என் மலர்
நீங்கள் தேடியது "ஏசி மின்சார ரெயில்"
- இந்த மாற்றம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
- சென்னை கடற்கரையில் இருந்து மாலை 3.52 மணிக்கு ஏ.சி.மின்சார ரெயில் (49005) புறப்பட்டு மாலை 4.47 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் 2 ஏ.சி.மின்சார ரெயில் சேவையின் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த மாற்றம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன் விவரம் வருமாறு:-
தாம்பரத்தில் இருந்து மதியம் 2.25 மணிக்கு ஏ.சி.மின்சார ரெயில் (வண்டி எண்.49004) புறப்பட்டு மதியம் 3.20 மணிக்கு கடற்கரை வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை கடற்கரையில் இருந்து மாலை 3.52 மணிக்கு ஏ.சி.மின்சார ரெயில் (49005) புறப்பட்டு மாலை 4.47 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஏ.சி.மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் 9 மின்சார ரெயில் சேவையின் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 10.20 மணிக்கும், கடற்கரைக்கு நள்ளிரவு 11.55 மணிக்கு செல்லும் ரெயில், நள்ளிரவு 12.15 மணிக்கும் சென்றடையும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் 3 ஏ.சி.மின்சார ரெயில் சேவைகளுக்கு நேரம் மாற்றப்பட்டுள்ளது. 4 ஏ.சி. மின்சார ரெயில் சேவைகளுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. இது நாளை (5-ந்தேதி) முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன் விவரம் வருமாறு:-
* சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் ஏ.சி.மின்சார ரெயில் நாளை முதல் கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்பட உள்ளது. கடற்கரையில் மாலை 3.47 மணிக்கு புறப்பட்டு மாலை 4.42 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
* செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு வரும் ஏ.சி.மின்சார ரெயில் தாம்பரம்-கடற்கரை இடையே இயக்கப்பட உள்ளது. தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மாலை 5.55 மணிக்கு கடற்கரை வந்தடையும்.
* தாம்பரத்தில் இருந்து கடற்கரை செல்லும் ஏ.சி.மின்சார ரெயில் தாம்பரத்தில் இருந்து மதியம் 2.28 மணிக்கு புறப்பட்டு மாலை 3.23 மணிக்கு கடற்கரை சென்றடையும்.
* ஏ.சி.மின்சார ரெயில் சேவைகளுக்கு கூடுதல் நிறுத்தமாக தாம்பரம்-செங்கல்பட்டு, செங்கல்பட்டு-கடற்கரை, கடற்கரை-செங்கல்பட்டு, செங்கல்பட்டு-தாம்பரம் ஆகிய ரெயில்கள் நாளை முதல் ஊரப்பாக்கத்தில் நின்று செல்லும்.
ஏ.சி.மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் 9 மின்சார ரெயில் சேவையின் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* திருமால்பூரில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரெயில் தாம்பரத்துக்கு மதியம் 1.15 மணிக்கு பதிலாக 1.10 மணிக்கும், கடற்கரைக்கு மதியம் 2.10 மணிக்கு பதிலாக 2.05 மணிக்கும் சென்றடையும்.
* தாம்பரத்தில் இருந்து மதியம் 1.32 மணிக்கு புறப்படும் ரெயில், மதியம் 1.30 மணிக்கும், கடற்கரைக்கு மதியம் 2.27 மணிக்கு செல்லும் ரெயில் மதியம் 2.25 மணிக்கும் சென்றடையும்.
* கடற்கரையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படும் ரெயில் மாலை 3.39 மணிக்கும், தாம்பரத்துக்கு மாலை 4.40 மணிக்கு செல்லும் ரெயில், மாலை 4.35 மணிக்கும் சென்றடையும்.
* தாம்பரத்தில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 4.30 மணிக்கும், கடற்கரைக்கு மாலை 5.30 மணிக்கு செல்லும் ரெயில், மாலை 5.25 மணிக்கும் சென்றடையும்.
* தாம்பரத்தில் இருந்து மாலை 4.52 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 4.38 மணிக்கும், கடற்கரைக்கு மாலை 5.47 மணிக்கு செல்லும் ரெயில், மாலை 5.33 மணிக்கும் சென்றடையும்.
* தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 4.53 மணிக்கும், கடற்கரைக்கு மாலை 5.55 மணிக்கு செல்லும் ரெயில், மாலை 5.48 மணிக்கும் சென்றடையும்.
* கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்படும் ரெயில், இரவு 10.10 மணிக்கும், கடற்கரைக்கு நள்ளிரவு 12.15 மணிக்கு செல்லும் ரெயில், இரவு 11.55 மணிக்கும் சென்றடையும்.
* செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 10.20 மணிக்கும், கடற்கரைக்கு நள்ளிரவு 11.55 மணிக்கு செல்லும் ரெயில், நள்ளிரவு 12.15 மணிக்கும் சென்றடையும்.
* கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்படும் ரெயில், இரவு 10.50 மணிக்கும், தாம்பரத்திற்கு இரவு 10.40 மணிக்கு செல்லும் ரெயில் இரவு 11.15 மணிக்கு சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரையிலான அதிகபட்ச டிக்கெட் கட்டணம் சுமார் ரூ. 105 ஆகும்.
- ஏ.சி. ரெயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இயக்கப்படுகின்றன.
சென்னையில் உள்ள மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் சேவை இருந்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கடற்கரை- தாம்பரம், கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில்களில் பயணம் செய்து வருகிறார்கள்.
இந்த மின்சார ரெயிலின் மூலம் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் இந்த வழித்தடத்தில் குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண மின்சார ரெயில்களே இயக்கப்பட்டு வந்தன. எனவே இந்த வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். பயணிகளின் கோரிக்கையை ஏற்று சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையை கடந்த ஏப்ரல் மாதம் தெற்கு ரெயில்வே அறிமுகம் செய்தது.

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இந்த புறநகர் மின்சார ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஏ.சி. ரெயில்களில் தானியங்கி கதவுகள், பயணிகள் தகவல் அமைப்புகள், சிசிடிவி கேமராக்கள் போன்ற மேம்பட்ட வசதிகள் உள்ளன. மேலும் 1,116 பேர் நின்றும் ,3,798 பேர் அமர்ந்தும் பயணிக்கலாம்.
சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரையிலான அதிகபட்ச டிக்கெட் கட்டணம் சுமார் ரூ. 105 ஆகும். குறைந்தபட்ச கட்டணம் ரூ. 35-ல் இருந்து தொடங்குகிறது.
இந்த ஏ.சி. ரெயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இயக்கப்படுகின்றன. சென்னை கடற்கரையில் இருந்து காலை 7:00 மணி மற்றும் மதியம் 3:45 மணிக்கு புறப்பட்டு காலை 8:35 மணி மற்றும் மாலை 5:25 மணி செங்கல்பட்டுக்கு வந்தடையும்.
மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து காலை 9:00 மணி மற்றும் மாலை 5:45 மணிக்கு புறப்பட்டு காலை 10:30 மணி மற்றும் இரவு 7:15 மணிக்கு சென்னை கடற்கரைக்கு வந்தடையும்.
மேலும் இந்த ரெயில் கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனூர் ஆகிய 12 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

முதலில் இந்த ரெயிலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல அது குறைந்தது. ஏ.சி. மின்சார ரெயிலில் எதிர்பார்த்த கூட்டமும் இல்லாததால் காலியாகவே ஓடின. இதற்கு முக்கிய காரணம் கட்டணம் அதிகமாகும். மேலும் மெட்ரோ ரெயில் சேவையின் பயன்பாடு அதிகரித்து வருவதும் ஒரு முக்கிய காரணம் என்று பயணிகள் தெரிவித்தனர். இது தவிர ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படும் கால அட்டவணையும் பயணிகள் கூட்டம் இல்லாததற்கு காரணம் என்று குற்றச்சாட்டப்பட்டது.
எதுவாக இருப்பினும் கட்டணத்தை குறைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படும் கால அட்டவணையும் பயணிகள் கூட்டம் இல்லாததற்கு காரணம் என்று குற்றச்சாட்டுகின்றனர்.
- அதிக கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் ஏ.சி. ரெயிலை புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே மூலம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்பட்டது. கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இந்த ரெயில் தற்போது இயக்கப்படுகிறது.
தினமும் 8 சேவைகள் இருந்த நிலையில் மே மாதத்தில் 10 சேவைகளாக அதிகரிக்கப்பட்டன.
12 பெட்டிகளை கொண்ட ஏ.சி. ரெயிலில் உட்கார்ந்தும் நின்று கொண்டும் மொத்தம் 4,914 பயணிகள் பயணம் செய்ய முடியும். 8 சேவைகள் அடிப்படையில் 100 சதவீத பயன்பாட்டில் 39,312 பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். 50 சதவீத பயன்பாடாக இருந்தால் 19,656 பேர் செல்ல வேண்டும். 25 சதவீத பயன்பாட்டில் 9828 பேர் பயணிக்க வேண்டும்.
ஆனால் 2,800 பேர் மட்டுமே தினமும் பயணம் செய்துள்ளனர். இது ரெயிலின் மொத்த பயன்பாட்டில் 10 சதவீதம் கூட எட்டவில்லை.
