்று தொட்டு ஆன்மிக காரணங்களுக்காக நாடு முழுவதும் சுற்றுலா செல்வது வழக்கம்.

    1947 சுதந்திரம் அடைந்த பிறகு அயல்நாட்டினரை ஈர்க்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் சுற்றுலா துறை வளர்ச்சிக்கு முக்கிய இடம் கொடுக்க தொடங்கின.

    சுற்றுலாவின் மகத்துவத்தை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் ஜனவரி 25, "தேசிய சுற்றுலா தினம்" (National Tourism Day) என கொண்டாடப்படுகிறது.

    சுற்றுலா துறையை மேம்படுத்தவும், நாட்டின் வளர்ச்சியில் சுற்றுலாவின் பங்கை மக்களுக்கு உணர்த்தி சுற்றுலா தலங்களையும், உள்ளூர் மக்களையும் ஒருங்கிணைத்து துறையை முன்னெடுத்து செல்லவும், இந்நாளில் நாடெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.


    இந்தியாவின் பரந்து விரிந்திருக்கும் கலாச்சார பன்முகத்தன்மை, உணவு வகைகள், வரலாறு ஆகியவற்றின் பெருமைகளை அயல்நாட்டினர் அறிந்து கொண்டு சுற்றுலாவிற்கு அவர்களை ஈர்க்கும் வகையில் இன்று பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

    கலாச்சார, இயற்கை, பாரம்பரியம், கல்வி மற்றும் தொழில் என பல வகை சுற்றுலாவிற்காக இந்தியாவிற்கு  ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் வருகை தருகின்றனர்.

    இதை தவிர, விளையாட்டு மற்றும் மருத்துவம் ஆகிய காரணங்களுக்காக இந்திய சுற்றுலா பெயர் பெற்றது.

    இந்திய பணியாளர்களில் 15 சதவீதம் பேர் சுற்றுலா துறையில் உள்ளனர்.

    ஒவ்வொரு வருடமும் தேசிய சுற்றுலா தின கருப்பொருள் வேறுபடும்.

    2024ல், "நீடித்து நிற்கும் பயணங்கள், நீண்டகால நினைவுகள்" (Sustainable Journeys, Timeless Memories) என்பது கருப்பொருள்.


    உலக புகழ் பெற்ற ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகையின் "உலகின் 50 அழகான நாடுகள்" பட்டியலில் இந்தியாவிற்கு 7-வது இடம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6 சதவீதம் சுற்றுலா துறையில் இருந்து வருகிறது.

    2019ல், 10.93 மில்லியன் என இருந்த அயல்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் குறைந்திருந்தது.

    பிறகு, அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, இது அதிகரிக்க தொடங்கியது.

    2023 அக்டோபர் வரையிலான சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 7 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கிருஷ்ணன், தோட்டத்தில் இயற்கை முறையில் பருத்தி விவசாயம் செய்து வருகிறார்.
    • இங்கிலாந்து நாட்டிலிருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வந்த விக்கி, கிலோமினா, ஆகியோர் பார்வையிட்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே இயற்கை விவசாயம் செய்து வருபவர் பால கிருஷ்ணன்(வயது 41).இந்நிலையில் இவரது தோட்டத்தில்,இயற்கை முறையில் பருத்தி விவசாயம் செய்து வருகிறார்.

    இதனை நேற்று இங்கிலாந்து நாட்டிலிருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வந்த விக்கி, கிலோமினா, ஆகியோர் பார்வையிட்டனர். அங்குள்ள பருத்தி தோட்ட த்தை பார்வையிட்டு விவசாய பணிகள் குறித்த விவரங்களை கேட்ட றிந்தனர்.தமிழர்களின் கலாசாரம், விருந்தோம்பல் தங்களை மிகவும் கவர்ந்ததாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    • பல நாட்களாக இந்தியாவின் பல்வேறு நகரங்களை கடந்து வந்த அவர்கள் தற்போது கேரள மாநில த்திலிருந்து ஆட்டோவில் கொடைக்கானலுக்கு வந்தனர்.
    • இங்குள்ள பருவநிலை ஸ்காட்லாந்து நாட்டை நினைவுபடுத்துவதாக உள்ளது என தெரிவித்தனர்.

