என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வருகிற 1-ந் தேதி முதல் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
    X

    வருகிற 1-ந் தேதி முதல் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

    • வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்த பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்பட்டு இருக்கும்.
    • வருகிற ஏப்ரல் மாதம் இறுதி வரையில் இது அமலில் இருக்கும்.

    நெல்லை:

    செங்கோட்டை -தாம்பரம் இடையே வாரத்தில் 3 நாட்கள் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 20681, 20682) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் கூடுதலாக ஒரு ஏ.சி. இரண்டடுக்கு பெட்டி, 2 ஏ.சி. மூன்றடுக்கு பெட்டி, 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி மற்றும் ஒரு பொது பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.

    தாம்பரத்தில் இருந்து வருகிற 1-ந் தேதி (சனிக்கிழமை) முதல், செங்கோட்டையில் இருந்து 2-ந் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். வருகிற ஏப்ரல் மாதம் இறுதி வரையில் இது அமலில் இருக்கும்.

    வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்த பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்பட்டு இருக்கும்.

    இதே போல் நெல்லை வழியாக இயக்கப்படும் தாம்பரம் -நாகர்கோவில் (வண்டி எண் 22657, 22658) ரெயிலில் ஒரு ஏ.சி. இரண்டடுக்கு பெட்டி, 2 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், ஒரு பொது பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.

    தாம்பரத்தில் இருந்து வருகிற நவம்பர் 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல், நாகர்கோவிலில் இருந்து 3-ந் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும். இவை ஏப்ரல் மாதம் இறுதி வரை அமலில் இருக்கும்.

    இந்த தகவலை தெற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் செந்தமிழ் செல்வன் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×