என் மலர்

    நீங்கள் தேடியது "electric train"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது ரெயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
    • 4-வது வழித்தட பணிகளுக்காக சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 3 ரெயில் பாதைகள் உள்ளன. இதில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு பாதையில் விரைவு ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் பெரும்பாலும் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இதனால் அங்கு எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே அங்கு கூட்டத்தை குறைக்க தாம்பரத்தில் இருந்து எழும்பூர் ரெயில் நிலையம் வழியாக வடமாநிலங்களுக்கு ரெயில்களை இயக்க புதிய பாதை தேவைப்படுகிறது.

    எனவே சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4.3 கீ.மீ தொலைவுக்கு 4-வது புதிய ரெயில்பாதை அமைக்க ரெயில்வே வாரியத்துக்கு, தெற்கு ரெயில்வே பரிந்துரை செய்தது. இதற்கு ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது ரெயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து இந்த திட்டத்தை வேகமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் 4-வது வழித்தட பணிகளுக்காக சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே பறக்கும் ரெயில் சேவை வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் 2024-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி வரை 7 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐ.சி.எப்.-ல் இதுவரை 21 வந்தே பாரத் ரெயில்கள் தயார் செய்யப்பட்டு ரெயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    • படுக்கை வசதி கொண்ட 200 வந்தே பாரத் ரெயில்களை தயாரிக்க ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் தயாரிப்பு குறித்து பத்திரிகையாளர்கள் பார்வையிடல் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அப்போது, ரெயில் பெட்டிகள் தயாரிப்பின் ஆரம்பம் முதல் இறுதி கட்டப்பணிகள் வரை ரெயில்வே துறை அதிகாரிகள் நேரடியாக விளக்கினர்.

    இதைத்தொடர்ந்து, ஐ.சி.எப். பொதுமேலாளர் மால்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஐ.சி.எப்.-ல் இதுவரை 21 வந்தே பாரத் ரெயில்கள் தயார் செய்யப்பட்டு ரெயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 21-வது வந்தே பாரத் ரெயில் இன்று ரெயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. வந்தே பாரத் ரெயில் 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. ஆனால், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்குவதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிக்னல், தண்டவாளம் உள்ளிட்டவைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும்போது ரெயிலின் வேகத்தை அதிகரிக்க முடியும். இப்பணியை ரெயில்வே மேற்கொண்டு வருகிறது. விரைவில் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தற்போது, ஆக்ரா - டெல்லி இடையே மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் வந்தே பாரத் ரெயில் ஓடுகிறது. தமிழ்நாட்டில் தற்போது 130 கிலோமீட்டர் வேகத்தில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதை 160-ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரெயிலின் வடிவமைப்புப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

    இந்த நிதி ஆண்டுக்குள் ஒரு ரெயிலையாவது தயாரித்து வழங்க திட்டமிட்டுள்ளோம். படுக்கை வசதி கொண்ட 200 வந்தே பாரத் ரெயில்களை தயாரிக்க ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதில், 80 ரெயில்களை ஐ.சி.எப். தயாரிக்க உள்ளது. மீதம் 120 ரெயில்கள் மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரில் உள்ள இந்திய ரெயில் பெட்டித்தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளது. முதல் வகுப்பு ஏசி பெட்டி-1, 2-ம் வகுப்பு ஏசி பெட்டி-4, 3-ம் வகுப்பு ஏசி - 11 பெட்டிகளும் இருக்கும். நீண்ட தூரம் பயணம் செய்வோருக்கு இது மிகவும் வசதியாக இருக்கும். ஆகஸ்டு மாதத்திற்குள் 75 வந்தே பாரத் ரெயில் பெட்டிகளை தயாரிக்க முடியுமா என்று தெரியவில்லை. எங்களுடைய குழு அதற்கான பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறோம்.

    அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டு, மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக ரெயில் தயாரிப்பதற்கான ஆரம்பக் கட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதற்கான, ரெயில்பாதை மேம்பாடு, சிக்கனல் தொழில்நுட்ப மேம்பாடு பணிகளை ரெயில்வே மேற்கொண்டு வருகிறது. எனவே, அடுத்த 3 ஆண்டுகளில் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும். இதேபோல, மணிக்கு 245 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதற்கான திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.

