search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Egmore"

    எழும்பூர் போலீஸ் குடியிருப்பில் ஏட்டு வீட்டில் நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் ஏட்டு ராஜன்.

    அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் இவர் நேற்று சொந்த ஊரான தஞ்சைக்கு சென்று விட்டு திரும்பினார். எழும்பூர் போலீஸ் குடியிருப்புக்கு வந்ததும் தனது வீட்டில் அசந்து தூங்கிவிட்டார்.

    இன்று காலையில் எழுந்து தான் எடுத்து வந்த பையில் இருந்த 10 பவுன் நகையை பீரோவில் வைப்பதற்காக பார்த்தார். அப்போது அது காணாமல் போயிருந்தது. இதுபற்றி எழும்பூர் போலீசில் ஏட்டு ராஜன் புகார் செய்தார்.

    இதுதொடர்பாக எழும்பூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பையில் இருந்த நகை காணாமல் போனது எப்படி? என்று தெரியவில்லை.

    வீட்டில் வைத்திருந்த போது திருடப்பட்டதா? இல்லை வேறு எங்காவது வைத்து நகை மாயமானதா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    எழும்பூர் புதுப்பேட்டையில் 80 போலீஸ் குடியிருப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். #EdappadiPalaniswami

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், சென்னை, காமராஜர் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தின் அருகில் 2 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவினை திறந்து வைத்தார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோயம்புத்தூர் மாநகர் காந்திபுரத்தில் 10 கோடியே 90 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 128 காவலர் குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

    44 கோடியே 76 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 339 காவலர் குடியிருப்புகள், காவல் நிலையம், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடம், தீயணைப்பு ஊர்தி நிறுத்துவதற்கான கட்டடம் மற்றும் திண்டுக்கல், காஞ்சிபுரம் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 3 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

    சென்னை எழும்பூர் புதுப்பேட்டையில் 80 காவலர் குடியிருப்புகள், திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 9-ம் அணிக்காக 82 காவலர் குடியிருப்புகள் மற்றும் திருநெல்வேலி ஊரக ஆயுதப்படைக்காக 162 காவலர் குடியிருப்புகள், திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தில் 15 காவலர் குடியிருப்புகள், என 41 கோடியே 13 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 339 காவலர் குடியிருப்புகள்.

    சென்னை மாதவரத்தில் 1 கோடியே 58 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாதவரம் பால் பண்ணை காவல் நிலையக் கட்டடம்; தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் 67 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம்; காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தில் 1 கோடியே 37 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வான்நோக்கி உயரும் 104 மீட்டர் நீளம் கொண்ட ஏணி ஊர்தியினை நிறுத்துவதற்கான கட்டடம் என மொத்தம், 55 கோடியே 67 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

    எழும்பூர் லாட்ஜில் கணவன்-மனைவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை செனாய் நகர் வெங்கடசலபதி தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேல். இவரது மனைவி உமா.

    இவர்கள் எழும்பூர் வீராசாமி தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கினர். இந்த நிலையில் அவர்கள் இருந்த அறை கதவு நீண்ட நேரம் திறக்காமல் இருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் எழும்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து அறை கதவை திறந்து பார்த்தனர்.

    அப்போது கிருஷ்ணவேல், உமா ஆகியோர் பிணமாக கிடந்தனர். அவர்கள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. 2 பேரின் உடல்களை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் கடன் தொல்லையால் கிருஷ்ணவேல், உமா தற்கொலை செய்தது தெரிந்தது.

    எழும்பூர் பழைய கமி‌ஷனர் அலுவலகம் அருகே பாந்தியன் சாலையில் போலீசாருக்கு நவீன மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

    சென்னை:

    எழும்பூர் பழைய கமி‌ஷனர் ஆபீஸ் அருகே பாந்தியன் சாலையில் போலீசாருக்கான மருத்துவமனை 1964-ம் ஆண்டு கட்டப்பட்டு அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது.

    30 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவ மனையில் தினமும் 500 போலீசார் வந்து சிகிச்சை பெற்று வந்தனர்.

    பழமையான இந்த மருத்துவ மனையை நவீனப்படுத்த 2016-ம் ஆண்டு முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டது.

    தற்போது 4 மாடிகளுடன் 30 ஆயிரம் சதுரஅடி பரப்பில் புதிய கட்டிடம் 50 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

    நவீன சி.டி. ஸ்கேன் மற்றும் லேப் வசகிகள் ‘அல்ட்ரா சவுண்ட்’, எக்ஸ்ரே, இ.சி.ஜி., மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    எழும்பூர் பாந்தியன் சாலையில் பழமையான நிலையில் போலீஸ் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையை ரூ. 10 கோடி செலவில் நவீனப்படுத்தி புதிய கட்டிடம் கட்ட 2016-ம் ஆண்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி இப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    இந்த மருத்துவமனையில் பிசியோ தெரபிஸ்டு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் டாக்டர்களும் பணியமர்த்தப்பட உள்ளனர்.

