என் மலர்
நீங்கள் தேடியது "Express Train"
- டிசம்பர் 31ம் தேதி வரை மேல்மருத்துவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும்
- வைகை, பாண்டியன், பொதிகை, உழவன் உள்ளிட்ட முக்கிய ரெயில்கள் நிற்கும்
இருமுடி, தைப்பூச விழாவை முன்னிட்டு மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் டிசம்பர் 15 முதல் 52 விரைவு ரெயில்கள் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வைகை, பாண்டியன், மலைக்கோட்டை, பொதிகை, திருக்குறள், உழவன், மஹால் உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய ரெயில்களும் டிசம்பர் 31ம் தேதி வரை மேல்மருத்துவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- குருவாயூர்-கொல்லம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
- வருகிற 22-ந் தேதி திருவனந்தபுரம்-கோட்டயம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரையில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16327) வருகிற 22-ந் தேதி கொல்லம்-குருவாயூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, குருவாயூரில் இருந்து புறப்பட்டு மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16328) 23-ந்தேதி குருவாயூர்-கொல்லம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், இந்த ரெயில் மதியம் 12.10 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும்.
சென்னை சென்டிரலில் இருந்து மதியம் 3.20 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12695) வருகிற 21-ந் தேதி கோட்டயம்-திருவனந்தபுரம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
இதே வழித்தடத்தில் 25-ந்தேதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22207) பகுதிநேரமாக எர்ணாகுளம் - திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12696) வருகிற 22-ந் தேதி திருவனந்தபுரம்-கோட்டயம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரெயில் கோட்டயத்தில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும். தாம்பரத்தில் இருந்து காலை 10.47 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16127) 25-ந் தேதி 2 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக குருவாயூர் சென்றடையும். அதே தேதியில் குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) 2 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக தாம்பரம் வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்த பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்பட்டு இருக்கும்.
- வருகிற ஏப்ரல் மாதம் இறுதி வரையில் இது அமலில் இருக்கும்.
நெல்லை:
செங்கோட்டை -தாம்பரம் இடையே வாரத்தில் 3 நாட்கள் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 20681, 20682) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் கூடுதலாக ஒரு ஏ.சி. இரண்டடுக்கு பெட்டி, 2 ஏ.சி. மூன்றடுக்கு பெட்டி, 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி மற்றும் ஒரு பொது பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.
தாம்பரத்தில் இருந்து வருகிற 1-ந் தேதி (சனிக்கிழமை) முதல், செங்கோட்டையில் இருந்து 2-ந் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். வருகிற ஏப்ரல் மாதம் இறுதி வரையில் இது அமலில் இருக்கும்.
வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்த பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்பட்டு இருக்கும்.
இதே போல் நெல்லை வழியாக இயக்கப்படும் தாம்பரம் -நாகர்கோவில் (வண்டி எண் 22657, 22658) ரெயிலில் ஒரு ஏ.சி. இரண்டடுக்கு பெட்டி, 2 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், ஒரு பொது பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.
தாம்பரத்தில் இருந்து வருகிற நவம்பர் 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல், நாகர்கோவிலில் இருந்து 3-ந் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும். இவை ஏப்ரல் மாதம் இறுதி வரை அமலில் இருக்கும்.
இந்த தகவலை தெற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் செந்தமிழ் செல்வன் தெரிவித்து உள்ளார்.
- வரும் 18-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை தஞ்சாவூாில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரை இயக்கப்படும்.
- கொல்லத்தில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு காலை 5.20 மணிக்கு வந்தடையும்.
சென்னை:
எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு பணி காரணமாக எழும்பூர்-தஞ்சாவூர், எழும்பூர்-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தற்காலிகமாக தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எழும்பூரில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16865), வரும் 17-ந்தேதி முதல் நவம்பர் 9-ந்தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும். மறுமார்க்கமாக, தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வரும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (16866), வரும் 18-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை தஞ்சாவூாில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரை இயக்கப்படும். இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும். மறுமார்க்கமாக, தஞ்சாவூரில் இருந்து இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு அதிகாலை 3.45 மணிக்கு வந்தடையும்.
