என் மலர்
நீங்கள் தேடியது "Electric Trains"
- சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு தினமும் 550 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் அனைத்தும் வருகிற 20-ந்தேதி ஒரு ஷிப்டு மட்டுமே இயங்கும்.
சென்னை:
தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை என்பதால் சென்னையில் அன்று ஞாயிறு கால அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு தினமும் 550 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுகிழமை மற்றும் பண்டிகை நாட்கள், தேசிய விடுமுறை நாட்களில் வழக்கமாக 40 சதவீத ரெயில்கள் குறைவாக இயக்கப்படும்.
அந்த வகையில், தீபாவளி பண்டிகையான வருகிற 20-ந்தேதி தேசிய விடுமுறை என்பதால் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சூலூர்பேட்டை, வேளச்சேரி என அனைத்து மின்சார ரெயில் வழித்தடங்களிலும் ஞாயிறு கால அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.
இதேபோல் ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் அனைத்தும் வருகிற 20-ந்தேதி ஒரு ஷிப்டு மட்டுமே இயங்கும். அதாவது காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புறநகர் ரெயில்களில் ஒழுங்கீன செயல்களை தவிர்க்குமாறு பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
- ரெயில்களில் உள்ள இருக்கைகள் ‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
சென்னை:
சென்னையில் புறநகர் மின்சார ரெயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். ஆனால் ரெயில் பயணத்தின் போது சிலர் செய்யும் அநாகரீகமான செயல்கள் மற்றவர்களுக்கு ஆபத்தையும், மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாக தெற்கு ரெயில்வே கூறி உள்ளது. மேலும் புறநகர் ரெயில்களில் ஒழுங்கீன செயல்களை தவிர்க்குமாறு பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ரெயில் பயணத்தின்போது பயணிகள் தங்கள் எதிரே உள்ள இருக்கைகளில் கால்களை வைப்பதால், அந்த இருக்கைகள் அசுத்தமாவதுடன், மற்றவர்களுக்கு அசவுகரியத்தையும் ஏற்படுத்துகிறது.
ரெயிலில் பயணிக்கும் ஒருவர் தனது நண்பர் மற்றும் உறவினர்களுக்காக இருக்கைகளை பிடித்து வைக்கும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது. இதனால், முதலில் வரும் மற்ற பயணிகளுக்கு இருக்கை கிடைப்பதில்லை.
ஒரு சில பயணிகள் ரெயிலில் ஏறியவுடன் இருக்கைகள் காலியாக இருந்தாலும் அதில் அமராமல் ரெயில் பெட்டிகளின் நுழைவாயிலில் அமர்ந்து, மற்ற பயணிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
ரெயில் நிலையங்களில் ரெயில் நிற்பதற்கு முன்பே இருக்கைகளை பிடிப்பதற்காக ஓடும் ரெயிலில் ஏறுவதும், இறங்குவோருக்கு இடையூறு செய்வதும் விபத்துகளுக்கு வழிவகுப்பதுடன் அவர்களுக்கும் அது ஆபத்தாக முடிய சாத்தியமுள்ளது.
எனவே ரெயில்களில் உள்ள இருக்கைகள் 'முதலில் வருபவருக்கே முன்னுரிமை' என்ற அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மற்றவர்களுக்காக இடம் பிடிப்பதும், காலியாக உள்ள இருக்கைகள் மீது கால்களை வைப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
ரெயில் பெட்டியின் வாசல்களில் அமர்வதும், மற்ற பயணிகள் ஏறவும், இறங்கவும், வழியை மறிப்பதும் பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- 4-வது தண்டவாளம் அமைக்கப்பட்ட பிறகு 25 நிமிடத்திற்கு ஒருமுறை மட்டுமே ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
- தற்போது விரைவு ரெயில்கள் மெதுவான பாதைகளில் இயக்கப்படுவதால் வேலைக்கு வருவதற்கு தாமதம் ஏற்படுகிறது.
