search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Reservoir tank"

    • திரு.பட்டினத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
    • குமார் மற்றும் வீரனராஜ் மோட்டார்களை திருடியது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் அருகே இருந்த விலை உயர்ந்த மோட்டார்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது தொடர்பாக திரு.பட்டினம் பகுதியை சேர்ந்த குமார் மற்றும் வீரனராஜ் மோட்டார்களை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் திரு.பட்டினம் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த மோட்டாரர்களே பறிமுதல் செய்து காரைக்காலில் உள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

    • பழனிச்சாமி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் அன்னபூரணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
    • கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், லக்கமநாயக்கன்பட்டி கிராம ஊராட்சியில் 15 வது நிதி குழு மானியம் 2020- 23 திட்டத்தின் கீழ் பசுபதிபாளையம் கிராமத்திற்கு 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி , காவலிபாளையத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி என மொத்தம் ரூ. 13 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் மேல்நிலை தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை ஊராட்சி மன்ற தலைவர் சேடன் குட்டை பழனிச்சாமி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் அன்னபூரணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் பணிகள் தொடங்கப்பட்டது.
    • அப்பகுதி மக்கள் குடி தண்ணீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சியில், கோபனாரி, ஆலங்கண்டி, ஆலங்கண்டி புதூர், சீங்குழி, பட்டி சாலை, செங்குட்டை, மேல்பாவி, குழியூர், ஊக்கையனூர், ஊக்கப்பதி,மொட்டியூர், நீலாம்பதி உள்ளிட்ட பல்வேறு மலைவாழ் கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அடர் வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த மலை கிராமங்களில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை போக்கும் வகையில் கடந்த 2021-2022 ஆம் ஆண்டு 15-வது நிதி குழு மானியத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஆலங்கண்டி பகுதியில் அமைக்க திட்டமிட்டது. அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டது.

    இந்த நிலையில் மேல் நிலை நீர்தேக்க தொட்டி தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் இப்பணியை பாதியில் நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாகவே அப்பகுதி மக்கள் குடி தண்ணீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து கோபனாரி பகுதியைச்சேர்ந்த மலைவாழ் மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க ரூ.10 லட்சம் மதிப்பில் பூமி பூஜை போடப்பட்டு அப்பணிகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இதனால் தாங்கள் குடிநீருக்காக வனப்பகுதிக்குள் செல்லும் போது மனித-வனவிலங்குகள் உயிரின மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

    இதனால் அரசு உரிய நடவடிக்கை எடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.தோலம்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயா செந்தில் கூறும் போது, பணிகளை எடுத்த ஒப்பந்ததாரரிடம் இருந்து சப் காண்ட்ராக்ட் எடுத்த நபர் பணத்தைப் பெற்றுக் கொண்டு பணிகளை முடிக்காமல் இருந்தார். இதனால் தற்போது வேறு ஒப்பந்ததார் மூலம் இப்பணிகள் தொடங்கப்பட உள்ளது. தற்போது ஒப்பந்தம் எடுத்துள்ள நபர் தோலம்பாளையம் புதூர் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.அப்பணிகளை முடித்து அடுத்த வாரத்திற்குள் ஆலங்கண்டி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணிகள் தொடரும் என்றார்.

    • கள்ளக்குறிச்சியில் நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • அறிவிப்பு வெளியிட்ட தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி தமிழ்நாடு கிராம மேல்நிலைத் நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பா ட்டத்திற்கு மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ராமலிங்கம், மாநில பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தலைவர் கொளஞ்சி வேலு கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். தொடர்ந்து சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டை அமல்படுத்த வேண்டும்.

    தூய்மை காவலரின் ஊதியத்தை நேரடியாக ஊராட்சியின் மூலம் வழங்குதல். கொரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக தூய்மை காவலர்களுக்கு ரூ.3600-லிருந்து ரூ.5 ஆயிரமாக சம்பளத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்ட தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இதில் மாநிலத் துணைத் தலைவர்கள் தங்கவேல், அந்தோணி தாஸ், ரமேஷ், சந்திரசேகர், மாநில இணை செயலாளர் கனி, பரமசிவன், முத்துசாமி, வேலு, சேதுராமன், சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • செல்லம்பட்டி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது.
    • இதனால் கிராம மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் செல்லம்பட்டி யூனியனுக்குட்பட்ட முதலைகுளம் ஊராட்சி எழுவம்பட்டி கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் பொது மக்களுக்கு குடிநீரை ஊராட்சி நிர்வாகம் சப்ளை செய்து வருகிறது.

    இந்த நீர்தேக்க தொட்டியின் 4 சிமெண்டு தூண்களும் விரிசலடைந்து சேதமாகி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதன் அருகிலுள்ள அங்கன்வாடி மைய குழந்தைகள் மற்றும் குடியிருப்போர்களும் உயிர் பயத்தில் உள்ளனர்.

