என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் 2-வது  ஏ.சி. மின்சார ரெயில்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
    X

    சென்னையில் 2-வது ஏ.சி. மின்சார ரெயில்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

    • மற்றொரு மின்சார ரெயில் தயாரிக்கும் பணியை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலை மேற்கொண்டது.
    • ஹைட்ரஜன் ரெயில் பெரம்பூரில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே ஏ.சி. மின்சார ரெயில் முதன் முதலாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் குறிப்பிட்ட கால அட்டவணைப்படி இயக்கப்படுகிறது. பொதுமக்கள் விரும்பி பயணம் செய்கிறார்கள். ஒருவழித் தடத்தில் மட்டும் இயக்கப்படுவதால் மற்ற வழித்தடத்திலும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இதையொட்டி மற்றொரு மின்சார ரெயில் தயாரிக்கும் பணியை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலை மேற்கொண்டது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் இந்த பணி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. 10 பெட்டிகளுடன் தயாராகும் ஏ.சி. ரெயில் விரைவில் மற்றொரு வழித்தடத்தில் இயக்குவதற்கு சென்னை ரெயில்வே கோட்டம் திட்டமிட்டுள்ளது.

    இதே போல ஹைட்ரஜன் ரெயிலும் பெரம்பூரில் தயாரிக்கப்பட்டு வருகிறது. பணிகள் நிறைவடையும் சூழலில் சோதனை ஓட்டம் செய்யப்படுகிறது. முதன் முதலாக ஹைட்ரஜன் மூலம் இயக்கப்படும் ரெயில் இதுவாகும். இந்த ரெயில் வட மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இதுகுறித்து ஐ.சி.எப். அதிகாரி ஒருவர் கூறும்போது, ஏ.சி. மின்சார ரெயில் பணி விரைவில் முடிந்து விடும். இன்னும் 2 மாதத்தில் சென்னை கோட்டத்தில் ஒப்படைப்போம். எந்த வழித்தடத்தில் இயக்குவது என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள் என்றார்.

    Next Story
    ×