search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்தியா முழுவதும் ஆட்டோவில் சுற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
    X

    ஆட்டோவில் கொடைக்கானலுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.

    இந்தியா முழுவதும் ஆட்டோவில் சுற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

    • பல நாட்களாக இந்தியாவின் பல்வேறு நகரங்களை கடந்து வந்த அவர்கள் தற்போது கேரள மாநில த்திலிருந்து ஆட்டோவில் கொடைக்கானலுக்கு வந்தனர்.
    • இங்குள்ள பருவநிலை ஸ்காட்லாந்து நாட்டை நினைவுபடுத்துவதாக உள்ளது என தெரிவித்தனர்.

    கொடைக்கானல்:

    இந்தியா முழுவதும் ஆட்டோவில் சுற்றி வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்களை கண்டு களித்தனர்.

    ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் மார்க். இவரும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பிராய் என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் ஆட்டோவில் இந்தியா முழுவதும் சுற்றி பார்க்க முடிவு செய்தனர். அதன்படி டெல்லிக்கு வந்த அவர்கள் அங்கிருந்து தங்களது பயணத்தை தொடங்கினர். பல நாட்களாக இந்தியாவின் பல்வேறு நகரங்களை கடந்து வந்த அவர்கள் தற்போது கேரள மாநில த்திலிருந்து ஆட்டோவில் கொடைக்கானலுக்கு வந்தனர்.

    பின்னர் இங்குள்ள அடர்ந்த வனப் பகுதிகளான மோயர் பாய்ண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, பில்லர் ராக்ஸ், நட்சத்திர ஏரி ஆகியவற்றை பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், ஸ்காட்லாந்து மற்றும் தாய்லாந்து நாட்டில் இருந்து வந்துள்ளோம். இந்தியா மிகவும் நல்ல மகிழ்ச்சியான நாடு. பல்வேறு மாநிலங்களுக்கு சென்று சுற்றி பார்த்த பின்னர் தற்போது கொடைக்கானல் நகருக்கு வந்துள்ளதாகவும், இங்குள்ள பருவநிலை ஸ்காட்லாந்து நாட்டை நினைவுபடுத்துவதாக உள்ளது என தெரிவித்தனர். நாளை பழனிக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து சிக்கிம் மாநிலம் செல்ல உள்ளதாக தெரி வித்தனர். அவர்கள் வந்த ஆட்டோ அலங்கரிக்கப்பட்டு இருந்ததை சுற்றுலா பயணி களும் பொதுமக்களும் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர்.

    Next Story
    ×