என் மலர்

  நீங்கள் தேடியது "new building"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரூ.24.80 லட்சம் மதிப்பில் தொடக்கம்
  • செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

  வாணியம்பாடி:

  வாணியம்பாடி தொகுதி பீமகுளம் ஊராட்சி மந்தாரகுட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி கட்டிடம் மிகவும் பழுந்தடைந்ததால் புதிதாக கட்டிடம் கட்டி தர கோரி பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வாணியம்பாடி செந்தில் குமாருக்கு எம்.எல்.ஏ.வுக்கு கோரிக்கை அளித்தனர்.

  பொதுமக்களின் கோரிக்கை ஏற்று பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.24.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். அதன் அடிப்படையில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

  நிகழ்ச்சியில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்துக் கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் என்.விநாயகம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர்கள், பொது மக்கள் கலந்துக் கொண்டனர்.

  தொடர்ந்து மலை ரெட்டியூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி யில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் ரூ.4.23 லட்சம் மதிப்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பெஞ்ச், டேபிள்களை செந்தில்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார். மலை ரெட்டியூர் சென்றாய சுவாமி கோவில் செல்லும் சாலையில் புதிதாக ரூ.6.50 லட்சம் செலவில் அமை க்கப்ப ட்ட பேவர்பி ளாக் சாலை யை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். பின்னர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்த ப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்
  • பல்நோக்கு மருத்துவமனை அருகே புதிதாக ரூ.72.10 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள மருத்துவமனை கட்டப்பட உள்ள இடத்தினை ஆய்வு செய்தார்.

  நெல்லை:

  மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

  முடிவுற்ற கட்டிடங்கள்

  அந்த வகையில் இன்று காலை தூத்துக்குடி வந்த அவர் மாவட்டத்தில் பல் வேறு இடங்களில் முடிவுற்ற மருத்தவமனை கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.இதனை தொடர்ந்து கார் மூலம் நெல்லை வந்தார்.

  வி.எம். சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் காய்ச்சல் சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  ரூ.2.74 கோடி

  பின்னர் நெல்லை அரசு மருத்தவமனைக்கு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரூ.2.74 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவமனை கட்டி டங்களை திறந்து வைத்தார்.

  அந்த வகையில் ரூ.72 ½ லட்சத்தில் நுண்கதிர் துறையில் அமைக்கப்பட்ட டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகள், ரூ.26.9 லட்சத்தில் 10 படுக்கைகள் கொண்ட தீவிர அறுவைசிகிச்சைப்பிரிவு, ரூ.33.5 லட்சம் மதிப்பீட்டில் 12 படுக்கைகள் கொண்ட குழந்தைகள் அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டி டங்களை திறந்து வைத்தார்.

  புதிய மருத்துவமனை

  தொடர்ந்து பல்நோக்கு மருத்துவமனை அருகே புதிதாக ரூ.72.10 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள மருத்துவமனை கட்டப்பட உள்ள இடத்தினை ஆய்வு செய்தார். பின்னர் மாணவிகள் தங்கும் விடுதியில் அதிநவீன உணவு விடுதியை திறந்து வைத்து 'தாய் கேர்' குறித்து விழிப்புணர்வு உருவாக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

  மேலும் 2-ம் ஆண்டு மருத்துவ மாணவ, மாணவிகள் துறை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற வர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி னார்.

  நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், கலெக்டர் விஷ்ணு, மேயர் சரவணன், துணை மேயர் ராஜு, டீன் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திண்டிவனத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
  • இரவு நேரத்தில் மின்விளக்கு கள் சரியாக எரியாததால் எங்க தொட்டாலும் ஷாக் அடிக்கிறது.