ஏ.சி. மின்சார ரெயிலில் எதிர்பார்த்த கூட்டமும் இல்லை. காலியாகவே ஓடுகின்றன. இதற்கு முக்கிய காரணம் கட்டணம் அதிகமாகும். மேலும் மெட்ரோ ரெயில் சேவையின் பயன்பாடு அதிகரித்து வருவதும் ஒரு முக்கிய காரணமாகும் என்று பயணிகள் தெரிவிக்கின்றனர். இது தவிர ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படும் கால அட்டவணையும் பயணிகள் கூட்டம் இல்லாததற்கு காரணம் என்று குற்றச்சாட்டுகின்றனர்.
காலை மற்றும் மாலை நெரிசல் மிகுந்த வேளையில் ஏ.சி. ரெயில் சரியான நேரத்தில் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. நெரிசல் மிகுந்த கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடத்தில் அதிக பயணிகளை ஈர்க்கும் திறன் இருந்த போதிலும் மோசமான நிலையே காணப்படுகிறது. ஏ.சி. மின்சார ரெயிலில் 1-5 கி.மீ. ரூ.35-ம், 11-15 கி.மீ.க்கு ரூ.40-ம், 16-25 கி.மீ. ரூ.60-ம், 26-40 கி.மீ.க்கு ரூ.85-ம், 56-60 கி.மீ.க்கு ரூ.105-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிக கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் ஏ.சி. ரெயிலை புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது. கட்டணத்தை குறைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? தற்போது உள்ள குளறுபடிகளை சரி செய்தால் தான் புறநகர் பயணிகளை கவர முடியும்.
இனி மழைக்காலம் என்பதால் பொதுவாக ஏ.சி. ரெயில் பயணம் குறையும். அவற்றையெல்லாம் கருதி கட்டணத்தை குறைக்க பரிசீலிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
- டிக்கெட்டுகளை ரத்து செய்ய முடியாது.
- டிக்கெட்டுகள் எடுத்த அடுத்த 3 மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் பஸ், மெட்ரோ ரெயில், புறநகர் மின்சார ரெயில் மற்றும் வாடகை ஆட்டோ, கார் ஆகிய அனைத்து போக்குவரத்தையும் ஒன்றிணைக்கும் வகையில் ஒரே கியூ-ஆர் பயணச்சீட்டு மூலம் பயணம் செய்ய சென்னை ஒன்று என்ற புதிய செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 22-ந்தேதி அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த செயலியில், புறநகர் மின்சார ரெயிலில் டிக்கெட் எடுத்து பயணிக்கலாம். ஏற்கனவே உள்ள யூ.டி.எஸ்., செயலி இருப்பது போல், இந்த செயலியையும் பயணியர் பயன்படுத்தலாம். புறநகர் ரெயில் கட்டணத்தில் மாற்றம் இல்லை. 'ஏ.சி.' மின்சார ரெயில் டிக்கெட் எடுக்க முடியாது. டிக்கெட் பரிசோதனையின்போது, பயணியர் 'அசல் ரெயில் டிக்கெட்டைக் காட்டு' பக்கத்தின் வாயிலாக, டிக்கெட்டுகளைக் காண்பிக்க வேண்டும். டிக்கெட்டுகளை ரத்து செய்ய முடியாது. இந்த டிக்கெட்டுகள் எடுத்த அடுத்த 3 மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மற்றொரு மின்சார ரெயில் தயாரிக்கும் பணியை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலை மேற்கொண்டது.
- ஹைட்ரஜன் ரெயில் பெரம்பூரில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே ஏ.சி. மின்சார ரெயில் முதன் முதலாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் குறிப்பிட்ட கால அட்டவணைப்படி இயக்கப்படுகிறது. பொதுமக்கள் விரும்பி பயணம் செய்கிறார்கள். ஒருவழித் தடத்தில் மட்டும் இயக்கப்படுவதால் மற்ற வழித்தடத்திலும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையொட்டி மற்றொரு மின்சார ரெயில் தயாரிக்கும் பணியை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலை மேற்கொண்டது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் இந்த பணி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. 10 பெட்டிகளுடன் தயாராகும் ஏ.சி. ரெயில் விரைவில் மற்றொரு வழித்தடத்தில் இயக்குவதற்கு சென்னை ரெயில்வே கோட்டம் திட்டமிட்டுள்ளது.
இதே போல ஹைட்ரஜன் ரெயிலும் பெரம்பூரில் தயாரிக்கப்பட்டு வருகிறது. பணிகள் நிறைவடையும் சூழலில் சோதனை ஓட்டம் செய்யப்படுகிறது. முதன் முதலாக ஹைட்ரஜன் மூலம் இயக்கப்படும் ரெயில் இதுவாகும். இந்த ரெயில் வட மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதுகுறித்து ஐ.சி.எப். அதிகாரி ஒருவர் கூறும்போது, ஏ.சி. மின்சார ரெயில் பணி விரைவில் முடிந்து விடும். இன்னும் 2 மாதத்தில் சென்னை கோட்டத்தில் ஒப்படைப்போம். எந்த வழித்தடத்தில் இயக்குவது என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள் என்றார்.






