என் மலர்
நீங்கள் தேடியது "தண்டவாளம்"
- மேற்கு வங்கத்தில் தண்டவாளத்தில் யானை வருவதை அறிந்து ரயில் நிறுத்தப்பட்டது.
- முதலில் ரயிலின் ஓசையைக் மிரண்ட யானை, பின் வளத்திற்கும் சென்றது
மேற்கு வங்கத்தில் தண்டவாளத்தில் யானை வருவதை அறிந்து ரெயில் நிறுத்தப்பட்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.
ரெயில் தண்டவாளத்தில் நடந்து செல்லும் யானை, ரெயில் வருவதை கண்டதும் திடீரென வேகத்தை அதிகரித்து அலறல் சத்தம் எழுப்பும் வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்துள்ளார்.
ரெயில் நின்றபிறகு யானை தண்டவாளத்தை விட்டு நகர்ந்து காட்டுக்குள் சென்றது.
- அந்த வீடியோவில் ஒரு சிறுவன் ரெயில் செல்லும்போது தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு உள்ளான்.
- சிறுவர்கள் எடுத்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலானது.
ஒடிசா மாநிலம் பவுத் மாவட்டத்தில் ரெயில் செல்லும்போது தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு சிறுவர்கள் எடுத்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலானது.
அந்த வீடியோவில் ஒரு சிறுவன் ரெயில் செல்லும்போது தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு உள்ளான். ரெயில் அவனை கடந்து சென்றவுடன் உற்சாகமாக எழுந்த சிறுவன் இன்னொரு சிறுவனுடன் சேர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறான். இதை அங்கே இருந்து இன்னொரு சிறுவன் வீடியோ எடுத்துள்ளான்.
உயிரை பணயம் வைத்து சிறுவர்கள் ரீல்ஸ் வீடியோ எடுத்ததற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த வீடியோ வைரலான நிலையில் உயிரை பணயம் வைத்து ரீல்ஸ் எடுத்த 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- வெள்ளூர் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே சுரங்கப்பணியின்போது மண்சரிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
விழுப்புரத்தில் இருந்து அரியலூர் செல்லும் வழியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டது. வெள்ளூர் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே சுரங்கப்பணியின்போது மண்சரிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் விழுப்புரத்தில் இருந்து அரியலூர் வழியாக திருச்சி சென்ற பயணிகள் ரெயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. சுமார் 45 மணிநேரமாக நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ரெயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
- உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் ரெயில் தண்டவாளத்தில் கார் ஒட்டி சென்றார்.
- ரெயில்வே அதிகாரிகள் அந்த காரை துரத்தி சென்றனர்.
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் ஷங்கர்பள்ளி ரயில்வே கேட் அருகே ரெயில் தண்டவாளத்தில் காரை ஓட்டி சென்ற இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் ரெயில் தண்டவாளத்தில் கார் ஒட்டியதை கண்ட ரெயில்வே அதிகாரிகள் அந்த காரை துரத்தி சென்றனர்.
அதன் பின் ரயில்வே ஊழியர்கள், பொது மக்களுடன் இணைந்து காரை நிறுத்தி அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் இருந்து வெளியே அழைத்து வந்தனர்.
தண்டவாளத்தில் காட்டிய பெண் குடிபோதையில் உள்ளாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே அவ்வழியே வந்து கொண்டிருந்த பெங்களூரில் இருந்து ஐதராபாத் நோக்கி வந்துகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலின் லோகோ பைலட்டை எச்சரிக்கை செய்து ரெயிலை ரெயில்வே அதிகாரிகள் நடு வழியிலேயே நிறுத்தினர். மேலும் இந்த வழித்தடத்தில் வந்து கொண்டிருந்த 15 ரெயில்கள் திருப்பி விடப்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடிய நாய் மீண்டும் அதே இடத்திற்கு வந்தது.
- ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி தவித்தபடி நின்றனர்.
