search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "hunger strike"

  • சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
  • முதற்கட்ட பேராட்டமே நிறைவு, தனது போராட்டம் முடிவுக்கு வரவில்லை.

  லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவரது போராட்டத்திற்கு ஆதரவாக ஏராளமான மக்கள் திரண்டனர்.

  இந்நிலையில் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரத போராட்டத்தை 21-வது நாளான இன்று முடித்துக்கொண்டார்.

  பின்னர் பேசிய அவர், "முதற்கட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் முடிவடைவதாகவும், ஆனால் தனது போராட்டம் முடிவுக்கு வரவில்லை என்றும் தெரிவித்தார். இந்த உண்ணாவிரதத்தின் முடிவு, போராட்டத்தின் புதிய கட்டத்தின் தொடக்கம்" என்றும் வாங்சுக் குறிப்பிட்டார்.

  இதற்கிடையே, லடாக் யூனியன் பிரதேச மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் முன்வைத்தார்.

  பின்னர், வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குரிமையை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • முஜிபுர்ரகுமான் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.
  • குடும்பத்தை பிரிந்துள்ள நாங்கள் எங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ முடியவில்லை.

  திருச்சி:

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனைக்கு பின்னர் விடுதலை ஆன இலங்கைத் தமிழர் சாந்தன் (வயது 55) சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

  சிறை விடுவிப்புக்குப் பின்னர், அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டதாலும், இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும் அவர் உயிரிழந்தார் என கூறி திருச்சி சிறப்பு முகாமில் உள்ள அகதிகள் முஜிபுர்ரகுமான், சுகந்தன் ஆகியோர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

  தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் சுகந்தன் போராட்டத்தை திரும்பப் பெற்றார். முஜிபுர்ரகுமான் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

  இன்று 3-வது நாளாக அவரது உண்ணாவிரதம் நீடிக்கிறது. முஜிபுர்ரகுமான் இலங்கையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  இதனிடையே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடை ராபர்ட் பயஸ் உலகத் தமிழர்களுக்காக எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

  33 ஆண்டுகள் சிறை வாசத்துக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட நாங்கள், விடுவிப்பு என்ற பெயரில் சிறை மாற்றம் செய்யப்பட்டதாகவே கருதுகிறோம். எங்களை குடும்பத்தாருடன் செல்ல அனுமதிக்கவில்லை. சாந்தனை அனுப்பியிருந்தால் அவர் சில காலமாவது பெற்றோருடன் வசித்திருப்பார்.

  அதுபோலவே முருகன் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட எங்கள் நிலையும் உள்ளது. குடும்பத்தை பிரிந்துள்ள நாங்கள் எங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ முடியவில்லை. எங்களுக்கு விடுவிப்பு எப்போது என்பது புரியவில்லை.

  இனியாவது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து எங்களை விடுவிக்க வேண்டும்

  இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

  • 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
  • கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

  தஞ்சாவூர்:

  தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

  தஞ்சை மாவட்ட செயலாளர் முத்துராஜா தலைமை தாங்கினார்.

  போராட்டத்தை மாநில செயலாளர் தமிழ்வாணன் தொடங்கி வைத்தார்.

  கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட செயலாளர்கள் ராமச்சந்திரன் ( திருவாரூர் ), சங்கர் (நாகை) ஆகியோர் விளக்க உரையாற்றினர்.

  மாவட்ட இணை செயலாளர்கள் ராஜா, குருநாதன், கோவிந்தராஜன், கோட்டச் செயலாளர்கள் ஜெகதீஷ், டோனிபிரிட்மேன், சந்துரு, முருகேஷ், தனசேகர், மோகன்ராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கால்நடை ஆய்வாளர் பயிற்சி போர்க்கள அடிப்படையில் தொடங்கி கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

  தேர்தல் வாக்குறுதிபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

  முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர்களுக்கு அடுத்த கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்த ப்பட்டது.

  இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கோதண்டபாணி, சத்துணவு ஊழியர் சங்கம் ரவிச்சந்திரன், கால்நடை ஆய்வாளர் சங்கம் கௌரவ ஆலோசகர் துரைசாமி மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  போராட்டத்தை கால்நடை ஆய்வாளர் சங்கம் ( ஓய்வு ) மாநில செயலாளராக ஆறுமுகம் முடித்து வைத்து சிறப்புரையாற்றினார்.

