search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Southern Railways"

    பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து 84 நாட்களுக்கு பிறகு பாம்பன் தூக்குப்பாலம் வழியாக ராமேசுவரத்துக்கு மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. #PambanBridge #PambanRailwayBridge
    ராமேசுவரம்:

    மண்டபத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பனில் 3 கிலோ மீட்டருக்கு கடலில் ரெயில் மேம்பாலம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது.

    இந்த பாலத்தில் ராமேசுவரத்துக்கு நாள்தோறும் 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதேநேரத்தில் கப்பல் போக்குவரத்துக்கும் ஏற்றவகையில் இருபிரிவுகளாக திறக்கும்படி பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே ராமேசுவரம் பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி விரிசல் ஏற்பட்டது.  இதையடுத்து அந்த வழி தடத்தில் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டன.



    பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், 84 நாட்களுக்கு பிறகு தற்போது ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 6.5 டன் துருப்பிடிக்காத இரும்பு ராடுகளை கொண்டு விரிசல் சரிசெய்யப்பட்டதையடுத்த தற்போது மீண்டும் ரயில் சேவையை ரயில்வே தொடங்கியுள்ளது.

    புவனேஸ்வர், சேது, கோவை உள்ளிட்ட விரைவு ரயில்கள் 10 கிமீ வேகத்தில் ரயில் பாலத்தில் சென்றதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. #PambanBridge #PambanRailwayBridge

    பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் 2 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடற்கரை-தாம்பரம் இடையே நாளை பல ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. #ElectricTrains #SouthernRailways
    சென்னை:

    பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் 2 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடற்கரை-தாம்பரம் இடையே நாளை பல ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சென்னை கடற்கரை-வண்ணாரப்பேட்டை இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்றும், நாளையும் (சனி, ஞாயிற்றுக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மூர்மார்க்கெட்-திருவள்ளூர் காலை 9.30 மணி, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் மதியம் 2.40 மணி, திருவள்ளூர்-வேளச்சேரி காலை 11.05 மணி மின்சார ரெயில்கள் இன்றும், கடற்கரை-திருவள்ளூர் மதியம் 1.05 மணி, கடற்கரை-பட்டாபிராம் ராணுவ சைடிங் மதியம் 1.50 மணி, மூர்மார்க்கெட்-திருவள்ளூர் காலை 9.30 மணி, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் மதியம் 2.40 மணி, திருவள்ளூர்-கடற்கரை காலை 11.05 மணி ரெயில்கள் நாளையும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    வேளச்சேரி-திருவள்ளூர் மதியம் 12.15 மணி ரெயில் கடற்கரை-திருவள்ளூர் இடையேயும், திருவள்ளூர்-வேளச்சேரி மதியம் 1.40 மணி ரெயில் ஆவடி-வேளச்சேரி இடையேயும், வேளச்சேரி-பட்டாபிராம் ராணுவ சைடிங் மதியம் 12.55 மணி ரெயில் கடற்கரை-பட்டாபிராம் ராணுவ சைடிங் இடையேயும் இன்று பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருவள்ளூர்-கடற்கரை மதியம் 1.40 மணி ரெயில் ஆவடி-கடற்கரை இடையே நாளை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    கடம்பத்தூர்-வேளச்சேரி மதியம் 12.05 மணி, ஆவடி-வேளச்சேரி மதியம் 12.10, 2.40 மணி ரெயில்கள் இன்றும், கடம்பத்தூர்-கடற்கரை மதியம் 12.05 மணி, ஆவடி-கடற்கரை மதியம் 12.10, 2.40 மணி ரெயில்கள் நாளையும் மூர்மார்க்கெட் மார்க்கமாக இயக்கப்படும்.

    வேளச்சேரி-திருத்தணி காலை 11.20 மணி ரெயில் வேளச்சேரிக்கு பதிலாக மூர்மார்க்கெட்டில் இருந்து இன்று மதியம் 12.15 மணிக்கும், வேளச்சேரி-அரக்கோணம் மதியம் 1.35 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து மதியம் 2.30 மணிக்கும், வேளச்சேரி-சூலூர்ப்பேட்டை மதியம் 1.55 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து 2.45 மணிக்கும் புறப்படும்.

    கடற்கரை-திருத்தணி மதியம் 12.10 மணி ரெயில் கடற்கரைக்கு பதிலாக மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை மதியம் 12.15 மணிக்கும், கடற்கரை-அரக்கோணம் மதியம் 2.25 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து மதியம் 2.30 மணிக்கும், கடற்கரை-சூலூர்ப்பேட்டை மதியம் 2.40 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து மதியம் 2.45 மணிக்கும் புறப்படும்.

    ஆவடி-பட்டாபிராம் ராணுவ சைடிங் மதியம் 2.20 மணிக்கு சிறப்பு மின்சார ரெயில் 2 நாட்களும் இயக்கப்படும்.

    கடற்கரை-செங்கல்பட்டு பிரிவில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    கடற்கரை-தாம்பரம் காலை 9.12, 9.25, 9.42, 10, 10.20, 10.40, 10.45, 10.50, 11.10, 11.20, 11.40, 11.50, 12.10, 12.20, 12.40, 12.50 மணி ரெயில்கள், தாம்பரம்-கடற்கரை காலை 9.50, 10, 10.20, 10.40, 10.50, 11.10, 11.20, 11.50, 12, 12.30, 12.50, 1.15, 1.30, 2, 2.15 மணி ரெயில்கள் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    கடற்கரை-தாம்பரம் காலை 10.30, 11.30, 1 மணி, கடற்கரை- செங்கல்பட்டு காலை 9.35, 10.15, 11, 12, 12.30, 1.15, 1.45 மணி, கடற்கரை-திருமால்பூர் காலை 9.50, 1.30 மணி ரெயில்கள், திருமால்பூர்- கடற்கரை காலை 8, 10.25 மணி, செங்கல்பட்டு- கடற்கரை காலை 9.40, 10.50, 11.50, 12.15, 1 மணி, தாம்பரம்-கடற்கரை காலை 10.10, 11, 11.30, 12.10 மணி ரெயில்கள் நாளை எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ElectricTrains #SouthernRailways
    ×