சேலம்:
ஈரோட்டில் இருந்து சேலம், ஜோலார்பேட்டை வழியாக சென்னைக்கு தினசரி ரெயிலாக ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயில் நேற்றிரவு 9 மணியளவில் வழக்கம் போல ஈரோட்டில் இருந்து புறப்பட்டு சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த மாவேலிபாளையத்தை கடந்து மகுடஞ்சாவடி அருகே வந்து கொண்டிருந்தது .
அப்போது ரெயில் என்ஜின் சக்கரத்தில் இரும்பு துண்டு சிக்கிய நிலையில் தரதரவென சிறிது தூரம் இழுத்து சென்றது. ஏதோ விபரீதம் நடப்பதை அறிந்த ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.
பின்னர் கீழே இறங்கி சென்று பார்த்தபோது தண்டவாளத்தில் பெரிய அளவிலான இரும்பு துண்டு வைக்கப்பட்டிருந்ததும் அது ரெயில் என்ஜினின் சக்கரத்தில் சிக்கி இருப்பதும் தெரிய வந்தது.
இதனால் ரெயில் என்ஜின் பழுதானதால் தொடர்ந்து இயக்க முடியாத நிலையில் ரெயில் இருப்பதை அறிந்த என்ஜின் டிரைவர் இது குறித்து ரெயில்வே கோட்ட கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே அங்கு விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் சேலம், ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்கும் நோக்கில் பெரிய அளவிலான 10 அடி நீளமுள்ள உடைந்த தண்டவாள துண்டை ரெயில்தண்டவாளத்தின் குறுக்கே மர்ம நபர்கள் வைத்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து மோப்பநாயும் வரவழைத்து ஆய்வு செய்தனர். சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடிய நாய் மீண்டும் அதே இடத்திற்கு வந்தது.
இதற்கிடையே ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி தவித்தபடி நின்றனர். தொடர்ந்து சேலத்தில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு அந்த என்ஜின் பொருத்தப்பட்டது.
பின்னர் 2 மணி நேரம் தாமதமாக இரவு 11.45 மணிக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி சென்ற எக்பிஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இதே போல ஈரோடு மார்க்கமாக சென்னை மற்றும் பெங்களூரு செல்லும் 3 ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் அந்த ரெயில்களில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து ரெயில்வே டி.எஸ்.பி.பாபு மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில், இரவு நேரத்தில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தி இருக்கலாம் என்றும், மது போதையில் அங்குகிடந்த 10 அடி நீளமுள்ள உடைந்த தண்டவாள துண்டை ரெயில் தண்டவாளத்தின் குறுக்கே வைத்து சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த பகுதி காட்டுப்பகுதி என்பதால் அங்கு கேமராக்கள் இல்லை. ஆனாலும் அருகில் உள்ள காளி கவுண்டம்பாளையம், மாவேலிக்கரை, மகுடஞ்சாவடி பகுதியில் தண்டவாள பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிந்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் அந்த பகுதிகளில் உள்ள உள்ள கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து குடிபோதையில் சுற்றி திரியும் நபர்களை பிடித்து விசாரணை நடத்த உள்ளனர். தொடர்ந்து மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
- ஒரே தண்டவாளத்தில் ஒரே நேரத்தில 2 ரெயில்கள் வந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- இது ஒரு முறை அல்ல, நிர்வாக குளறுபடியால் நாள்தோறும் நடக்கும் அவலம் என பயணிகள் புகார் தெரிவித்தனர்.
சென்னை பெருநகரத்தோடு புறநகர் பகுதி மக்களை இணைக்கும் போக்குவரத்து சேவையில் மின்சார ரெயில் சேவை முக்கிய பங்காற்றுகிறது.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரெயிலின் சேவை இன்றியமையாதது. அந்தவகையில், தெற்கு ரெயில்வேயின் சென்னை ரெயில்வே கோட்டத்தின் கீழ் நாள்தோறும் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், சென்னை பல்லாவரத்தில் ஒரே தண்டவாளத்தில் 2 ரெயில்கள் வந்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக 2 மின்சார ரெயில்களும் நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஒரே தண்டவாளத்தில் ஒரே நேரத்தில 2 ரெயில்கள் வந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
15 நிமிட இடைவெளியில் வர வேண்டிய மின்சார ரெயில் முன்கூட்டியே வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து பயணிகள் கூறுகையில், இது ஒரு முறை அல்ல, நிர்வாக குளறுபடியால் நாள்தோறும் நடக்கும் அவலம் என புகார் தெரிவித்தனர்.
