search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Train service"

    • ரெயில்வே சட்டத் திருத்த மசோதா 2024-ன் மீது நடந்த விவாதத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசினார்.
    • அப்போது, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரெயில் சேவையை அதிகப்படுத்த வேண்டும் என்றார்.

    சென்னை:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் நேற்று ரெயில்வே சட்டத் திருத்த மசோதா 2024 மீது விவாதம் நடைபெற்றது. இதில் தி.மு.க. எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

    அப்போது பேசிய தி.மு.க. எம்.பி. கனிமொழி, சென்னை மற்றும் தூத்துக்குடி இடையே கூடுதல் ரெயில்களை இயக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ரெயில்வே சட்டத் திருத்த மசோதா 2024-ன் மீது நடைபெற்ற விவாதத்தில் தெற்கு ரெயில்வே ரெயில்கள் பலவற்றில் அடிப்படை வசதிகள் இல்லாததையும், ரெயில்வே துறையைத் தனியார்மயப்படுத்துவதை எதிர்த்தும் பேசினேன். தமிழ்நாட்டில் சென்னை - தூத்துக்குடி இடையே ரெயில் சேவையை அதிகப்படுத்தவும் மத்திய அரசிடம் வலியுறுத்தினேன் என பதிவிட்டுள்ளார்.

    • பல்லாவரம்-கடற்கரை இடையே பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
    • செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் செல்லும் ரெயில்கள் அட்டவணைப்படி இயங்கும்.

    சென்னை:

    பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே நாளை புறநகர் ரெயில் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது.

    காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பல்லாவரம்-கடற்கரை இடையே பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் செல்லும் ரெயில்கள் அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டது.

    எனவே பயணிகள் அதற்கேற்ப தங்களின் பயணத்தை திட்டமிடவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    • ரெயில் பாதை அமைக்கும் பணிகள் காரணமாக, கடந்த ஆண்டு தற்காலிகமாக நிறுத்தம்.
    • வேளச்சேரியில் இருந்து சிந்தாதரிப்பேட்டை வரை மட்டுமே ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

    சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி இடையேயான பறக்கும் ரெயில் சேவைகள் நாளை முதல் தொடங்குவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    ரெயில் பாதை அமைக்கும் பணிகள் காரணமாக, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 27ம் தேதி முதல் சென்னை கடற்கரை- வேளச்சேரி ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    அதன் பிறகு, வேளச்சேரியில் இருந்து சிந்தாதரிப்பேட்டை வரை மட்டுமே ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

    இந்நிலையில், 4வது ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்ததால் சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே இனி புறநகர் ரெயில் சேவை வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரெயில் அறிவித்துள்ளது.

    • பராமரிப்புப் பணிகள் காரணமாக ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
    • பயணிகள் வசதிக்காக கடற்கரை-பல்லாவரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னை:

    சென்னையில் பொது போக்குவரத்தில் மின்சார ரெயில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் ஏராளமான மக்கள் இந்த மின்சார ரெயில் சேவையை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்குச் செல்வோர் என இந்த ரெயில் சேவையை நம்பியுள்ளனர்.

    இதற்கிடையே, பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரெயில் சேவை அவ்வப்போது குறிப்பிட்ட வழித்தடங்களில் முழுவதுமாக அல்லது பகுதியாக ரத்து செய்யப்படுவது வழக்கம்.

    இந்நிலையில், தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரெயில் சேவையில் இன்று (செப்டம்பர் 22ம் தேதி) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை தாம்பரம்-கடற்கரை வரையிலான மின்சார ரெயில் சேவை இன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • மும்பையில் 24-ம் தேதி வரை கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
    • ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு முறை ஓடுபாதை செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம்.

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மராட்டியம், கேரளம், கர்நாடகம், கோவாவில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரில் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் 24-ம் தேதி வரை கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், மும்பையில் தொடர்ந்து பெய்த கனமழையால் சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இடைவிடாமல் பெய்த கனமழையால், விமான நிலையத்தில், ஆபரேட்டர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு முறை ஓடுபாதை செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    இதில், விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 12 விமானங்கள் உள்பட இண்டிகோவின் 24 விமானங்களும், ஏர் இந்தியாவின் எட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இதேபோல், மும்பை விமான நிலையத்தில் விஸ்தாரா தனது நான்கு விமானங்களையும் ரத்து செய்துள்ளது.

    ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஆகாசா உட்பட குறைந்தது 15 விமானங்கள் அருகிலுள்ள குறிப்பாக அகமதாபாத் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு மாலை 4 மணி வரை திருப்பி விடப்பட்டன.

    மும்பையில் 82 மிமீ மழை பெய்துள்ளது

    பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் தகவலின்படி, மும்பையில் மாலை 4 மணி வரை நகரில் 82 மிமீ மழையும், கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் 96 மிமீ மழையும், மேற்கு புறநகர்ப் பகுதிகளில் 90 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

    கனமழை காரணமாக மும்பை முழுவதும் விமான சேவைகள் மட்டுமின்றி சாலை மற்றும் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன.

    பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், மத்திய ரயில்வேயின் துறைமுகப் பாதையில் சில இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

    அடுத்த 18-24 மணி நேரத்தில் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லக்கூடிய அனைத்து ரெயில்களும் போத்தனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • மயிலாடுதுறை - திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்குவதை எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

    கோவை:

    மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லக்கூடிய அனைத்து ரெயில்களும் போத்தனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து போத்தனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ள சிறப்பு ரெயில் (வண்டி எண்.16766/16765) சேவையை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல். முருகன், மேட்டுபாளையத்தில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

    இதேபோல, மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி இடையே வாரத்தில் 2 நாள் மட்டும் இயக்கக்கூடிய புதிய ரெயிலையும், கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் சாமல்பட்டி ரெயில் நிலையத்தில் கூடுதல் நிறுத்தமாக நின்று செல்வதையும், மைசூரு - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயிலை கடலூர் துறைமுகம் வரை நீட்டித்தும், தற்போது வாரத்தில் 5 நாள் மட்டும் இயக்கப்படும் மயிலாடுதுறை - திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்குவதையும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

    • இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
    • டெல்லியில் ஜம்முதாவி-டெல்லி விரைவு ரெயில் உள்பட 22 ரெயில்கள் தாமதமாக வருகின்றன.

    புதுடெல்லி:

    வடஇந்தியாவில் குளிர்காலம் என்பதால் கடுங்குளிர் நிலவி வருகிறது. காலையில் மக்கள் எழுந்ததும் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகிறார்கள். வாகனங்கள் சாலையில் செல்லும்போது எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் உள்ளதால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

    டெல்லி ரெயில் நிலையத்திற்கு வரும் ஜம்முதாவி-டெல்லி விரைவு ரெயில் உள்பட 22 ரெயில்கள் தாமதமாக வந்து கொண்டிருக்கின்றன என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • டெல்லியில் ஜி20 மாநாடு இரண்டு நாட்களுக்கு நடைபெற இருக்கிறது.
    • ஜி20 மாநாடு நடைபெறுவதால் டெல்லி முழுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

    ஜி20 உச்சி மாநாடு அடுத்த வாரம் (செப்டம்பர்) 9 மற்றும் 10-ம் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது. பல நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு தலைவர்கள் பலர் இதில் கலந்து கொள்கிறார்கள். ஜி20 உச்சி மாநாடு நடைபெற இருப்பதை ஒட்டி, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி20 உச்சி மாநாடு அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதால் பொது மக்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உச்சி மாநாடு நடைபெறுவதால், தலைவர்கள் பாதுகாப்பு காரணமாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் பொது மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தலாம், பொதுமக்கள் காரணத்தை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் கோரிக்கை விடுத்து இருந்தார்.

    இந்த நிலையில், ஜி20 உச்சி மாநாட்டை ஒட்டி செப்டம்பர் 9, 10 மற்றும் 11 ஆகிய மூன்று நாட்களுக்கு ரெயில் சேவைகள் பாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த மூன்று நாட்களுக்கு 207 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதுதவிர 36 ரெயில் சேவைகள் குறுகிய காலத்திற்கு இயக்கப்படும் என்று தெரிகிறது. 