எழும்பூரில் இருந்து புறப்பட்டு கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20635), வரும் 17-ந்தேதியில் இருந்து நவம்பர் 9-ந்தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு கொல்லம் செல்லும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20636), வரும் 18-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரையில் கொல்லத்தில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரை இயக்கப்படும். இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு காலை 5.20 மணிக்கு வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- செப். 11 முதல் தாம்பரத்தில் இருந்து ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
- பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே அறிவிப்பை திரும்பப் பெற்றது.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் புதிய நடைமேம்பாலம் அமைத்தல், அடிப்படை வசதிகள் மேம்படுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால், செப். 11 முதல் தாம்பரத்தில் இருந்து ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றது.
இதனால், சென்னை எழும்பூர்-திருச்சி ராக்போர்ட், எழும்பூர்-மதுரை பாண்டியன், எழும்பூர் - திருச்சி சோழன் ஆகிய 3 விரைவு ரெயில்கள் எழும்பூரில் இருந்து வழக்கம் போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
- ஏசி பெட்டிகளின் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் போது துப்புரவு தொழிலாளர்கள் உடலைக் கண்டுபிடித்தனர்.
- இறந்த சிறுவனின் தாய் புகார் அளித்திருப்பது தெரியவந்தது.
மகாராஷ்டிராவின் மும்பையில் ரெயில் குப்பைத் தொட்டியில் ஐந்து வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று, உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் இருந்து குர்லாவில் உள்ள லோக்மான்ய திலக் ரெயில் முனையத்திற்கு வந்து சேர்ந்த குஷிநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏசி பெட்டிகளின் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் போது துப்புரவு தொழிலாளர்கள் உடலைக் கண்டுபிடித்தனர்.
அவர்கள் தெரிவித்த தகவலின்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.
காவல்துறையினருக்குக் கிடைத்த காணாமல் போனோர் புகார்களை ஆய்வு செய்தபோது, இறந்த சிறுவனின் தாய் புகார் அளித்திருப்பது தெரியவந்தது.
குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த தனது உறவினர் விகாஸ் ஷா வெள்ளிக்கிழமை இரவு தனது மகனைக் கடத்திச் சென்றதாகக் தாய் புகார் அளித்திருக்கிறார். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
- ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக மானாமதுரையில் இருந்து மாலை 4.55-க்கு புறப்பட்டு திருச்சி செல்லும்.
- திருச்சி செல்லும் விரைவு ரெயில் (எண்:16850), ராமேசுவரம்-மானாமதுரை இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லையில் இருந்து குஜராத் மாநிலம் ஹப்பாவுக்கு செல்லும் விரைவு ரெயில் (வண்டி எண்-19577) ஜூன் 15-ல் இருந்து காலை 5.05-க்கு புறப்படும். அதே போல, நெல்லையில் இருந்து புறப்பட்டு குஜராத் காந்திதாம் செல்லும் விரைவு ரெயிலும் (எண்: 20923) காலை 5.05-க்கு புறப்படும். கோவையில் இருந்து அரியானா மாநிலம் ஹிசார் செல்லும் விரைவு ரெயில் (எண்:22476) பிற்பகல் 1.30-க்கு கோவையில் இருந்து புறப்படும்.