  விழுப்புரம்:

  திண்டிவனத்தில் அரசு கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரி அருகே ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவர் விடுதி இயங்கி வருகிறது. இங்கு 75 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இன்று காலை கல்லூரி செல்லாமால் மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்த னர். அங்கு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு நல்ல முறையில் இல்லாததால் அவர்கள் உணவை சாப்பிட மறுத்து திடீரென உள்ளி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்த திண்டிவனம் தாசில்தார் வசந்தகிருஷ்ணன் மற்றும் ரோசணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் ஆகியோர் நேரில் சென்று, மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

  அப்போது, மாணவர்கள் விடுதியில் குடிநீர், கழிப்பறை வசதிகள் எதுவும் சரியான முறையில் இல்லை. மேலும் எங்களுக்கு தயார் செய்து வழங்கப்படும் உணவும் நல்ல முறையில் இல்லை. அதோடு இரவு நேரத்தில் மின்விளக்கு கள் சரியாக எரியாததால் எங்க தொட்டாலும் ஷாக் அடிக்கிறது. எங்களால் படிக்க முடியாமல் போய்விடுகிறது. மேலும் விடுதியை சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதால் எங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவு கிறது. ஆகையால் அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றி தந்தால் தான் போராட்டத்தை கைவிடு வோம் என்று தெரிவித்தனர். இதை தொடர்ந்து தனிதா சில்தார் கூறுகையில் இன்னும் ஒரு வாரத்தில் மாற்று இடம் வழங்கப்படும் எனவும், புதிய கட்டிடம் விரைவில் கட்டப்படும் என்று தெரிவித்தார். இதையேற்று மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்து, உணவை சாப்பிட்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விருதுநகர் கலெக்டர் அலுவலகத்துக்கு ரூ.70.57 கோடியில் புதிய கட்டிடத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ந் தேதி அடிக்கல் நாட்டுகிறார்
  • அமைச்சர்கள், நாடளுமன்ற, சட்டமன்ற, உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

  விருதுநகர்

  விருதுநகர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்டப்பட உள்ளது.

  இந்த கட்டிடம் ரூ.70.57 கோடி மதிப்பில் 6 தளங்களுடன் மொத்தம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 496 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட உள்ளது. இதன் கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 15-ந் தேதி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

  இதில், அமைச்சர்கள், நாடளுமன்ற, சட்டமன்ற, உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நகரின் மையப்பகுதியில் நகராட்சி அலுவலகம் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
  • விரிவான இடவசதியுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

  அனுப்பர்பாளையம் :

  திருப்பூர் மாவட்டத்தில் பேரூராட்சியாக இருந்த திருமுருகன்பூண்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் தொடர்ந்து பேரூராட்சியாக செயல்பட்ட அதே கட்டிடத்தில் தற்போது வரை நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

  நகராட்சி நிர்வாகத்திற்கு தேவையான போதுமான இடவசதி அந்த கட்டிடத்தில் இல்லாததால் விரிவான இடவசதியுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேலும் புதிய கட்டிடம் கட்ட 18-வது வார்டில் ராக்கியாபாளையம் ராசாத்தாகுட்டை அருகே இருந்த இடம் பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு ஒருசில கவுன்சிலர்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து, திருமுருகன்பூண்டி நகரின் மையப்பகுதியில் நகராட்சி அலுவலகம் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதே இடத்தில் நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டு, நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

  இந்த நிலையில் ரூ.3 .50 கோடி மதிப்பில் திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுதல் மற்றும் ரூ.40 லட்சம் மதிப்பில் 14-வது வார்டுக்குட்பட்ட மகாலட்சுமி டவுன்சிப் பகுதியில் மண்சாலையை தார்சாலையாக அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு பூமிபூஜை விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் குமார் முன்னிலை வகித்தார். இதில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு, 2 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.

  நகராட்சி அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டாலும், தற்போது அலுவலகம் செயல்பட்டு வரும் கட்டிடம் மூடப்படாமல், வரி வசூல் உள்பட ஒருசில பணிகளுக்காக அந்த அலுவலகம் தொடர்ந்து செயல்படும் என்று நகராட்சி தலைவர் குமார் தெரிவித்தார். நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், நகராட்சி கமிஷனர் முகம்மது சம்சுதீன், துணை தலைவர் ராஜேஸ்வரி, நகராட்சி பொறியாளர் மணி, சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், 18-வது வார்டு கவுன்சிலர் தங்கம் பூபதி, தி.மு.க. திருமுருகன்பூண்டி நகர செயலாளர் மூர்த்தி உள்பட நகராட்சி தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மேலூர் நகராட்சி அலுவலகத்தில் புதிய கட்டிடம் கட்ட பூமிபூஜை நடந்தது.
  • நகர்மன்ற தலைவர் முகமதுயாசின் பூஜை செய்தார்.

