என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விரைவு ரெயில்கள்"

    • திருவெறும்பூர் பகுதி பல கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ள இடம்.
    • நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

    தஞ்சாவூர்:

    திருச்சியில் இருந்து தாம்பரம் செல்லும் அதிவிரைவு ரெயில் இன்று முதல் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது.

    இந்நிலையில் இன்று அதிகாலை திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு புறப்பட்ட அந்த ரெயிலில் திருவெறும்பூரில் இருந்து திருச்சி எம்.பி. துரை வைகோ ஏறி தஞ்சையில் வந்து இறங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திருவெறும்பூர் பகுதி பல கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ள இடம். நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திருச்சியில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று பலமுறை மத்திய ரெயில்வே அமைச்சர், ரெயில்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தேன்.

    அதன் பயனாக இன்று முதல் திருச்சி-தாம்பரம் ரெயில் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிப்பு வந்து நடைமுறைக்கு வந்தது. இது திருச்சி மக்களுக்கு மட்டுமல்ல எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. இந்த சிறப்பு ரெயில் போலவே அனைத்து அதிவிரைவு ரெயில்களும் திருவெறும்பூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செப். 11 முதல் தாம்பரத்தில் இருந்து ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
    • பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே அறிவிப்பை திரும்பப் பெற்றது.

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் புதிய நடைமேம்பாலம் அமைத்தல், அடிப்படை வசதிகள் மேம்படுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனால், செப். 11 முதல் தாம்பரத்தில் இருந்து ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றது.

    இதனால், சென்னை எழும்பூர்-திருச்சி ராக்போர்ட், எழும்பூர்-மதுரை பாண்டியன், எழும்பூர் - திருச்சி சோழன் ஆகிய 3 விரைவு ரெயில்கள் எழும்பூரில் இருந்து வழக்கம் போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    • ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக மானாமதுரையில் இருந்து மாலை 4.55-க்கு புறப்பட்டு திருச்சி செல்லும்.
    • திருச்சி செல்லும் விரைவு ரெயில் (எண்:16850), ராமேசுவரம்-மானாமதுரை இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லையில் இருந்து குஜராத் மாநிலம் ஹப்பாவுக்கு செல்லும் விரைவு ரெயில் (வண்டி எண்-19577) ஜூன் 15-ல் இருந்து காலை 5.05-க்கு புறப்படும். அதே போல, நெல்லையில் இருந்து புறப்பட்டு குஜராத் காந்திதாம் செல்லும் விரைவு ரெயிலும் (எண்: 20923) காலை 5.05-க்கு புறப்படும். கோவையில் இருந்து அரியானா மாநிலம் ஹிசார் செல்லும் விரைவு ரெயில் (எண்:22476) பிற்பகல் 1.30-க்கு கோவையில் இருந்து புறப்படும்.

    இதே போல, மும்பை தாதரில் இருந்து நெல்லை செல்லும் விரைவு ரெயில் (எண்:22629), நெல்லையில் இருந்து புறப்பட்டு தாதருக்கு செல்லும் ரெயில் (எண்:22630) உள்பட 37 விரைவு ரெயில்களின் நேரமும் மாற்றப்பட்டு உள்ளன.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் சத்திரக்குடி ரெயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில விரைவு ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி திருச்சியில் இருந்து ஜூன் 12, 14, 16, 21, 23 மற்றும் ஜூலை 4 ஆகிய தேதிகளில் காலை 7.05-க்கு புறப்பட்டு ராமேஸ்வரம் செல்லும் விரைவு ரெயில் வண்டி எண்.16849 மானாமதுரை, ராமேசுவரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு, மானாமதுரையில் நிறுத்தப்படும்.

    மறுமார்க்கமாக ராமேசுவரத்தில் இருந்து அதே தேதியில் மாலை 3-க்கு புறப்பட்டு திருச்சி செல்லும் விரைவு ரெயில் (எண்:16850), ராமேசுவரம்-மானாமதுரை இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக மானாமதுரையில் இருந்து மாலை 4.55-க்கு புறப்பட்டு திருச்சி செல்லும்.