- தண்டவாளத்தில் ஜல்லிக்கற்கள் நொறுங்கி மாவு போல் கிடந்தன.
- ரெயிலை கவிழ்க்க சதி செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்பது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருப்பூர்:
திருப்பூர்- வஞ்சிபாளையம் இடையே காவிலிபாளையம் அருகே தண்டவாளத்தில் மர்மநபர்கள் சிலர் கற்களை வைத்திருந்தனர். அப்போது அந்த வழியே வந்த சரக்கு ரெயில் ஏறி சென்ற போது அந்த கற்கள் நொறுங்கியுள்ளது.
இது குறித்து என்ஜின் டிரைவர் திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரூவந்திகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு தண்டவாளத்தில் ஜல்லிக்கற்கள் நொறுங்கி மாவு போல் கிடந்தன.
மர்மநபர்கள் தண்டவாளத்தில் வரிசையாக ஜல்லிக்கற்கள் வைத்திருந்த நிலையில் அதில் ரெயில் ஏறி சென்றது தெரியவந்தது. சிறிய கற்கள் என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தொடர்ந்து ரெயில் தண்டவாளத்தில் கற்களை வைத்தது யார்? ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என்பது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. அங்கு மது அருந்த வந்த மர்மநபர்கள் போதையில் இது போன்ற செயலில் ஈடுபட்டனரா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தண்டவாளத்தில் கற்கள் வைத்து ரெயிலை கவிழ்க்க சதி செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்பது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- செல்போனில் கூகுள் மேப்பை பயன்படுத்தி அதில் தனது சொந்த ஊர் பெயரை பதிவு செய்தார்.
- 57 நிமிடங்களாக வேறு எந்த ரெயிலும் வராததால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது.
பீகார் மாநிலம், கோபால் கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ஆதர்ஷ் ராய்.
இவர் உத்தரபிரதேச மாநிலம், கோரக்பூரில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மது விருந்து வைக்கப்பட்டது.
அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்தார். பின்னர் வீடு திரும்புவதற்காக மீண்டும் காரில் வீட்டுக்கு புறப்பட்டார். மதுபோதையில் இருந்ததால் அவரது வீட்டிற்கு எந்த வழியாக செல்வது என தெரியவில்லை.
இதனால் தனது செல்போனில் கூகுள் மேப்பை பயன்படுத்தி அதில் தனது சொந்த ஊர் பெயரை பதிவு செய்தார்.
பின்னர் கூகுள் மேப் காட்டிய வழியை பின்தொடர்ந்து காரை ஓட்டி சென்றார். 1 மணி நேரத்திற்கு பிறகு அவர் ஓட்டிச் சென்ற கார் ரெயில் தண்டவாளத்தில் பாய்ந்து நின்றது.
அப்போது அந்த வழியாக ரெயில் ஒன்று வந்து கொண்டு இருந்தது. ரெயில்வே தண்டவாளத்தை ஒட்டி கார் நிற்பதை கண்ட லோகோ பைலட் அவசர கால பிரேகை பயன்படுத்தினார்.
காருக்கு அருகே 5 மீட்டர் தொலைவில் ரெயில் நின்றது. ரெயில் கார் மீது மோதி இருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும்.
இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காரை அப்புறப்படுத்தினர். இதனால் ரெயில் 57 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.
அந்த மார்க்கத்தில் 57 நிமிடங்களாக வேறு எந்த ரெயிலும் வராததால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர்.
ஆதர்ஷ் ராய் கூகுள் மேப்பில் தனது முழு முகவரியை பதிவு செய்யாமல் நகரத்தின் பெயரை மட்டும் பதிவு செய்ததால் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- ரெயில் நடுவழியில் நிறுத்தம்
- வாகன ஓட்டிகள் அவதி
நாகர்கோவில்:
கன்னியாகுமரி அருகே சுக்குப்பாறை தேரிவிளை பகுதியில் நேற்று மாலை சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார்.