    வந்தே பாரத் ரெயில் தயாரிப்புக்கு தேவையான பாகங்கள் 90 சதவீதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. புறநகர் மின்சார ரெயில்கள் போன்று, 'வந்தே மெட்ரோ' ரெயில் தயாரிப்பிலும் ஈடுபட உள்ளோம் சென்னை மட்டுமில்லாது ஐதராபாத்திற்கும் இந்தப்பெட்டிகளை தயாரித்து அனுப்ப உள்ளோம்.

    இந்த ரெயில் பெட்டிகள் தற்போதுள்ள பெட்டிகளை காட்டிலும் அகலமாக இருக்கும். 15 பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலில் ஒரே நேரத்தில் 6 ஆயிரம் பேர் பயணம் செய்யமுடியும். வந்தே பாரத் ரெயில் விலங்குகள் மீது மோதும்போது ஏற்படும் பாதிப்பை தடுக்க ரெயிலின் முகப்பில் சில மாற்றங்களை செய்ய உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில், ஐ.சி.எப்., தலைமை எந்திரப்பொறியாளர் பாபு, பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சைதாப்பேட்டை அருகே இன்று அதிகாலை புறநகர் மின்சார ரெயிலின் பெட்டிகள் திடீரென கழன்றதால் பரபரப்பு நிலவியது.
    • காலை முதல் புறநகர் மின்சார ரெயில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    சென்னை:

    சைதாப்பேட்டை அருகே இன்று அதிகாலை புறநகர் மின்சார ரெயிலின் 8 பெட்டிகள் திடீரென கழன்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனால் சென்னை கடற்கரை- தாம்பரம் வரையிலான ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

    இதையடுத்து இன்று காலை 5.30 மணி முதல் புறநகர் மின்சார ரெயில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் 2 மணி நேரத்திற்கு பின் விபத்துக்குள்ளான ரெயில் மீட்கப்பட்டு ரெயில் இயக்கம் சீரானது. கடற்கரை - தாம்பரம் மின்சார ரெயில் சேவை இனி வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு வரையான ரெயில் சேவையும் சீரானது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் சென்று வரும் மின்சார ரெயில்களில் கூட்டம் எப்போதும் அதிகம் காணப்படும்.
    • அத்திப்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு 2 பாதைகள் மட்டுமே இருக்கிறது.

    பொன்னேரி:

    சென்னை நகர மக்களின் போக்குவரத்துக்கு புறநகர் மின்சார ரெயில் சேவை பெரிதும் கைகொடுத்து வருகிறது. குறைந்த கட்டணம், விரைவான பயணம் என்பதால் மின்சார ரெயில் சேவையை பயணிகள் அதிகம் விரும்புகிறார்கள்.

    சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய மார்க்கங்களில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    சென்னை புறநகர் பகுதியில் இருந்து வரும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் அதிகம் பயன்படுத்துவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் மின்சார ரெயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    குறிப்பாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் சென்று வரும் மின்சார ரெயில்களில் கூட்டம் எப்போதும் அதிகம் காணப்படும். எனவே கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் கூடுதலாக மின்சார ரெயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    சென்னையில் இருந்து அத்திப்பட்டு வரை 4 ரெயில்பாதைகள் உள்ளன. ஆனால் அத்திப்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு 2 பாதைகள் மட்டுமே இருக்கிறது.

    இந்த பாதையில் புறநகர் ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் இயக்கப்படுவ தால் கூடுதலாக மின்சார ரெயில்களை இயக்க முடியாத நிலை உள்ளதாக தெரிகிறது.

    மேலும் சரக்கு ரெயில், விரைவு ரெயில்கள் காரணமாக பேசின் பிரிட்ஜ் மற்றும் விம்கோ நகர் இடையே குறைந்த வேகத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்படு கின்றன. இதனால் கால தாமதம் ஏற்பட்டு பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    பொன்னேரி, மீஞ்சூர், அத்திப்பட்டு மற்றும் எண்ணூரில் இருந்து புற நகர் ரெயில்களில் வரும் பெரும்பாலானோர் சென்ட்ரலில் இறங்கி, தாம்பரம் அல்லது செங்கல்பட்டு பகுதியில் உள்ள பணியிடங்களுக்குச் செல்வார்கள்.