    இந்த மருத்துவமனையில் போலீசாருக்கு 50 படுக்கை வசதிகள், சி.டி. ஸ்கேன், எக்ஸ்ரே, ‘அல்ட்ரா சவுண்ட், மருந்தகம், ஐ.சி.யூ. வார்டு அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 10 கோடி மதிப்பீட்டில் இந்த பணிகள் நடைபெற்றுள்ளது.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    போலீசாருக்காகமாஸ்டர் ஹெல்த் செக்-அப் வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 4 மாடிகளுடன் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    இந்த நவீன மருத்துவமனை ஒரு வாரத்திற்குள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து கோடம்பாக்கம் வரை 27-ந் தேதி பாரம்பரிய நீராவி ரெயில் என்ஜின் காலை 10 மணிக்கு இயக்கப்படுகிறது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே முதன்மை வணிக மேலாளர் பிரியம்வதா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    பயணிகளின் தேவைகளுக்காக முன்பதிவு இல்லா ரெயில் டிக்கெட்டுகளை பதிவு செய்ய ரெயில்வே துறை சார்பில் யூ.டி.எஸ். ‘ஆப்’ கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக நேற்று முதல் அதன் பயன்பாட்டாளர்களுக்கு 5 சதவீதம் கூடுதல் சலுகை கொடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து கோடம்பாக்கம் வரை 27-ந் தேதி பாரம்பரிய நீராவி ரெயில் என்ஜின் காலை 10 மணிக்கு இயக்கப்படும். இதில் ரெயில் என்ஜினுடன் 40 பயணிகள் அமர்ந்து செல்வதற்கான இருக்கை வசதி கொண்ட குளிர்சாதன பெட்டி இணைக்கப்படும். பாரம்பரிய ரெயிலில் பயணம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் 27-ந் தேதி காலை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேரடியாக பதிவு செய்யலாம். பயணக்கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.650 மற்றும் குழந்தைகளுக்கு ரூ.500 செலுத்தவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது முதன்மை வணிக மேலாளர் (பயணிகள் மேலான்மை) வினயன், மூத்த மக்கள் தொடர்பு அதிகாரி ஓம் பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர். பாரம்பரிய ரெயிலில் பயணிகள் பயணம் செய்ய உள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 
    எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் நாணய கண்காட்சியில் சோழர் கால நாணயங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.
    சென்னை:

    சர்வதேச அருங்காட்சியக விழா கடந்த 19-ந் தேதி முதல் நாளை (24-ந் தேதி) வரை கொண்டாடப்படுகிறது. அதன்படி சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் சர்வதேச அருங்காட்சியக விழா நடைபெற்று வருகிறது.

    இதில் சோழர் காலத்தில் புழக்கத்தில் விடப்பட்ட முத்திரை நாணயங்கள் முதல் உலோக நாணயங்கள் வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதுகுறித்து பார்வையாளர்களுக்கு உதவி காப்பாட்சியர் சுந்தர்ராஜன் விளக்கி கூறினார். அதை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கேட்டு நாணயங்கள் பற்றி தெரிந்து கொண்டனர்.

    அருங்காட்சியகத்தில் நாணயவியல் பிரிவில் வைக்கப்பட்டுள்ளவை பற்றிய விவரம் வருமாறு:-

    அரைப்படி, கால்படி, உழக்கு, அரை உழக்கு, கால் உழக்கு என்று அளக்கப்பயன்படுத்திய மற்றும் பயன்படுத்துகிற அளவைகளும், எடைகளும் இடம் பெற்றுள்ளன. அரிய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் ஆகியவையும் வைக்கப்பட்டு உள்ளன.

    இந்தியாவில் முதல் முதலாக முத்திரை நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக சோழ மன்னர்கள் பயன்படுத்திய முத்திரை நாணயங்கள் மற்றும் நாணயங்கள் இடம் பெற்று உள்ளன. இதேபோல் கிரேக்கர்களின் பதக்கமும், கஜினி முகமதுவின் பதக்கமும் உள்ளன.

    ரூபாய் நோட்டில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட ரூபாய் நோட்டுகள், பழமையான ஆயிரம் ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 500, 100, 50, 20, 10, 5, 2, 1 ரூபாய் நோட்டுகள் இடம் பெற்றன. ஒரு பைசா, 2 பைசா, 3 பைசா, 5 பைசா, ஒரு அணா, 10 பைசா, 25 பைசா, 50 பைசா, 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் ஆகிய நாணயங்கள் இடம் பெற்றன. அவற்றில் பெரும்பாலானவை அசலானவை.

    இதில் தபால் தலை கண்காட்சியும் இடம் பெற்றது. நாணய மற்றும் தபால் தலை கண்காட்சியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். இப்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் மாணவ-மாணவிகளும் திரளாக வந்து ரசித்தனர். 
    ×