search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் பகுதியில்  ரூ.65 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
    X

    திருச்செந்தூர் பகுதியில் ரூ.65 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

    • கீழநாலுமூலைகிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.20½ லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறையும் கட்டப்பட்டுள்ளது.
    • குமாரபுரத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலும் புதிதாக சிறுவர்கள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் யூனியன் மேலத்திருச்செந்தூர் பஞ்சாயத்துக்குட்பட்ட கிருஷ்ணா நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5½ லட்சம் மதிப்பில் புதிதாக பயணியர் நிழற்குடையும், கீழநாலுமூலைகிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.20½ லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறையும் கட்டப்பட்டுள்ளது.

    அதேபோல், 15-வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட சுனாமி நகரில் ரூ.18.98 லட்சம் மதிப்பிலும், குமாரபுரத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலும் புதிதாக சிறுவர்கள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நகராட்சி பகுதியில் ரூ.82 லட்சம் மதிப்பில் புதிதாக தார் சாலைகள் போடப்பட்டுள்ளது.

    இதன் திறப்புவிழா நேற்று அந்தந்த பகுதிகளில் நடந்தது. விழாவிற்கு திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன் தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, மேலத்திருச்செந்தூர் பஞ்சாயத்து தலைவர் மகாராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ் வரவேற்றார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மொத்தம் ரூ.64.98 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை, பள்ளி வகுப்பறை, சிறுவர் பூங்காக்கள் போன்றவற்றையும், ரூ.82 லட்சத்தில் போடப்பட்ட தார் சாலையையும் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில், திருச்செந்தூர் தாசில்தார் வாமனன், நகராட்சி ஆணை யாளர் கண்மணி, யூனியன் ஆணையர் அன்றோ, தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், கீழநாலுமூலைகிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திராணி, ஊர் தலைவர் முத்துகுமார், மேலத்திருச்செந்தூர் பஞ்சாயத்து துணை தலைவர் முருகன், மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் ராமஜெயம், அரசு வழக்கறிஞர் சாத்ராக், திருச்செந்தூர் நகராட்சி, நகர தி.மு.க. செயலாளர் வாள்சுடலை, ஒன்றிய பொருளாளர் பரிசமுத்து, தி.மு.க. சுற்றுசூழல் அணி தெற்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன், கிளை செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×