    மேலும், ராமேசுவரத்தில் இருந்து ஜூன் 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 9.10-க்கு புறப்பட்டு செகந்திராபாத் செல்லும் சிறப்பு ரெயில் (எண்:07696) அதற்கு மாற்றாக ராமேசுவரத்தில் இருந்து இரவு 7-க்கு 19 மணி நேரம் 50 நிமிடம் தாமதம்) புறப்பட்டு செகந்திராபாத் செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஜூன் 12, 16, 19, 23, 26, 30 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.05-க்கு புறப்பட்டு விஜயவாடா செல்லும் பினாகினி விரைவு ரெயில் (வண்டி எண்.12712), வழக்கத்துக்கு மாறாக சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 2.25-க்கு (20 நிமிடம் தாமதம்) புறப்பட்டு விஜயவாடா செல்லும்.

    இதேபோல, திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் விரைவு ரெயில் (வண்டி எண்.20606), பண்ருட்டி ரெயில் நிலையத்தில் காலை 6.04-க்கு வந்து செல்லும்.

    இன்று (புதன்கிழமை) முதல் 25 நிமிடம் தாமதமாக, அதாவது காலை 6.29-க்கு வரும். ஆனால், திருச்செந்தூர்- திருப்பாதிரிப்புலியூர் மற்றும் விழுப்புரம்-எழும்பூர் இடையேயான ரெயில் சேவையில் எந்த மாற்றமும் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சீர்காழி ரெயில் நிலையத்தில் கொரோனா தொற்று பரவலுக்கு முன்னர் நின்று சென்ற சுமார் 13 ரயில்கள் கடந்த 2 ஆண்டுகளாக நின்று செல்வதில்லை.
    • பயணிகள் ரெயிலை நின்று செல்லவும் படிப்படியாக விரைவு ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுத்திட தீர்வு காணப்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழியில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி சீர்காழி நகர அனைத்து வணிகர்கள் நல சங்கம், ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் ஆகியவை தனித்தனியாக ரெயில் மறியல் போராட்டம் அறிவித்திருந்த நிலையில் வட்டாட்சியர் தலைமையில் நடந்த அமைதிபேச்சுவா ர்த்தையில் உறுதியளிக்க ப்பட்டதால் தற்காலிகமா நிறுத்திவை க்கப்பட்டுள்ளது.

    சீர்காழி ரெயில் நிலையத்தில் கொரோனா தொற்று பரவலுக்கு முன்னர் நின்று சென்ற விரைவு ரெயில்கள் உள்ளிட்ட சுமார் 13 ரயில்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நின்று செல்வதில்லை. இதனால் சீர்காழி பகுதி பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ}மாணவிகள் என அனைத்துதரப்பினரும் அவதியடைந்து வருகி ன்றனர்.

    இதனிடையே சீர்காழியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி சீர்காழி அனைத்து வணிகர்கள் நல சங்கம், சீர்காழி ரெயில் பயணிகள் நல சங்கம் ஆகியன சார்பில் 29ம் தேதி சீர்காழி ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் ஜூலை 9-ம் தேதி சீர்காழி ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் சார்பில் இதே கோரிக்கையை வலியுறுத்தி ரெயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.இதனிடையே சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில், ரெயி ல்வேதுறை அதிகாரிகள் முன்னிலையில் தனித்தனி யாக அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. சீர்காழி நகர அனைத்து வணிகர்கள் நல சங்கம் சார்பில் அதன் தலைவர் பாபு.கே.விஜயன் மற்றும் சங்க நிர்வாகிகள், ரெயில் பயணிகள் நல சங்கத்தினர் பங்கேற்றனர்.

    அதில் தற்போது பயணிகள் ரெயிலை நின்று செல்லவும் படிப்படியாக விரைவு ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுத்திடவும் மூன்று மாத கால அவகாசம் கேட்டு கொண்டு தீர்வு காணப்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு சீர்காழி ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்கத் தலைவர் கஜேந்திரன் தலைமையில் அதன் நிர்வாகிகள் மற்றும் நகர வர்த்தக சங்கம், வர்த்தக பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் பங்கேற்ற அமைதி பேச்சுவார்த்தையில் வட்டாட்சியர் செந்தில்குமார், ரயில்வே துறையை சேர்ந்த சங்கர்குரு ஆகியோர் பங்கேற்று ஜூலை 7ம் தேதிக்குள் ரயில்வே உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்ததின்பேரில் ஜூலை9ம் தேதி நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டமும் கைவிடப்பட்டது.

    ×