  மேலூர்

  மேலூர் நகராட்சியில் மாநில நிதி திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி அலுவலக மாடியில் கூடுதல் அலுவலக கட்டிடம் மற்றும் நகர்மன்ற கூடம் கட்டும் பணிக்கான பூமிபூஜை நடந்தது. நகர்மன்ற தலைவர் முகமதுயாசின் பூஜை செய்தார்.

  ஆணையாளர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன், துணைத் தலைவர் இளஞ்செழியன், சுகாதார அலுவலர் மணிகண்டன், ஓவர்சியர் சரவணன், நகரமைப்பு ஆய்வாளர் சரவணன், மேலாளர் தியாகராஜன், அலுவலர் ஜோதி, ஒப்பந்ததாரர் லத்தீப் மற்றும் கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புதிய பேருந்து நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
  • 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது

  புதுக்கோட்டை:

  புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய கட்டிடம் வலுவிழந்து விட்டதால் அதை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டப்படும் என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

  புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் திருச்சி பேருந்துகள் நிறுத்தம் பகுதியில் ஓரிடத்தில் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் டீ கடைக்காரர் ஒருவர் காயம் அடைந்தார்.

  இந்நிலையில் பேருந்து நிலையக் கட்டிடத்தை கலெக்டர் கவிதா ராமு தலைமையில் அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

  இந்த பேருந்து நிலைய கட்டிடம் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதன் உறுதித்தன்மையை திருச்சி என்ஐடி குழுவினர் மற்றும் அரசு பொறியியல் கல்லூரி பொறியாளர்கள் இருவாரங்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர்.

  அப்போது இந்த கட்டிம் வலுவிழந்து விட்டதால் இடித்து அகற்றுமாறு பரிந்துரைத்தனர். இது குறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தென்காசி அருகே உள்ள அய்யாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று ஒன்றிய கவுன்சிலர் அழகு சுந்தரத்திடம் பள்ளி நிர்வாகத்தினர் கோரிக்கை வைத்திருந்தனர்.
  • பழனி நாடார் எம்.எல்.ஏ. தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் பூமி பூஜையை தொடங்கி வைத்தனர்.

  தென்காசி:

  தென்காசி அருகே உள்ள அய்யாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று ஒன்றிய கவுன்சிலர் அழகு சுந்தரத்திடம் பள்ளி நிர்வாகத்தினர் கோரிக்கை வைத்திருந்தனர். அவர் இந்த கோரிக்கையை தி.மு.க.மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனிடம் மனுவாக அளித்திருந்தார்.

  மாவட்டச் செயலாளர், பழனி நாடார் எம்.எல்.ஏ.விடம் தெரிவித்ததையடுத்து சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்கு நேற்று பூமி பூஜை நடந்தது.

  விழாவிற்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி, துணை தலைவர் உதயகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். பழனி நாடார் எம்.எல்.ஏ. தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் பூமி பூஜையை தொடங்கி வைத்தனர்.

  விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ், துணை தலைவர் சண்முகசுந்தரம், வட்டார கல்வி அலுவலர்கள் இளமுருகன், சண்முகசுந்தரபாண்டியன், தி.மு.க. பேரூர் செயலாளர் சுந்தரபாண்டியபுரம் பண்டாரம், சேர்மன் காளியம்மாள் செல்வகுமார், மேலகரம் சுடலை, குற்றாலம் குட்டி, ஜெகதீசன், மாவட்ட பிரதிநிதி வல்லம் செல்வம், கூட்டுறவு சங்க தலைவர் சுரேஷ், ஒன்றிய துணைச் செயலாளர் ஆனந்த், ஆனந்தராஜ், ஆவின் ஆறுமுகம், கிளைச் செயலாளர் செல்வக்குமார், அரிச்சந்திரன், தங்கராஜ், வேல்ராஜ், கருப்பசாமி, வேதம்புதூர் பிச்சையா, துரைப்பாண்டி, செல்வம், கதிரவன், அழகுதுரை, குட்டி ராஜன், அரசு ஒப்பந்ததாரர் குத்தாலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒவ்வொரு ஊராட்சியில் ஊராட்சிக்கு தேவையான கட்டிடங்கள் மற்றும் பல்வேறு வகைக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
  • பழமையான ஊராட்சி கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