  முடிவில் மாவட்ட மகளிரணி செயலாளர் அந்தோணி ஜெயந்தி நன்றி கூறினார்.

  • எங்களது கோரிக்கை நிறைவேற்றப் படாமலேயே உள்ளது. தி.மு.க. அரசு அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
  • கடந்த 7 நாட்களில் இதுவரை 125 பேர் மயக்கம் அடைந்துள்ளனர்.

  சென்னை:

  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் 3 ஆசிரியர் சங்கத்தினர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது போராட்டம் இன்று 7-வது நாளாக நீடிக்கிறது.

  தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வருபவர்கள் பணி நிரந்தரம் கோரி இன்று 7-வது நாளாக காலவரையற்ற காத்திருப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

  சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அதனை உடனே நிறைவேற்ற கோரியும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

  இவர்களை போன்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பிலும் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

  தமிழகத்தில் பணிபுரிந்து வரும் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சமஊதியம் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை நிறைவேற்றக்கோரி இந்த ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

  அந்த சங்கத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கடந்த 28-ந்தேதி முதல் உண்ணாவிரத போராட்டத் தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 4-வது நாளாக அவர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது.

  இதுதொடர்பாக அந்த சங்கத்தின் நிர்வாகி ஒருவர் கூறும்போது, கடந்த ஆட்சியின்போதும் சமவேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் போராட்டம் நடத்தினோம்.

  அப்போது மு.க.ஸ்டாலின் நேரில் வந்து எங்களுக்கு ஆதரவு தெரிவித்தார். நான் ஆட்சிக்கு வந்ததும் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அவர் தெரிவித்தார்.

  இதன்படி தேர்தல் வாக்குறுதியையும் அளித்திருந்தார். ஆனால் எங்களது கோரிக்கை நிறைவேற்றப் படாமலேயே உள்ளது. தி.மு.க. அரசு அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

  எங்களது குழந்தைகளுக்கு மட்டும் உணவு வழங்கிவிட்டு நாங்கள் பட்டினி கிடந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்று அந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

  ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நலச்சங்கத்தினரும் டி.பி.ஐ. வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நல சங்கம், மற்றும் 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் இவர்களும் தொடர் உண்ணா விரத போராட்டத்தில் ஈடு பட்டு இப்படி 3 சங்கத்தினரும் ஒரே நேரத்தில் போராட்டம் நடத்தி வருவதால் பள்ளி கல்வித்துறை அலுவலகம் பரபரப்பாக காட்சி அளிக்கிறது.

  சாப்பிடாமல் தங்களது உடலை வருத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் தினமும் மயக்கம் அடைந்து வருகிறார்கள். கடந்த 7 நாட்களில் இதுவரை 125 பேர் மயக்கம் அடைந்துள்ளனர்.

  இதுபோன்று மயக்கம் அடைபவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. டி.பி.ஐ. வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

  • சந்திரபாபு நாயுடு ஜெயிலில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டது.
  • தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

  திருப்பதி:

  ஆந்திர மாநிலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக முன்னால் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சி.ஐ.டி. போலீஸ்சார் கைது செய்தனர்.

  பின்னர் விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சந்திரபாபு நாயுடுவை ஆஜர் படுத்தினர். கோர்ட்டில் இருதரப்பு வாதங்கள் முடிந்த பிறகு சந்திரபாபு நாயுடுவை வரும் 22-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி  உத்தரவிட்டார்.

  இதையடுத்து சந்திரபாபு நாயுடுவை ராஜ மகேந்திரபவரத்தில் உள்ள ஜெயிலில் நள்ளிரவு அடைத்தனர். ஜெயிலில் அவருக்கு 7691 கைதி எண் வழங்கப்பட்டது.

  ஜெயிலில் சந்திரபாபு நாயுடுவுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு உள்ளன. மேலும் வீட்டு உணவு வழங்கவும் நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

  இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு ஜெயிலில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டது.