    கும்மிடிப்பூண்டியில் இருந்து வரும் ரெயில்கள் விம்கோ நகருக்கு பின்னர் மெதுவாக இயக்கப்படுகிறது. மேலும் பேசின் பாலத்தை கடக்க சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஆகிறது. இதனால் தற்போது பலர் விம்கோ நகர் ரெயில் நிலையத்தில் இறங்கி மெட்ரோ ரெயிலுக்கு மாறி சென்ட்ரலை விரைவாக வந்தடையும் நிலை உள்ளது.

    இதற்கிடையே கும்மிடிப் பூண்டி மார்க்கத்தில் மின்சார ரெயில் சேவையை அதிகரிக்க அத்திப்பட்டு -கும்மிடிப்பூண்டி இடையே புதிதாக 3-வது, 4-வது ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான திட்ட அறிக்கை தயாரானதும் புதிய ரெயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று தெரிகிறது.

    இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, 'சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரெயில் பாதை பிரச்சினை உள்ளது. இதனால் நெரிசல் மிகுந்த நேரங்களில் மின்சார ரெயில் சேவைகளை அதிகரிப்பது சாத்தியமில்லை. சென்னை-கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில், சென்னை - அத்திப்பட்டு இடையே 4 ரெயில் பாதைகள் உள்ளன. அத்திப்பட்டு - கும்மிடிப்பூண்டி இடையே 2 ரெயில் பாதைகள் மட்டுமே உள்ளன. எனவே இந்த பகுதியில் 3-வது, 4-வது வழித்தடத்திற்கான ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த ஆய்வு அறிக்கையின்படி புதிய ரெயில்பாதை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தண்டவாளத்தில் பெண் ஒருவர் மகனுடன் நிற்பதை கண்டு சந்தேகம் அடைந்த மின்சார ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினர்.
    • சரியான நேரத்தில் மின்சார ரெயிலை டிரைவர் நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்.

    தாம்பரம்:

    ஊரப்பாக்கம் செந்தில் நகரை சேர்ந்தவர் பார்த்திபன். தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி பிரேமலதா.

    இவர் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்வளர்ச்சித்துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    நேற்று பிரேமலதாவின் மூத்த மகனின் பிறந்தநாள் விழாவை அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்து வீட்டில் கொண்டாடினர். அப்போது பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் குடும்பத்தினர் பிரேமலதாவை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரேமலதா மிகவும் மன வேதனையில் இருந்தார்.

    இந்நிலையில் இன்று காலை பிரேமலதா, தனது 4 வயதான இரண்டாவது மகனை அழைத்துகொண்டு ஊரப்பாக்கம் ரெயில் நிலையம் வந்தார். பின்னர் அவர், மகனுடன் செங்கல்பட்டில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். இதற்கிடையே தண்டவாளத்தில் பெண் ஒருவர் மகனுடன் நிற்பதை கண்டு சந்தேகம் அடைந்த மின்சார ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினர். எனினும் ரெயில் மெதுவாக சென்று தண்டவாளத்தில் நின்ற பிரேமலதா மற்றும் அவரது மகன் மீது மோதியது. இதில் அவர்கள் இருவரும் கீழே விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டது. அந்த இடத்திற்கு ஆம்புலன்சு வர முடியாது என்பதால் பயணிகள் உதவியுடன் காயம் அடைந்த பிரேமலதாவையும், அவரது மகனையும் அதே மின்சார ரெயிலில் ஏற்றி தாம்பரம் வந்தனர்.

    இதற்குள் இது பற்றி ரெயில்வே போலீசுக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தாம்பரம் ரெயில் நிலையத்தில் தயாராக நின்ற ஆம்புலன்சு ஊழியர்கள் பிரேமலதாவையும் அரவது மகனையும் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மகனின் பிறந்த நாள் கொண்டாடியதால் ஏற்பட்ட குடும்ப தகராறில் பிரேமலதா தனது மகனுடன் சேர்ந்து ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.