    இது பற்றி கிராம மக்கள் செல்லம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று குற்றம் சாட்டினர். இது குறித்து எழுவம்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் கூறுகையில், இந்த கிராம குடிநீர் தேவைக்கான ஆழ்துளை கிணறு முதலைகுளம் கண்மாய் கரை பகுதியில் அமைந்துள்ளது.மின் மோட்டர் மூலம் மேல்நிலை தொட்டியில் நீர் நிரப்பி குடிநீர் வழங்கி வந்தநிலையில் தொட்டியின் 4 தூண்களும் சேதமாகி விரிசலடைந்து உள்ளது.

    இதனருகே குழந்தைகள் மையமும், தொடக்க பள்ளிக்கு செல்லும் பாதையும், வீடுகளும் உள்ளதால் குழந்தைகள், பெரியவர்கள் அச்சத்துடன் உள்ளோம். நீர்தேக்க தொட்டியை அகற்றி புதிய தொட்டி கட்ட வேண்டும் என்றார்.

    மேலும் இதே கிராமத்தை சேர்ந்த லதா கூறுகையில், பல ஆண்டுகளாக இந்த கிராமத்தில் சக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. செல்லம்பட்டி கூட்டுகுடிநீர் குழாய் மூலம் ஊருக்குள் வந்த தண்ணீர் ஏனோ பல மாதங்களாக வரவில்லை. இடிந்து விழும் நிலையில் இருக்கும் மேல்நிலை தொட்டியை இடித்து அப்புறப்படுத்துவதற்கு 

    • மாவட்ட கவுன்சிலர் கனிமொழியின் நிதியின் கீழ் ரூ.9.95 லட்சம் மதிப்பீட்டில் நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி சிவபத்மநாதன் அடிக்கல் நாட்டினார்.
    • வார்டு உறுப்பினர் ராஜா மறவன் உட்பட ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் ஒன்றியம் சொக்கம்பட்டி ஊராட்சியில் மாவட்ட கவுன்சிலர் கனிமொழியின் நிதியின் கீழ் ரூ.9.95 லட்சம் மதிப்பீட்டில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்கு தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளரும் மாநில தலைமை செயற்குழு உறுப்பினருமான டாக்டர் செல்லத்துரை மற்றும் அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆறுமுகச்சாமி, தி.மு.க. மாவட்ட கவுன்சிலரும். மாவட்ட துணைச் செயலாள ருமான கனிமொழி, ஒன்றிய செயலாளர் சுரேஷ், கடையநல்லூர் யூனியன் துணை சேர்மன் ஐவேந்திரன் தினேஷ், யூனியன் கவுன்சிலர்கள் கீதா மணிகண்டன், அருணாசல பாண்டியன், கிளை செயலாளர் சுப்பிரமணியன், சொக்கம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பச்சைமால், வார்டு உறுப்பினர் ராஜா மறவன் உட்பட ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • நீர் தொட்டியின் 4 தூண்களும் மற்றும் மேல் தொட்டியும் மிகவும் மோசமாக காணப்படுகிறது.
    • நீர்தேக்க தொட்டியை மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த கரியம்பா–ளையம் ஊராட்சியில் உள்ளது சுப்பிரமணிய கவுண்டன் புதூர் கிராமம்.

    இங்கு 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது நீர் தொட்டியின் 4 தூண்களும் மற்றும் மேல் தொட்டியும் மிகவும் மோசமாக காணப்படுகிறது.

    இந்த நீர்த்தேக்க தொட்டியின் மேல்புறத்தில் 3 அடியில் அரசமரம் வளர்ந்து உள்ளது. இதனால் இந்த நீர்நிலை தொட்டியை இப்பகுதி மக்கள் உடனடியாக இடித்து விட்டு புதிய நீர்த்தேக்க தொட்டியை கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நீர் நிலை தொட்டியானது ஒருவேளை சரிந்து விழுந்தால் அதன் அருகாமையில் வீடுகள் உள்ளதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உயிர் சேதம் ஏற்படும் அபாயமும் உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனை பார்வையிட்டு தொட்டியை அகற்றி விட்டு புதிய நீர்தேக்க தொட்டியை கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதிய தரைமட்ட நீர்தேக்க தொட்டியை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் திறந்து வைத்தார்.
    • கடையம் வடக்கு ஒன்றிய செயலாளரும் யூனியன் துணைச் சேர்மனுமான மகேஷ்மாயவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட்பட்ட சேர்வைகாரன்பட்டி ஊராட்சியில் ஊராட்சி நிதியில் கட்டப்பட்ட புதிய தரைமட்ட நீர்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் தலைமை தாங்கி நீர்தேக்க தொட்டியை திறந்து வைத்தார்.ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார்.