இது பற்றி நாகர்கோவில் ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் கன்னியாகுமரியில் இருந்து புனலூருக்கு பாசஞ்சர் ரயில் வந்தது.
சுக்கு பாறை தேரிவிளை பகுதியில் ரயில் வந்த போது தண்டவாளத்தில் பிணம் கிடந்ததால் டிரைவர் ரயிலை நடு வழியில் நிறுத்தினார்.சுமார் அரை மணி நேரமாக ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டு இருந்தது.
ெரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டு இருந்ததை யடுத்து அந்த பகுதியில் உள்ள ரயில்வே கேட்டுகள் மூடப்பட்டு இருந்தன. மூடப்பட்ட ரயில்வேகேட் திறக்க தாமதம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
அரசு பஸ்கள் இருசக்கர வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு இருந்தது. ஒரு சில வாகன ஓட்டிகள் வாகனங்களை திருப்பி மாற்று பாதை வழியாக சென்றனர். சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு தண்டவாளத்தில் கிடந்த உடலை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.
பின்னர் ெரயில் அங்கிருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கு வந்தது. கன்னியாகுமரி புனலூர் பாசஞ்சர் ெரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்ததால் பயணிகள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். நாக ர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்ற ெரயில்களும் தாமதமாக சென்றது.
பிணமாக கிடந்தவரின் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை போலீசார் இது தொடர்பாக விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 2 நாட்கள் 4 ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு செல்ல உள்ளது.
- சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூர் - வஞ்சிப்பாளையம் ரெயில் நிலையத்துக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (வியாழக்கிழமை), நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் 4 ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு செல்ல உள்ளது. அதன்படி ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.13352) நாளை ஆலப்புழாவில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும். அதாவது 3 மணி நேரம் தாமதமாக புறப்படுகிறது.
இதுபோல் எர்ணாகுளம் சந்திப்பு - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (12678) நாளை 2½ மணி நேரம் தாமதமாக எர்ணாகுளத்தில் இருந்து காலை 11.40 மணிக்கு புறப்படும். திருச்சி-பாலக்காடு டவுன் ரெயில் (16843) நாளை மறுநாள் திருச்சியில் இருந்து 2½ மணி நேரம் தாமதமாக மதியம் 3.30 மணிக்கு புறப்படும். நாகர்கோவில் - கோவை ரெயில் (16321) நாளை மறுநாள் நாகர்கோவிலில் 2 மணி நேரம் தாமதமாக காலை 9.35 மணிக்கு புறப்படும்.
இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பொதுமக்கள் பார்த்து தஞ்சை ரெயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள சோழகம்பட்டி ரெயில்வே நிலைய தண்டவாளத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்தது.
இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து தஞ்சை ரெயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவ வடிவேல் தலைமையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் இசையரசன், தனிப்பிரிவு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டனர். ஆனால் அவர் யார்? எந்த ஊர்? என்று விவரம் தெரியவில்லை.
இதையடுத்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபர் தண்டவாளத்தை கடக்க முயலும் போது ரெயிலில் அடிப்பட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . மேலும் அவர் யார் என்ற விவரம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
- தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பலியானார்.
- இச்சம்பம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூத்தி யார்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் காசி விசுவநாதன்(26), கட்டிட தொழிலாளி.
இவர் இரவு நேரத்தில் வயலில் தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது காசி விசுவநாதன் மீது அந்த வழியாக வந்த ரெயில் மோதியது.
இதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் காசி விஸ்வநாதன் நீண்டநேர மாகியும் வீடு திரும்பாததால் காலையில் உறவினர்கள் தேடிப்பார்த்தனர். அப்போது காசி விசுவநாதன் தண்டவாளத்தில் உடல் சிதறி இறந்து கிடந்தது தெரியவந்தது. மதுரை ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரத பரிசோத னைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






