search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
    X

    காரை பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும்படி காட்சியளிக்கும் தூண்கள் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி.

    ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

    • இந்த குடிநீர் தொட்டியை தாங்கி நிற்கும் ஆறு தூண்களும் விரிசல் ஏற்பட்டு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் சிதிலமடைந்துள்ளன.
    • மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் மண் இளகி தூண்களில் விரிசல் ஏற்பட்டிருக்ககூடும் என்று பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    பூதலூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஊராட்சி ஒன்றியம் கோவில்பத்து ஊராட்சியில் கெங்கைசமுத்திரம் செல்லும் வழியில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று அமைந்துள்ளது.1989-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் கெங்கைசமுத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள தெரு க்கள், அண்ணா நகர் அதன் அருகாமை குடியிருப்புகள் என 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் அமைப்பாக இது செயல்பட்டு வருகிறது.

    இந்த குடிநீர் தொட்டிக்கு அருகில் கோவில்பத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும், குடியிருப்புகளும் அமை ந்துள்ளன.இந்த குடிநீர் தொட்டியை தாங்கி நிற்கும் ஆறு தூண்களும் விரிசல் ஏற்பட்டு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் சிதிலம டைந்துள்ளன.

    மேலும் நாளுக்கு நாள் தூண்களில் உள்ள விரிசல்கள் விரிவ டைந்து கொண்டே வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மழை க்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் மண் இளகி தூண்களில் விரிசல் ஏற்பட்டிருக்க கூடும் என்று பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பாக ஆபத்தான நிலையில் உள்ள தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடி க்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×