    கடையம் வடக்கு ஒன்றிய செயலாளரும் யூனியன் துணைச் சேர்மனுமான மகேஷ்மாயவன், ஊராட்சி துணைத்தலைவர் ராசம்மாள் லெட்சுமணன், ஊராட்சி உறுப்பினர் சந்தண ரோஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    இதில் கவுன்சிலர் ரம்யா, கிளைச் செயலாளர்கள் செல்வராஜ், ராஜேந்திரன், சாமுவேல், பொன்னுத்துரை, செல்லத்துரை, ஆத்திச் செல்வன், பெரியசாமி, மற்றும் கோபி ஜனார்த்தனன், பொன்ராஜ், பேச்சிமுத்து, ஞானகுமார், முருகன், பட்ட நாடார், துரை என்ற மாடசாமி, கணேசன், மாரிச் செல்வம், அருணாசலம், பாலக்குமார், கந்தசாமி, நடராஜன், கலைச் செல்வன், ரேவதி, நித்யா, சாந்தா, முப்புடாதி, கண்ணன், தேன்ராஜா, நவீன் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாத்தான்குளம் தேர்வுநிலை பேரூராட்சியில் ரூ. 98 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி-பகிர்மான குழாய்கள் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
    • விழாவில் ஆதிதிராவிடர் மக்களுக்கு 57 பேருக்கு இணைய வழி இ-பட்டாக்களும் கனிமொழி எம்.பி. வழங்கினார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் தேர்வுநிலை பேரூராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 98 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி-பகிர்மான குழாய்கள் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.

    நலத்திட்ட உதவிகள்

    விழாவில் 235 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து சமூகபாது காப்பு திட்டத்தின் கீழ் இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித ்தொகை, ஆதரவற்ற விதவை உதவிதொகை மற்றும் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண உதவித் தேவை உள்ளிட்ட அரசு நலத் திட்டங்களை 77 பேருக்கு வழங்கினார்.

    வீட்டுமனைப் பட்டா

    அதேபோல வருவா ய்த்துறை சார்பாக பெரிய தாழை, படுக்கப்பத்து, கட்டாரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 101 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களும், ஆதிதிராவிடர் மக்களுக்கு 57 பேருக்கு இணைய வழி இ-பட்டாக்களும் கனிமொழி எம்.பி. வழங்கி பேசினார்.

    விழாவில் திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புகாரி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாகின் அபூபக்கர், தாசில்தார் தங்கையா, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார், அரசு மகளிர் கல்லூரி முதல்வர் சின்னத்தாய், தி.மு.க. மாணவர் அணி துணைச் செயலாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாசலம், முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வன், மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், முதலூர் பஞ்சாயத்து தலைவர் பொன்முருகேசன், ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெயபதி, மாவட்ட தி.மு.க. பிரதிநிதி அலெக்ஸ் புருட்டோ, ஆழ்வை ஒன்றிய செயலாளர் பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்ன தாக சாத்தான்குளம் பேரூராட்சி தலைவர் ரெஜினா ஸ்டெல்லாபாய் வரவே ற்றார். முடிவில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஜோசப் நன்றி கூறினார்.

    • இந்த குடிநீர் தொட்டியை தாங்கி நிற்கும் ஆறு தூண்களும் விரிசல் ஏற்பட்டு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் சிதிலமடைந்துள்ளன.
    • மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் மண் இளகி தூண்களில் விரிசல் ஏற்பட்டிருக்ககூடும் என்று பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    பூதலூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஊராட்சி ஒன்றியம் கோவில்பத்து ஊராட்சியில் கெங்கைசமுத்திரம் செல்லும் வழியில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று அமைந்துள்ளது.1989-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் கெங்கைசமுத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள தெரு க்கள், அண்ணா நகர் அதன் அருகாமை குடியிருப்புகள் என 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் அமைப்பாக இது செயல்பட்டு வருகிறது.

    இந்த குடிநீர் தொட்டிக்கு அருகில் கோவில்பத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும், குடியிருப்புகளும் அமை ந்துள்ளன.இந்த குடிநீர் தொட்டியை தாங்கி நிற்கும் ஆறு தூண்களும் விரிசல் ஏற்பட்டு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் சிதிலம டைந்துள்ளன.

    மேலும் நாளுக்கு நாள் தூண்களில் உள்ள விரிசல்கள் விரிவ டைந்து கொண்டே வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மழை க்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் மண் இளகி தூண்களில் விரிசல் ஏற்பட்டிருக்க கூடும் என்று பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பாக ஆபத்தான நிலையில் உள்ள தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடி க்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×