  நெகமம்:

  கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் 34 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

  ஒவ்வொரு ஊராட்சியில் ஊராட்சிக்கு தேவையான கட்டிடங்கள் மற்றும் பல்வேறு வகைக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் செட்டியக்காபாளையம் ஊராட்சியில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

  இங்கு செயல்பட்டு வந்த ஊராட்சி மன்ற அலுவலகம் பழைமையான கட்டிடம் என்பதால் அவ்வப்போது மேற்கூரைகள் இடிந்து விழுந்தது. மேலும் மழை காலத்தில் தண்ணீர் கசிந்து உள்ளே இருந்த தளவாட பொருட்கள் அனைத்தும் நனைந்து வீணாகி வந்தன.

  இதனால் பழமையான ஊராட்சி கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

  இந்நிலையில் அங்கிருந்த ஊராட்சி மன்ற அலுவலகம் அங்குள்ள நூலக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. கிராம மக்கள் கோரிக்கை மனுக்கள் அளிக்கவும், வீட்டுவரி, குடிநீர் கட்டணம், மற்றும் அரசு அலுவல் தொடர்பாகவும் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.

  நூலக கட்டிடம் பழைய கட்டிடமாக உள்ளது. இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் வேகமாக வடிகிறது. இதன் காரணமாக தளவாட பொருட்கள், முக்கிய ஆவணங்கள் நனையும் நிலை ஏற்படுகிறது. இதனால் ஆவணங்களை அங்கு வைக்க முடிவதில்லை. இடவசதியும் குறைவாக உள்ளது.

  பொதுமக்கள் அலுவ லகத்திற்கு வந்து செல்லவும் சிரமமாக உள்ளது. இதையடுத்து செட்டியக்காபாளையம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டது. கட்டப்பட்டு மாதங்கள் பல ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது அந்த இடத்தில் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

  செட்டியக்காபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் தற்போது நூலக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. நூலக கட்டிடம் ஏற்கனவே பழமையான கட்டிடம் அதுவும் சிதலமடைந்து, மழைக்காலத்தில் மேற்கூரையில் தண்ணீர் தேங்கி உள்புறம் அதிகளவில் கசிந்து வருகிறது.

  மேலும் இடவசதியும் பற்றாக்குறை இதனால் பொதுமக்கள் அங்கு சென்று வர அச்சம் அடைகின்றனர். ஊராட்சி பணியாளர்கள் ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க முடியாமல் திணறி வருகின்றனர். எனவே பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் தயாராக உள்ள புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்து உள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரூ.25 லட்சத்தில் புதிய கட்டிடங்களை எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் தொடங்கி வைத்தார்.
  • சட்டமன்ற உறுப்பினர் நிதி ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கலையரங்க கட்டிடம் கட்டப்பட்டது.

  மேலூர்

  மேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட உறங்கான்பட்டி ஊராட்சி, தர்மசானபட்டி ஆதிதிராவிடர் காலனியில் சட்டமன்ற உறுப்பினர் நிதி ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கலையரங்க கட்டிடம் கட்டப்பட்டது.

  இதை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. திறந்துவைத்தார். சருகுவலையபட்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதி ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டும் பணிக்கும் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

  இந்த நிகழ்ச்சியில் மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசந்தர், ஜெயபாலன்மேலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்ராஜேந்திரன், உறங்கான்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், ஒன்றிய பாசறை தலைவர் சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எம்.ஆர்.சி. நகரில் நகர் நிர்வாக அலுவலகத்துக்கு 11 மாடியில் புதிய கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். #EdappadiPalaniswami
  சென்னை:

  தமிழ்நாடு முழுவதும் உள்ள 11 மாநகராட்சிகள் (சென்னை நீங்கலாக) மற்றும் 124 நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக ஒருங்கிணைப்பு வழிகாட்டும் அலுவலகமாக நகராட்சி நிர்வாக ஆணையரகம் செயல்பட்டு வருகிறது.

  இதேபோன்று, 528 நகர்ப்புற அமைப்பான பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக ஒருங்கிணைப்பு வழிகாட்டும் அலுவலகமாக பேரூராட்சிகள் இயக்ககம் செயல்பட்டு வருகிறது.