இதே போல, மும்பை தாதரில் இருந்து நெல்லை செல்லும் விரைவு ரெயில் (எண்:22629), நெல்லையில் இருந்து புறப்பட்டு தாதருக்கு செல்லும் ரெயில் (எண்:22630) உள்பட 37 விரைவு ரெயில்களின் நேரமும் மாற்றப்பட்டு உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் சத்திரக்குடி ரெயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில விரைவு ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி திருச்சியில் இருந்து ஜூன் 12, 14, 16, 21, 23 மற்றும் ஜூலை 4 ஆகிய தேதிகளில் காலை 7.05-க்கு புறப்பட்டு ராமேஸ்வரம் செல்லும் விரைவு ரெயில் வண்டி எண்.16849 மானாமதுரை, ராமேசுவரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு, மானாமதுரையில் நிறுத்தப்படும்.
மறுமார்க்கமாக ராமேசுவரத்தில் இருந்து அதே தேதியில் மாலை 3-க்கு புறப்பட்டு திருச்சி செல்லும் விரைவு ரெயில் (எண்:16850), ராமேசுவரம்-மானாமதுரை இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக மானாமதுரையில் இருந்து மாலை 4.55-க்கு புறப்பட்டு திருச்சி செல்லும்.
மேலும், ராமேசுவரத்தில் இருந்து ஜூன் 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 9.10-க்கு புறப்பட்டு செகந்திராபாத் செல்லும் சிறப்பு ரெயில் (எண்:07696) அதற்கு மாற்றாக ராமேசுவரத்தில் இருந்து இரவு 7-க்கு 19 மணி நேரம் 50 நிமிடம் தாமதம்) புறப்பட்டு செகந்திராபாத் செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஜூன் 12, 16, 19, 23, 26, 30 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.05-க்கு புறப்பட்டு விஜயவாடா செல்லும் பினாகினி விரைவு ரெயில் (வண்டி எண்.12712), வழக்கத்துக்கு மாறாக சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 2.25-க்கு (20 நிமிடம் தாமதம்) புறப்பட்டு விஜயவாடா செல்லும்.
இதேபோல, திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் விரைவு ரெயில் (வண்டி எண்.20606), பண்ருட்டி ரெயில் நிலையத்தில் காலை 6.04-க்கு வந்து செல்லும்.
இன்று (புதன்கிழமை) முதல் 25 நிமிடம் தாமதமாக, அதாவது காலை 6.29-க்கு வரும். ஆனால், திருச்செந்தூர்- திருப்பாதிரிப்புலியூர் மற்றும் விழுப்புரம்-எழும்பூர் இடையேயான ரெயில் சேவையில் எந்த மாற்றமும் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரெயில்களில் சிலர் ஆபத்தை உணராமல் சாகச பயணம் செய்கின்றனர்.
- சாகச பயணத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
சென்னை:
தெற்கு ரெயில்வேயின் கீழ் நாள் தோறும் 350-க்கும் மேற்பட்ட ரெயில்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதுபோக, சென்னை கோட்டத்தில் மின்சார ரெயில் சேவையும் இயக்கப்படுகிறது. இதனால், லட்சக்கணக்கான பயணிகள் பயனடைந்து வருகிறார்கள்.
இதற்கிடையே, பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு நீண்ட தூரத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகிறது. இவ்வாறு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரெயில்களில் சிலர் ஆபத்தை உணராமல் சாகச பயணம் செய்கின்றனர். சில நேரங்களில் இது உயிரிழப்பையும் ஏற்படுத்தி விடுகிறது.
இதுபோன்ற சாகச பயணத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் அதை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ரெயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்தாலோ அல்லது படிக்கட்டில் தொங்கியபடி சாகச பயணம் மேற்கொண்டாலோ ரூ.1,000 அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- ரெயில் ஓட்டுநர் அப்பெண்ணை கண்டு உடனடியாக பிரேக் போட்டார். ஆனால் ரயிலை உடனடியாக நிறுத்த முடியவில்லை.
- அப்பெண் ஷகர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்ட்டார்.
பீகாரில் தற்கொலை செய்ய தண்டவாளத்தில் குதித்த நடுத்தர வயது பெண் ரெயில் ஓட்டுனரின் சமயோஜித நடவடிக்கையால் உயிர்பிழைத்தார்.
