என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தாம்பரம்-குருவாயூர் இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
- குருவாயூர்-கொல்லம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
- வருகிற 22-ந் தேதி திருவனந்தபுரம்-கோட்டயம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரையில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16327) வருகிற 22-ந் தேதி கொல்லம்-குருவாயூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, குருவாயூரில் இருந்து புறப்பட்டு மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16328) 23-ந்தேதி குருவாயூர்-கொல்லம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், இந்த ரெயில் மதியம் 12.10 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும்.
சென்னை சென்டிரலில் இருந்து மதியம் 3.20 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12695) வருகிற 21-ந் தேதி கோட்டயம்-திருவனந்தபுரம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
இதே வழித்தடத்தில் 25-ந்தேதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22207) பகுதிநேரமாக எர்ணாகுளம் - திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12696) வருகிற 22-ந் தேதி திருவனந்தபுரம்-கோட்டயம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரெயில் கோட்டயத்தில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும். தாம்பரத்தில் இருந்து காலை 10.47 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16127) 25-ந் தேதி 2 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக குருவாயூர் சென்றடையும். அதே தேதியில் குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) 2 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக தாம்பரம் வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