    • இதனால் ரெயில் எண்.06412 (ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயில்) ஈரோட்டில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு 12.10 மணிக்கு ஜோலார்பேட்டை சென்ற டையும்.
    • இதே போல் ரெயில் எண். 06411 (ஜோலார் பேட்டை- ஈரோடு ரெயில்) ஜோலார்பேட்டையில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு, 7.45 மணிக்கு ஈரோட்டை வந்தடைந்தது.

    ஈரோடு:

    தெற்கு ரெயில்வே சேலம் கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை இடையே உள்ள ரெயில் தண்டவாளம் பராமரிப்பு பணி நாளை (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் ரெயில் எண்.06412 (ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயில்) ஈரோட்டில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு 12.10 மணிக்கு ஜோலார்பேட்டை சென்ற டையும். ரெயில் நாளை முழு வதும் ரத்து செய்ய ப்படுகிறது.

    இதே போல் ரெயில் எண். 06411 (ஜோலார் பேட்டை- ஈரோடு ரெயில்) ஜோலார்பேட்டையில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு, 7.45 மணிக்கு ஈரோட்டை வந்தடைந்தது. இந்த ரெயிலும் நாளை முழுவதுமாக ரத்து செய்ய ப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூற ப்பட்டுள்ளது.

    • 29-ந் தேதி இந்த ரெயில் கோவையில் இருந்து காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும்.
    • இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    கோவை-திருப்பதி ரெயில் சேவை பொறியியல் பணி காரணமாக நாளை 29-ந் தேதி மாற்றப்பட்டுள்ளது. இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படுகிறது. நாளை 29-ந் தேதி இந்த ரெயில் கோவையில் இருந்து காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும்.

    காட்பாடியில் இருந்து திருப்பதி வரை இயக்கப்படாது. இதுபோல் திருப்பதி-கோவை ரெயில் நாளை 29-ந் தேதி காட்பாடியில் இருந்து கோவை வரை மட்டுமே இயக்கப்படும். திருப்பதி-காட்பாடி வரை இயக்கப்படாது.இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பயணிகள் ரயில் சேவை 2 நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது
    • பராமரிப்பு பணிகள்

    கரூர்:

    சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கரூர்-திருச்சி ெரயில்வே வழித்தடத்தில் மாயனுார் பகுதியில் பராமரிப்பு பணிகள் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய் கிழமை) நடைபெற உள்ளது. இதனால், கரூர்-திருச்சி பயணிகள் ெரயில் (எண்-06882) மதியம், 3:55 மணிக்கு கரூரில் இருந்து புறப்பட்டு, மாலை, 5:55 மணிக்கு திருச்சிக்கு செல்லும் ெரயில் சேவையும், திருச்சி-கரூர் பயணிகள் ெரயில் (எண்-06123) திருச்சியில் மாலை 6:20 மணிக்கு புறப்பட்டு, இரவு, 8:30 மணிக்கு கரூருக்கு வரும் ெரயில் சேவையும் மேற்கண்ட இரு தினங்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது ரெயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
    • 4-வது வழித்தட பணிகளுக்காக சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 3 ரெயில் பாதைகள் உள்ளன. இதில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு பாதையில் விரைவு ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் பெரும்பாலும் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இதனால் அங்கு எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே அங்கு கூட்டத்தை குறைக்க தாம்பரத்தில் இருந்து எழும்பூர் ரெயில் நிலையம் வழியாக வடமாநிலங்களுக்கு ரெயில்களை இயக்க புதிய பாதை தேவைப்படுகிறது.

    எனவே சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4.3 கீ.மீ தொலைவுக்கு 4-வது புதிய ரெயில்பாதை அமைக்க ரெயில்வே வாரியத்துக்கு, தெற்கு ரெயில்வே பரிந்துரை செய்தது. இதற்கு ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது ரெயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து இந்த திட்டத்தை வேகமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் 4-வது வழித்தட பணிகளுக்காக சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே பறக்கும் ரெயில் சேவை வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் 2024-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி வரை 7 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×