பீகாரில் பெகுசராய் பகுதியில் நேற்று முன் தினம் காலை சலோனா ரெயில் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
சஹர்சாவிலிருந்து சமஸ்திபூருக்குச் செல்லும் பயணிகள் ரெயில், நிலையத்தை விட்டு வெளியேறியபோது அந்தப் பெண் திடீரென தண்டவாளத்தில் குதித்தார். ரெயில் ஓட்டுநர் அப்பெண்ணை கண்டு உடனடியாக பிரேக் போட்டார். ஆனால் ரெயிலை உடனடியாக நிறுத்த முடியவில்லை.
இறுதியில் அப்பெண் என்ஜினுக்கு அடியில் சிக்கிக்கொண்டார். ஓட்டுநரும் உள்ளுர்வாசிகளும் உடனே விரைந்து ரெயிலுக்கு அடியில் சிக்கிய பெண்ணை சிறு காயங்களுடன் பத்திரமாக மீட்டனர். அப்பெண் ஷகர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்ட்டார்.
குடும்பத் தகராறு காரணமாக அந்தப் பெண் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர்வாசிகள் அந்தப் பெண்ணை என்ஜினுக்கு அடியில் இருந்து மீட்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
- ரெயில் பெட்டியை தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரத்தில் பணிமனைக்கு சென்ற விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
சென்னை தாம்பரத்தில் யார்டுக்கு சென்ற எக்ஸ்பிரஸ் விரைவு ரெயிலின் ஒரு பெட்டி திடீரென தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ரெயில் பெட்டியை தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
- தென்காசி - விருதுநகர் 2004-ம் ஆண்டு அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- குருவாயூர்- புனலூர் பயணிகள் ரெயிலில் பெரும்பாலான நாட்களில் இருக்கைகள் காலியாகவே செல்கின்றன.
தென்காசி:
தென்காசி - விருதுநகர் வழித்தடம் 1927 ஆண்டு மீட்டர்கேஜ் ஆக தொடங்கப்பட்டு பின்னர் 2004-ம் ஆண்டு அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது இந்த விருதுநகர் - தென்காசி வழித்தடத்தில் பொதிகை, சிலம்பு, கொல்லம் மெயில் ஆகிய 3 ரெயில்கள் சென்னைக்கு இயக்கப்பட்டு வருகின்றது. நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் தாம்பரத்திற்கும், எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரந்திர சிறப்பு ரெயிலும், செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில், செங்கோட்டை -மதுரை இடையே இரு ஜோடி பயணிகள் ரெயில்கள் எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் 2020 மற்றும் சமீபத்தில் நடைபெற்ற ரெயில்கள் கால அட்டவணை சந்திப்புகளின்போது, தென்னக ரெயில்வே சார்பாக வண்டி எண் 16327/16328 குருவாயூர் - புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் வண்டி எண் 56733/56734 மதுரை - செங்கோட்டை பயணிகள் ரெயில் ஆகிய இரு ரெயில்களையும் ஒன்றாக இணைத்து குருவாயூர் - மதுரை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ஒரே விரைவு ரெயிலாக இயக்க முன்மொழிவு செய்யப்பட்டது. மேலும் குருவாயூர் - புனலூர் ரெயில் புதிதாக இயக்கப்பட்ட போது நடைபெற்ற விழாவில் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் கேரள எம்.பி.க்கள் இந்த ரெயில் புனலூர் செங்கோட்டை ரெயில் பாதைகள் முடிந்தவுடன் மதுரை வரை நீட்டிப்பு செய்யப்படும் என்று உறுதி அளித்திருந்தனர்.
இருக்கைகள் காலி
இந்த குருவாயூர்- புனலூர் பயணிகள் ரெயிலில் பெரும்பாலான நாட்களில் இருக்கைகள் காலியாகவே செல்கின்றன. புனலூரில் இருந்து மதுரை வரை நீட்டிக்கப் பட்டால்தான் பயணிகளின் பயன்பாடு அதிகரிக்கும். ரெயில்வே வருமானமும் அதிகரிக்கும்.