    சரியான நேரத்தில் மின்சார ரெயிலை டிரைவர் நிறுத்தியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர். மின்சார ரெயிலை சாதுர்யமாக நிறுத்திய டிரைவரை பொது மக்கள் பாராட்டினர். இது குறித்து தாம்பரம் ரெயில்வே போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை 9.55 மணிக்கு புறப்பட்டு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில் (எண்: 42836) முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பயணிகள் பாதுகாப்பு கருதி தண்டவாளங்கள் பராமரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கும்மிடிப்பூண்டி யார்டில் நாளை (22-ந்தேதி) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

    இதன் காரணமாக சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடற்கரை நிலையத்தில் இருந்து நாளை இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் (எண்:42831) முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை 9.55 மணிக்கு புறப்பட்டு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில் (எண்: 42836) முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மூர்மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு நாளை இரவு 11.20 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் பொன்னேரி-கும்மிடிப்பூண்டி இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட்டிற்கு 23-ந்தேதி அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே மட்டும் ரத்து செய்யப்படுவதாக சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தினந்தோறும் சுமார் 80 லட்சம் பேர் மின்சார ரெயிலில் பயணம் செய்கின்றனர்.
    • ஓசிப்பயணம் செய்பவர்களால் ரெயில்வே நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    மும்பை :

    மும்பையில் மின்சார ரெயில் போக்குவரத்து மக்களின் உயிர் நாடியாக உள்ளது. தினந்தோறும் சுமார் 80 லட்சம் பேர் மின்சார ரெயிலில் பயணம் செய்கின்றனர். இதில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் நபர்களால் ரெயில்வே நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று சர்ச்கேட் ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.

    அப்போது டிக்கெட் இன்றி ரெயிலில் வந்த ஒரு பயணி ரெயில்வே ஊழியர் என கூறி அடையாள அட்டையை காட்டினார். டிக்கெட் பரிசோதகருக்கு அவரது அடையாள அட்டையில் சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர் அந்த பயணியை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில் போலி ரெயில்வே ஊழியர் அடையாள அட்டையுடன் சிக்கியவர் பரேஷ் பட்டேல் என்பது தெரியவந்தது.

    மேலும் இவர் கடந்த 23 ஆண்டுகளாக ரெயில்வே ஊழியர் என கூறி மின்சார ரெயிலில் ஓசிப்பயணம் மேற்கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து ரெயில்வே போலீசார் பரேஷ் பட்டேலை கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இரவு நேர பயணத்தில் பயத்துடனேயே பயணிக்கும் அவலம் இருக்கிறது
    • மெட்ரோ ரெயில் நிலையங்கள் இதற்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது.

    சென்னை :

    மனித வாழ்க்கையின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பாதுகாப்பு என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. தனிமனித பாதுகாப்பு, குடும்பத்தினருக்கான பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு என சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில் சென்னையில் பிரதான போக்குவரத்து அம்சங்களில் ஒன்றாக இருக்கும் மின்சார ரெயில் போக்குவரத்தில் பயணிகளின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவேதான் இன்றளவும் நீடிக்கிறது.

    சென்னையில் அடித்தட்டு மக்கள் முதல் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற ஒரு பயணத்தை பூர்த்தி செய்யும் மின்சார ரெயில் போக்குவரத்து சேவையை பொறுத்தவரையில், சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கமாக வார நாட்களில் 244 சேவைகளும், ஞாயிற்றுக்கிழமைகளில் 96 சேவைகளும், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கமாக வார நாட்களில் 126 சேவைகளும், ஞாயிற்றுக்கிழமைகளில் 96 சேவைகளும், சென்டிரல்-அரக்கோணம் மார்க்கமாக அனைத்து நாட்களிலும் 115 சேவைகளும், சென்டிரல்-கூடூர் மார்க்கமாக அனைத்து நாட்களிலும் 88 சேவைகளும் என இயக்கப்படுகின்றன.

    இந்த ரெயில் சேவைகள் மூலம் அலுவலகம் மற்றும் இதர பணிகளுக்கு சென்று திரும்ப, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் செல்ல, சொந்த வேலைகளுக்காக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பயணம் மேற்கொள்ள, வெளியூர் பயணத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களில் சரியான நேரத்தில் பயணிக்க என பல்வேறு வகையான தேவைகளுக்காக தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயனடைந்து வருகின்றனர். அதிகாலையில் தொடங்கும் இந்த சேவை நள்ளிரவு வரை நீடிக்கிறது.

