என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெம்மேலி"

    • மீனவர் பகுதியில் அதிகளவு கடல் அரிப்பு ஏற்பட்டு, கடல்நீர் ஊர் புகுந்து பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
    • அரசு சார்பில் 2023-ல், ரூ.25 கோடி செலவில் கடலில் தூண்டில் வளைவு அமைக்க நிதியும் ஒதுக்கப்பட்டது.

    மாமல்லபுரம்:

    சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் ரூ.6078.40 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் 3-வது ஆலையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இப்பணிகளால் அருகில் குடியிருக்கும் மீனவர் பகுதியில் அதிகளவு கடல் அரிப்பு ஏற்பட்டு, கடல்நீர் ஊர் புகுந்து பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    அரசு சார்பில் 2023-ல், ரூ.25 கோடி செலவில் கடலில் தூண்டில் வளைவு அமைக்க நிதியும் ஒதுக்கப்பட்டது. இன்று வரை பணிகள் ஏதும் தொடங்கவில்லை.

    இந்த நிலையில் அப்பகுதியில் குடியிருக்கும் 150 மீனவர் குடும்பத்தினர் இன்று மீன்பிடிப்பை தவிர்த்தனர். பின்னர் தங்களின் உயிர் பாதுகாப்பிற்கு, அரசு விரைவில் தூண்டில் வளைவு அமைத்து தரவேண்டும் என அரசுக்கு கோரிக்கையை வைத்து, நெம்மேலி குப்பம் மீனவர் பஞ்சாயத்து சார்பில் 300-க்கும் மேற்பட்டோர், ஊருக்குள் நுழையும் சாலையில் அமர்ந்து ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

    போராட்டம் நடத்தியவர்களிடம் திருப்போரூர் தாசில்தார் சரவணன், நெம்மேலி ஊராட்சி தலைவர் ரமணி சீமான் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் தென்சென்னை மக்கள் பயன்பெறுவார்கள்.
    • சீர்மிகு சென்னையை உருவாக்கியதில் திமுகவுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் ரூ.2,465 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை இன்று திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 95 முடிவுற்ற திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.1,802 கோடி மதிப்பீட்டிலான 39 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

    இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:

    * நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

    * எனது இதயத்திற்கு நெருக்கமான திட்டம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்.

    * அமைச்சர் நேரு எதையும் நேர்த்தியாக பிரமாண்டமாக செய்யக்கூடியவர்.

    * நாம் செயல்படுத்திய திட்டங்களை பட்டியல் போட்டால், இன்று ஒரு நாள் போதாது.

    * நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    * நிதி நெருக்கடியிலும், குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    * மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் வடசென்னை மக்கள் பயன்பெறுகின்றனர்.

    * நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் தென்சென்னை மக்கள் பயன்பெறுவார்கள்.

    * கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மூலம் தென் சென்னையில் 9 லட்சம் மக்கள் பயன்பெறுவர்.

    * சீர்மிகு சென்னையை உருவாக்கியதில் திமுகவுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.

    * சென்னையில் மேம்பாலம் உள்ளிட்ட பல கட்டமைப்புகள் திமுக ஆட்சியில்தான் உருவானது.

    * சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    * வெற்று அறிவிப்புகளை வெளியிடும் அரசு திமுக அரசு கிடையாது என்று கூறினார்.

    • பரிந்துரைகளை, அடுத்த ஆண்டு அக்.31-க்குள் சமர்ப்பிக்கும்.
    • 2026 ஏப்.1 முதல், தமிழ்நாடு நிதியை பெற துவங்கும்

    மாமல்லபுரம்:

    டெல்லியில் இருந்து மத்திய அரசின் 16-வது நிதிக்குழு தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில், செயலர் ரிவத்விக் பாண்டே, உறுப்பினர்கள் அன்னி ஜார்ஜ், அஜய் நாராயன்ஜா, மனோஜ் பாண்டே, அன்னி ஜார்ஜ் மேத்யு, சவும்யா கண்டி கோஷ், உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினர் 4 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளனர்.

    அடுத்த 5 ஆண்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் வரி வருவாய் திட்டம் எப்படி இருக்க வேண்டும், எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும், என்பது தொடர்பான பல்வேறு தகவல்கள் மற்றும் அதற்கான தரவுகளை ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று இந்த நிதிக்குழு சேகரித்து வருகிறது.


    இதன் ஒரு பகுதியாக இன்று காலை மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் இயங்கிவரும் 15 கோடி லிட்டர் கொள்ளளவு, கடல்நீரை குடிநீராக்கும் ஆலையை குழுவினர் ஆய்வு செய்து, அதன் செயல்பாடுகள், உற்பத்தி, பாது பயன்பாடு, வருவாய் உள்ளிட்ட முக்கிய விஷயங்களை அதிகாரிகளிடம் கேட்டரிந்தனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழ்நாட்டை பொறுத்தவரை 9-வது நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழ்நாட்டிற்கு, 7.931 சதவீத மாக இருந்த நிதி பகிர்வு, 15-வது நிதிக்குழுவால், 4.079 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால், 3.57 லட்சம் கோடி ரூபாய் வரை தமிழ்நாட்டிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே, தமிழக அரசுக்கான நிதி பகிர்வை அதிகரிக்க வேண்டும் என, தமிழக அரசு சார்பில், 16-வது நிதிக் குழுவிடம் வலியுறுத்தப்பட உள்ளது. அரசின் தேவைகளை எடுத்துரைத்து நிதி பெறும் பணி, வணிக வரித்துறை செயலர் பரதேஜந்திர நவ்னீத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தும் 16-வது நிதிக்குழு, தன் பரிந்துரைகளை, அடுத்த ஆண்டு அக்.31-க்குள் சமர்ப்பிக்கும். இக்குழு பரிந்துரைப்படி, 2026 ஏப்.1 முதல், தமிழ்நாடு நிதியை பெற துவங்கும்

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஆய்வின் போது குடிநீர் வடிகால் வாரிய முதன்மை செயலர் கார்த்திகேயன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், எஸ்.பி. சாய்பிரனீத் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஏற்றுமதி தொழில் சார்ந்த நிறுவனங்களை பார்வையிட சென்றனர். 

    ×