    கொடைக்கானல்:

    இந்தியா முழுவதும் ஆட்டோவில் சுற்றி வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்களை கண்டு களித்தனர்.

    ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் மார்க். இவரும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பிராய் என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் ஆட்டோவில் இந்தியா முழுவதும் சுற்றி பார்க்க முடிவு செய்தனர். அதன்படி டெல்லிக்கு வந்த அவர்கள் அங்கிருந்து தங்களது பயணத்தை தொடங்கினர். பல நாட்களாக இந்தியாவின் பல்வேறு நகரங்களை கடந்து வந்த அவர்கள் தற்போது கேரள மாநில த்திலிருந்து ஆட்டோவில் கொடைக்கானலுக்கு வந்தனர்.

    பின்னர் இங்குள்ள அடர்ந்த வனப் பகுதிகளான மோயர் பாய்ண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, பில்லர் ராக்ஸ், நட்சத்திர ஏரி ஆகியவற்றை பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், ஸ்காட்லாந்து மற்றும் தாய்லாந்து நாட்டில் இருந்து வந்துள்ளோம். இந்தியா மிகவும் நல்ல மகிழ்ச்சியான நாடு. பல்வேறு மாநிலங்களுக்கு சென்று சுற்றி பார்த்த பின்னர் தற்போது கொடைக்கானல் நகருக்கு வந்துள்ளதாகவும், இங்குள்ள பருவநிலை ஸ்காட்லாந்து நாட்டை நினைவுபடுத்துவதாக உள்ளது என தெரிவித்தனர். நாளை பழனிக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து சிக்கிம் மாநிலம் செல்ல உள்ளதாக தெரி வித்தனர். அவர்கள் வந்த ஆட்டோ அலங்கரிக்கப்பட்டு இருந்ததை சுற்றுலா பயணி களும் பொதுமக்களும் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர்.

    இந்தோனேசியாவில் உள்ள பாலியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. #Indonesia #Bali #tax
    மாஸ்கோ:

    பாலியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதையடுத்து அந்நாட்டின் அரசு புதிய வரியை விதித்துள்ளது. இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பரில் உள்ளூர் பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

    பாலி தீவின் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கும்,  கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும் இந்த வருவாய் பயன்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த வரியினை சுற்றுலா பயணிகள், விமான டிக்கெட்டுகளுடன் சேர்த்தோ அல்லது விமான நிலையத்திலோ செலுத்த நேரிடும் என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

    மேலும் 2017 ஆம் ஆண்டில் சீனா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து பிரதானமாக 5.7 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பாலிக்கு வருகை தந்துள்ளனர். 2018 ஆம் ஆண்டில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 6 மில்லியனை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது. #Indonesia #Bali #tax

    வெளிநாட்டு பயணிகள் ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய 365 நாட்களுக்கு முன்பாகவே பதிவு செய்ய அனுமதிக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. #TrainTicketBooking #ForeignTourist
    புதுடெல்லி:

    இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையதளம் வாயிலாக தினமும் லட்சக்கணக்கான உள்நாட்டு பயணிகள் ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஆண்டுக்கு ஆண்டு இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில்கொண்டு வெளிநாட்டு பயணிகளை ஈர்ப்பதற்காக ரெயில்வே வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    தற்போது வெளிநாட்டு பயணிகள் 120 நாட்களுக்கு முன்பு ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதை 365 நாட்களுக்கு, அதாவது 1 ஆண்டுக்கு முன்பாகவே பதிவு செய்ய அனுமதிக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

    இதுபற்றி இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “வெளிநாட்டு பயணிகள் இனி 365 நாட்களுக்கு முன்பே இந்திய ரெயில்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். பாஸ்போர்ட் நம்பர், சர்வதேச மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களுடன் முன்பதிவு செய்ய வேண்டும். டிக்கெட்டை ரத்து செய்யும் பட்சத்தில் 50 சதவீத கட்டணம் மட்டுமே திரும்ப வழங்கப்படும். பயணத்தின்போது அசல் பாஸ்போர்ட், விசா வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும்” என்றார். 
    ×