    ரெயில்வே பாதுகாப்பு படை (மத்திய அரசு), ரெயில்வே இருப்பு பாதை போலீஸ் (மாநில அரசு) என இருதரப்பில் இருந்தும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தாலும், பாதுகாப்பான பயணம் இல்லாமல், அச்சத்துடனேயே மின்சார ரெயிலில் பயணிகள் பயணிக்கும் அவலம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

    அதிலும், இரவு நேர பயணத்தில் இது மேலும் சற்று பயத்தை பயணிகளுக்கு அதிகரிக்கத்தான் செய்கிறது. குறிப்பாக, சென்னை கடற்கரை-தாம்பரம் மார்க்கமாக கடைசியாக இயக்கப்படும் 2 ரெயில்களில் பயணிக்கும் பயணிகள், பாதுகாப்பா? அப்படின்னா என்ன? என்று கேட்கும் அளவுக்குதான் அவர்களின் நிலைமை இருக்கிறது. அதுவும் சில மாதங்களுக்கு முன்பு ரெயில் பெட்டியில் ஆயுதத்துடன் மர்மநபர் ஒருவர் பயணித்ததை 'தினத்தந்தி' படத்துடன் செய்தியாக வெளியிட்டு இருந்தது.

    மேலும், சமீபத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை பெண் போலீசாருக்கே ஓடும் ரெயிலில் கத்திக்குத்து சம்பவம் நடந்தது, பயணிகளை மேலும் அதிருப்தியில் ஆழ்த்தியது. காக்கி உடையில் இருந்த போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், அவர்கள் பயணிகளுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும்? என்ற கேள்வியும் தற்போது பயணிகள் மத்தியில் உரத்த குரலாக இருக்கிறது.

    நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்துவது, போதிய வெளிச்சம் இல்லாத ரெயில் நிலையங்களில் மின்விளக்கு பொருத்துவது என்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. ஆனால் அது காலப்போக்கில் மங்கி, ஆமைவேகத்தில் இன்றளவும் பணிகள் நடந்து வருவதை பார்க்க முடிகிறது.

    தொழில்நுட்பங்கள் எவ்வளவோ வளர்ந்துவிட்டன. சென்னையில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தற்போது குற்றச்சம்பவங்கள் குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    அதேபோல், சென்னையில் அனைத்து மார்க்கங்களிலும் இயக்கப்படும் மின்சார ரெயில்களின் பெட்டிகள் மற்றும் ரெயில் நிலையங்கள் முழுவதிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, தவறுகள், குற்றங்கள் நடக்காதபடி தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

    இதுதவிர ரெயில் நிலையங்களில் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் ஏற்படுத்தி தருவது, ரெயில் பெட்டிகள் மற்றும் ரெயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்புக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார், ரெயில்வே பணியாளர்கள் இருப்பது, ரெயில் நிலையங்களில் பயணிகளை தவிர, மற்றவர்களின் நடமாட்டத்தை குறைப்பது ஆகியவற்றை மேற்கொண்டாலே மின்சார ரெயில் பயணம் பாதுகாப்பானதாகவும், இன்பமானதாகவும் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

    அந்த வகையில், மெட்ரோ ரெயில் நிலையங்கள் இதற்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. அந்த அளவுக்கு 'ஹை-டெக்'காக இல்லாவிட்டாலும், அடிப்படை அளவிலான பாதுகாப்பை பலப்படுத்தினாலே பாதுகாப்பான பயணத்தை பயணிகளுக்கு வழங்க முடியும்.

    இது ஒரு புறம் இருக்க, மின்சார ரெயில் சேவைகளை இயக்குவதிலும் ரெயில்வே நிர்வாகம், பயணிகளின் கஷ்டங்களை அறிந்து இயக்க வேண்டும் என்பதும், பல்வேறு விஷயங்களுக்கு கருத்துகேட்பு கூட்டம் நடத்தும், மத்திய-மாநில அரசுகள், மின்சார ரெயில்களை பயணிகளின் வசதிக்கு ஏற்றப்படி எந்தெந்த நேரத்தில் இயக்கினால் சரியாக இருக்கும் என்பதை கேட்டறிய வேண்டும் என்பதும் பயணிகளின் மற்றொரு முக்கிய கோரிக்கையாக உள்ளது.

    மின்சார ரெயில் பெட்டிகளில் பாதுகாப்பு பணிக்கு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவ்வப்போது வருகிறார்கள். அப்படி வரும் போலீசாரில் பெரும்பாலானோர் வட மாநிலத்தவர்களாகவே இருக்கிறார்கள். அதுவும் இரவு நேர ரெயில்களில் அவர்கள்தான் ரோந்து பணிக்கு வருகின்றனர்.

    அவ்வாறு வரும் போலீசாரிடம், குற்றச்சம்பவங்கள் நடந்தாலோ? அல்லது சந்தேகத்துக்குரியவர்கள் யாரும் பயணித்தாலோ? அதுகுறித்து தெரிவிப்பது மிகவும் சிரமமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். வடமாநில போலீஸ்காரர்களால், வடமாநில பயணிகளுக்கு மட்டுமே லாபம் என்றும், தமிழக பயணிகளுக்கு அல்லல்படும் நிலைதான் ஏற்படுகிறது என்றும் பயணிகள் பலர் வேதனையோடு தெரிவிக்கின்றனர். இதேபோல், நிலைய அதிகாரிகளும் பலர் வடமாநிலத்தவர்களாகத்தான் இருப்பது மேலும் பயணிகளுக்கு சிக்கலைத்தான் தருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏற்கனவே ஒரு மாணவியும், மாணவர்களும் ரெயிலில் சாகச பயணம் செய்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
    • தற்போது மாணவி ஒருவர் மீண்டும் ரெயிலில் சாகச பயணம் செய்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருநின்றவூர்:

    மின்சார ரெயிலில் இளைஞர்களுக்கு சவால் விடும் வகையில் அரசு பள்ளி மாணவி ஒருவர் ரெயில்வே பிளாட்பாரத்தில் கால்களை தரையில் உரசியவாறு ஆபத்தான முறையில் பயணம் செய்த பதை பதைக்கும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    ஆவடி ரெயில் நிலையத்தில் நேற்று மாலை வேளச்சேரியில் இருந்து திருவள்ளூர் வரை செல்லும் மின்சார ரெயில் வந்து நின்றது. அப்போது ஒரு பெட்டியின் வாசலில் பள்ளி சீருடையில் மாணவியும், மாணவரும் நின்றனர்.

    ரெயில் புறப்படும் வரை பிளாட்பாரத்தில் இறங்கி நின்ற நபர்கள் ரெயில் புறப்பட்டதும் ஏறினர். அப்போது மாணவி மட்டும் தனது ஒரு காலை பிளாட்பாரத்தில் உரசியபடி சாகசம் செய்தார்.

    இதனை கண்டு ரெயில் பெட்டியில் இருந்த மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் மாணவி எந்த பயமும் இல்லாமல் பிளாட்பாரம் முடியும் வரை தனது சாகசத்தை தொடர்ந்தார்.

    இதனை பயணி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வீடியோவில் பதிவிட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

    இதேபோல் ஏற்கனவே ஒரு மாணவியும், மாணவர்களும் ரெயிலில் சாகச பயணம் செய்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மாணவி ஒருவர் மீண்டும் ரெயிலில் சாகச பயணம் செய்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஒரு பகுதியாகவும் முழுமையாகவும் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • இன்று இரவு 8.25 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடில் இருந்து வேளச்சேரி புறப்படும் மின்சார ரெயில் கடற்கரை- வேளச்சேரி இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    மின்சார ரெயில் பயணிகளின் பாதுகாப்பை கருதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    பொறியியல் பணிகள், சிக்னல், வழித்தடம் சரி பார்த்தல் போன்றவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே பறக்கும் மின்சார பாதையில் பராமரிப்பு பணிகள் இன்று நடக்கின்றன.

    இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஒரு பகுதியாகவும் முழுமையாகவும் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இன்று இரவு 8.25 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடில் இருந்து வேளச்சேரி புறப்படும் மின்சார ரெயில் கடற்கரை- வேளச்சேரி இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    கும்மிடிப்பூண்டியில் இருந்து வேளச்சேரிக்கு இரவு 8.35 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கடற்கரை- வேளச்சேரி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இரவு 10.50 மணி, இரவு 11.1 மணிக்கு புறப்படும் வேளச்சேரி-கடற்கரை இடையேயான மின்சார ரெயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே சென்னை டிவிசன் தெரிவித்து உள்ளது.