  தற்போது சென்னை, சேப்பாக்கம், எழிலகம் வளாகத்தில் 200 அலுவலக ஊழியர்களுடன் 1640 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் நகராட்சி நிர்வாக அலுவலகமும், சென்னை, குறளகம் வளாகத்தில் 120 அலுவலக ஊழியர்களுடன் 1100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் பேரூராட்சிகளின் இயக்ககமும், போதுமான இட வசதியின்றி செயல்பட்டு வருகின்றது.

  தமிழ்நாடு அரசினால் 664 நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் வழங்கல் திட்டப்பணிகள், பாதாள கழிவுநீரகற்று திட்டப்பணிகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், தூய்மை இந்தியா திட்டப்பணிகள், அம்ருத் திட்டப்பணிகள், எழில்மிகு நகரமைப்பு பணிகள், சாலை திட்டப்பணிகள், மழைநீர் கால்வாய் அமைத்தல், நவீன தகன எரிவாயு மேடைகள் அமைத்தல், இறைச்சி கூடங்கள் அமைத்தல் போன்ற பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்ய முறைப்படி காலவாரியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டியுள்ளது.

  இவற்றிற்கான ஆய்வு கூட்டரங்க வசதிகள் இல்லாத காரணத்தினால், பிற துறை அலுவலக ஆய்வு கூட்டரங்கில் ஒவ்வொரு முறையும் அனுமதி பெற்று இக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

  இந்த சூழலில், நகராட்சி நிர்வாகம் மற்றும் பேரூராட்சிகள் இயக்ககம் அனைத்து வசதிகளுடன் தனித்து இயங்கக்கூடிய வகையில் வசதிகளை உருவாக்குவதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகரில், 11,000 சதுர மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் 11 தளங்களுடன், 73 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகராட்சி நிர்வாக ஆணையரகம் மற்றும் பேரூராட்சிகள் இயக்கக அலுவலகங்களை உள்ளடக்கிய நகர் நிர்வாக அலுவலக வளாகக் கட்டடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

  இப்புதிய கட்டடத்தின் ஒவ்வொரு தளமும் சராசரியாக 1000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. அனைத்து தளங்களுக்கும் மைய அணுகுமுறையில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.

  இக்கட்டடத்தின், தரைத்தளத்தில் இருக்கை வசதியுடன் கூடிய உணவகம், தரை மற்றும் முதல் தளத்தில் 252 இருக்கை வசதி கொண்ட உயர் கூரையுடன் கூடிய கருத்தரங்க கூடம், ஆறாம் தளத்தில் 1015 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஆய்வு கூட்ட அரங்கு, காணொளி கூட்ட அரங்கு, பயிற்சி அரங்குகள், ஊழியர்கள் உணவு அருந்துமிடம் மற்றும் கருத்து கலந்தாய்வு அரங்கு, ஏழாம் மற்றும் எட்டாம் தளங்களில் பேரூராட்சிகள் இயக்கக அலுவலகமும், ஒன்பது, பத்து மற்றும் பதினொன்றாம் தளங்களில் நகராட்சி நிர்வாக அலுவலகமும் செயல்படும்.

  மேலும், அதிவேக வசதியுடன் கூடிய மின்தூக்கி வசதிகள், கண்காணிப்பு கேமரா வசதிகள், பூங்கா, வாகனங்கள் நிறுத்துமிடம், தீயணைப்பு வசதிகள், அனைத்து தளங்களுக்கும் கழிவறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஆகிய அனைத்து வசதிகளுடன் இவ்வலுவலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

  நகராட்சி நிர்வாக அலுவலகம் மற்றும் பேரூராட்சிகள் இயக்கக அலுவலகம் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு போதுமான இடவசதியுடன் அலுவலகக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு தேவையான உள்ளாட்சி சார்ந்த சேவைகளை சிறப்புடன் ஆற்றிட இயலும்.

  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் 194 வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் இளநிலை வரைவு அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஓட்டுநர், பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர் மற்றும் துப்புரவு பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 7 வாரிசு தாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

  நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சி.என். மகேஸ்வரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். #EdappadiPalaniswami


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp