என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் 2 ஏ.சி. மின்சார ரெயில் சேவையின் நேரம் மாற்றம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
- இந்த மாற்றம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
- சென்னை கடற்கரையில் இருந்து மாலை 3.52 மணிக்கு ஏ.சி.மின்சார ரெயில் (49005) புறப்பட்டு மாலை 4.47 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் 2 ஏ.சி.மின்சார ரெயில் சேவையின் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த மாற்றம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன் விவரம் வருமாறு:-
தாம்பரத்தில் இருந்து மதியம் 2.25 மணிக்கு ஏ.சி.மின்சார ரெயில் (வண்டி எண்.49004) புறப்பட்டு மதியம் 3.20 மணிக்கு கடற்கரை வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை கடற்கரையில் இருந்து மாலை 3.52 மணிக்கு ஏ.சி.மின்சார ரெயில் (49005) புறப்பட்டு மாலை 4.47 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