  இந்த பந்திற்கு ஜனசேனா, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் லோக் சத்தா கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

  தெலுங்கு தேசம் கட்சி பந்த் அறிவிக்கப்பட்டதால் ஆந்திரா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

  மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  ஆந்திராவில் பந்த் காரணமாக மாநிலத்தில் 50 சதவீதத்திற்கும் மேலான கடைகள் அடைக்கப்பட்டன. வாகனங்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

  தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. வாகனங்களின் டிரைவர்கள் சிலர் காயம் அடைந்தனர்.

  போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்தனர்.

  விஜயவாடா, கர்னூல், கடப்பா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனால் ஆந்திராவில் பதட்டம் நிலைவியது.

  ஆந்திர மாநில எல்லையோரம் உள்ள வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து வழக்கம் போல ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.

  ஆந்திர எல்லையில் இருந்து முக்கிய பஸ் நிறுத்தங்களில் அந்த மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  வேலூர் திருப்பதி இடையே இன்று வழக்கம் போல பஸ்கள் இயக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் ஏழுமலையான் கோவிலுக்கு சென்றனர்.

  பந்த் காரணமாக ஆந்திராவுக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் தமிழக எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

  திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

  பந்தால் பக்தர்கள் அவதி அடையக் கூடாது என்பதற்காக திருப்பதிக்கு மட்டும் பந்த் இல்லை என விலக்கு அளித்துள்ளனர். திருப்பதியில் கடைகள் ஓட்டல்கள் டீக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளது.

  பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. பக்தர்கள் சிரமம் இன்றி கோவிலுக்கு சென்று வந்தனர்.

  • ஆந்திரா மற்றும் தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டது.
  • ஆந்திராவில் போராட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டது.

  கிருஷ்ணகிரி:

  ஆந்திரா மாநிலத்திற்கு தமிழகத்தில் இருந்து வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டன.

  கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதிகளில் இருந்து தினமும் 60க்கும் மேற்பட்ட தமிழக அரசு பஸ்கள் ஆந்திராவிற்கு இயக்கப்படுகிறது. அதே போல் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு 30-க்கும் மேற்பட்ட ஆந்திர அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தென்மாவட்டங்களிலிருந்து ஆந்திரா மாநிலம் திருப்பதிக்கு கிருஷ்ணகிரி வழியாக செல்வது வழக்கம்.

  அதே போல் ஓசூரில் பணிபுரியும் ஆந்திரா மாநில தொழிலாளர்கள் விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு விடுமுறை சென்று வருவார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆந்திரா மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.

  இதனை கண்டித்து ஆந்திரா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தது. இதனால் ஆந்திரா மற்றும் தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டது.

  திருப்பதி செல்லும் பக்தர்கள் மற்றும் தொழிலாளர்கள் அவதியடைந்தனர்.

  இந்நிலையில் ஆந்திராவில் போராட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டது.

  இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் ஆந்திரா பஸ்கள் ஓசூர், கிருஷ்ணகிரிக்கு பயணிகளை ஏற்றி செல்ல வந்தது. அதே போல் தமிழக பஸ்களும் ஆந்திரா மாநிலத்திற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றன.

  இதனால் வழக்கம் போல் நேற்று காலை முதல் ஆந்திரா மாநிலத்திற்கு பஸ்கள் சென்று வந்தன.

  • உண்ணாவிரத போராட்டத்தில் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள அக்கட்சி தலைவர் வலியுறுத்தல்.
  • தெலுங்கு தேச கட்சியினர் கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர்.

  ஆந்திராவில், முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டி இருக்கிறது. மேலும், சந்திரபாபு நாயுடு கைதுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாளை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்து இருக்கிறது.

  தெலுங்கு தேசம் கட்சியின் அச்ச நாயுடு உண்ணாவிரத போராட்டத்தில் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். முன்னதாக சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆந்திரா முழுக்க தெலுங்கு தேச கட்சியினர் கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர். உருவ பொம்மைகளை தீயிட்டு கொளுத்தினர்.

  மாநிலம் முழுவதிலும் லாரிகள் ஊர்களின் எல்லையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நிறுத்தப்பட்டன. மாநிலம் முழுவதிலும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

  இதன் காரணமாக ஆந்திர மாநிலம் உய்யூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட 7 மண்டலங்களில் வரும் 15ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு போடப்பட்டுள்ளது.

  • தி.மு.க இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் உண்ணா விரத போராட்டம் நடந்தது.
  • இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, எஸ்.ஆர்.சிவ லிங்கம், டி.எம்.செல்வ கணபதி ஆகியோர் தலைமை தாங்கினர். எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி, மேயர் ராமச்சந்திரன் அவைத்தலைவர் சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  சேலம்:

  நீட் விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் பெற்றிட வேண்டி தி.மு.க இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் உண்ணா விரத போராட்டம் நடந்தது.

  இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, எஸ்.ஆர்.சிவ

  லிங்கம், டி.எம்.செல்வ கணபதி ஆகியோர் தலைமை தாங்கினர். எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி, மேயர் ராமச்சந்திரன் அவைத்தலைவர் சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  இளைஞர் அணி அமைப்பாளர்கள் அருண் பிரசன்னா, வீரபாண்டி டாக்டர் பிரபு, மணிகண்டன், மாணவரணி அமைப்பாளர்கள் கோகுல் காளிதாஸ், கண்ணன், சீனிவாசன், மருத்துவ அணி அமைப்பாளர்கள் அருள், கே.கே.கோகுல், மாவட்ட துணை செயலாளர்கள்பாரப்பட்டி சுரேஷ்குமார், குமரவேல், திருநாவுக்கரசு, சுந்தரம், சம்பத், மண்டல தலைவர்கள் அசோகன், கலையமுதன், உமாராணி, மாநகர இளைஞரணி அமைப்பாளர் கேபிள்

  சரவணன், துணை அமைப்பா ளர்கள் பிரசன்னரமணன், சோளம்பள்ளம் கார்த்தி செழியன், லோகேஷ், இப்ராகிம், மனோஜ், ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே. டி.மணி, தாமரைக்கண்ணன், சங்கர் என்ற சாமிநாதன்.

  பொதுக்குழு உறுப்பினர்கள் வக்கீல் எஸ்.ஆர்.அண்ணாமலை, நாசர் கான், குபேந்திரன், பூபதி, கோபால், சந்திரமோகன், மாநகர செயலாளர் ரகுபதி, துணைசெயலாளர்கள் கணேசன், தினகரன், பகுதிச் செயலாளர் தமிழரசன் சரவணன், ஜெயக்குமார், சாந்தமூர்த்தி தனசேகரன், ஜெகதீஷ், முருகன், மணல்மேடு மோகன், ராஜா ஒன்றிய செயலாளர்கள் வெண்ணிலா சேகர், விஜயகுமார், ரெயின்போ நடராஜன், சக்கரவர்த்தி செழியன், உமாசங்கர், அறி

  வழகன், ரமேஷ் செல்வ குமரன், சீனிவாச பெருமாள், வினு சக்கரவர்த்தி, சின்னு, பரமசிவம்,நல்லதம்பி ராஜேஷ், நகர செயலாளர் பாஷா, இலக்கிய அணி புலவர் முத்து கலைமாமணி, நிலவாரப்பட்டி தங்க ராஜ், ஏ.ஏ.ஆறுமுகம், நிர்மலா உள்பட ஆயிரக்கணக்கானோர் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  • நீட் தேர்வு ரத்து செய்ய மறுக்கும் மத்தியஅரசு மற்றும், தமிழக கவர்னரை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
  • நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் தலைமை வகித்தனர்.

  நாமக்கல்:

  நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி, மருத்துவர் அணி, மாணவரணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீட் தேர்வு ரத்து செய்ய மறுக்கும் மத்தியஅரசு மற்றும், தமிழக கவர்னரை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

  நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் தலைமை வகித்தனர். இளைஞரணி மாநில துணை செயலாளர் ஆனந்த்குமார் எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  போராட்டத்தில் நீட்தேர்வை கொண்டு வர வேண்டும். தமிழக ஆளுநர் ரவி இடையூறாக இருக்க கூடாது என வலியுறுத்தினர்.

  போராட்டத்தில் பார் இளங்கோவன், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத், துணை அமைப்பாளர் இளம்பருதி, மருத்துவர் அமைப்பாளர் தீபக்குமார் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, துணை அமைப்பாளர்கள் சுந்தர், நவலடி ராஜா , கதிர், ஜெகதீசன், மருத்துவரணி தலைவர் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.