மேலும் சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லி புத்தூர் சங்கரன்கோவில், கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார மக்கள் புனலூர், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கு பேரும் உதவியாக இருக்கும். அது மட்டுமின்றி இந்த மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில், ஆரியங்காவு, சபரிமலை அய்யப்பன், குருவாயூர் போன்ற அனைத்து கோவில்களை இணைக்கும் வகையில் பக்தர்களுக்கு உதவியாக இருக்கும்.
பொங்கி வழியும் பாலருவி
நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம், கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கொல்லம் வழியாக பாலக்காடு வரை இயங்கும் பாலருவி விரைவு ரெயிலில் தமிழகப் பகுதிகளில் இருந்து ரெயில் பயணிகள் முன்பதிவு நிரம்பி வழிகிறது.
சுற்றுலா வளர்ச்சிக்கு உதவும்
மேலும் சுற்றுலாவிற்கு குற்றாலம் மற்றும் அதை சுற்றி உள்ள அருவிகள், கேரளாவில் உள்ள பாலருவி, தென்மலை , 13 கண் பாலம் என பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு பயணிகளுக்கு வசதியாக இருக்கும். இதனால் பயணிகள் போக்குவரத்து சுற்றுலா ஆகிய அனைத்தும் மேம்படும். ரெயில்வேக்கும் நல்ல வருமானம் ஈட்டித் தரும்.
இதுகுறித்து ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறும்போது, இந்த மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரை - கொல்லம் இடையே உள்ள வழித்தட மக்களுக்கு பகல்நேர இன்டர்சிட்டி ரெயில் போல செயல்படும். தமிழ்நாடு மற்றும் கேரளா மக்களுக்கு இந்த ரெயில் மிகவும் உதவியாக இருக்கும். சபரிமலை சீசன் தொடங்க இருப்பதால் அய்யப்ப பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசிக்கும் வகையில் கண்ணாடி மேற்கூரைகளால் ஆன விஸ்டாடோம் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும். மேலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மதுரை குருவாயூர் ரெயிலுக்கு ரெயில்வே வாரியம் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் இயக்கத்தால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- ரெயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைத்து 16 பெட்டிகளுடன் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கரன்கோவில்:
தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு ரெயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் ராஜா எம்.எல்.ஏ. அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்திற்கு தீபாவளி பரிசாக கிடைத்த செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் இயக்கத்தால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் இருந்து டெல்டா மாவட்ட ங்களை இணைக்கும் வகையில் பகல் நேர ரெயில் வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் மயிலாடுதுறை - திண்டுக்கல் இடையே இயங்கி வந்த 16847/16848 ரெயிலையும், மதுரை - செங்கோட்டை 06665/06662 ரெயிலையும் ஒன்றாக இணைத்து ஒரே ரெயிலாக இணைத்து தீபாவளி முதல் இயங்க தொடங்கியது.
செங்கோட்டை - மயிலாடுதுறை ரெயில் பயணிக்கும் வழித்தடம் அனைத்தும் வரலாற்று சிறப்புமிக்க கோவில்களும், சுற்றுலா தலங்களும் அமைந்துள்ளன. தற்போது 12 பெட்டிகளுடன் இயங்கி வரும் இந்த ரெயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைத்து 16 பெட்டிகளுடன் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செங்கோட்டையில் இருந்து திருத்தங்கல் வரை உள்ள ரெயில் நிலையங்களில் ஏறும் பயணிகள் தற்போது திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறைக்கு நேரடியாக செல்ல முடிகிறது. அதைபோல் டெல்டா மாவட்ட பகுதிகளை சார்ந்தோர் சிவகாசி, ராஜபா ளையம், சங்கரன்கோவில். தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வருவதற்கு நல்ல இணைப்பாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