சென்னை:
சென்னை கடற்கரை-எழும்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ஏற்கனவே 3 வழித்தடங்கள் மட்டுமே இருந்தன. இதனால் நீண்ட தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் இயக்கப்படுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து சென்னை கடற்கரை-எழும்பூர் ரெயில் நிலையங்கள் இடையே 4-வது ரெயில் பாதை அமைக்கப்பட்டது. இதையடுத்து நீண்ட தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், மெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் எளிதாக செல்ல முடிகிறது. இதன் மூலம் சென்ட்ரல் ரெயில் நிலையத்திலும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பணிச்சுமை குறைந்துள்ளது.
ஆனால் கடற்கரை-எழும்பூர் இடையே 4-வது ரெயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு கடற்கரை -வேளச்சேரி இடையேயான பறக்கும் ரெயில்கள் மற்றும் கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு புறநகர் மின்சார ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:-
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 3 வழித்தடங்கள் இருந்தபோது கடற்கரை -வேளச்சேரி இடையேயான பறக்கும் ரெயில்கள் 10 முதல் 15 நிமிட வெளியில் இயக்கப்பட்டன. ஆனால் 4-வது தண்டவாளம் அமைக்கப்பட்ட பிறகு 25 நிமிடத்திற்கு ஒருமுறை மட்டுமே ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
4-வது வழித்தடம் அமைக்கும் பணியால் ஏற்கனவே சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையத்துடன் பறக்கும் ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கடுமையாக பாதிக்கப்பட்டோம். ஆனால் இப்போது 4-வது தண்டவாளம் அமைக்கப்பட்ட பின்னர் ரெயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் கும்மிடிப்பூண்டி மற்றும் அரக்கோணம் வழித்தடங்களில் மின்சார ரெயில்களில் செல்லும் பயணிகளும் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது. 4-வது வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளதால் பூங்கா மற்றும் கோட்டை ரெயில் நிலையங்களில் பறக்கும் ரெயில் நடைமேடைகளின் அகலமும் குறைந்துள்ளது. இது நெரிசலான நேரங்களில் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.
4-வது பாதை அமைக்கப்பட்ட போது கோட்டை ரெயில் நிலையத்தில் விரைவு ரெயில்களுக்கான நடைமேடை அகற்றப்பட்டது இதையடுத்து சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான புறநகர் விரைவு ரெயில்கள், விரைவு பாதைக்கு பதிலாக தற்போது மெதுவான பாதைகளில் இயக்கப்படுகின்றன.
இதற்கு முன்பு செங்கல்பட்டு - எழும்பூர் - கடற்கரை வழித்த டத்தில் விரைவு பாதையில் விரைவு ரெயில் இயக்கப்பட்டதால் புறநகர் பகுதிகளில் இருந்து குறித்த நேரத்தில் சென்னைக்கு வேலைக்கு வர முடிந்தது. ஆனால் தற்போது விரைவு ரெயில்கள் மெதுவான பாதைகளில் இயக்கப்படுவதால் வேலைக்கு வருவதற்கு தாமதம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- வேளச்சேரியில் இருந்து இன்று இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் ரத்து.
- கடற்கரையில் இருந்து நாளை அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு வேளச்சேரி செல்லும் மின்சார ரெயில் ரத்து.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கடற்கரை பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, வேளச்சேரியில் இருந்து இன்று(சனிக்கிழமை) இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
அதே போல கடற்கரையில் இருந்து நாளை அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு வேளச்சேரி செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 9.10, 9.55, 11.25 மதியம் 12, 1, 2.30 ஆகிய நேரங்களில் சென்டிரல் வரும் ரெயிகளும் ரத்து செய்யப்படுகிறது.
- கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 3 மணிக்கு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி ரெயில் நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் 10 ஆகிய தேதிகளில் காலை 9.15 மணி முதல் மாலை 3.15 மணி வரையில் (6 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரலில் இருந்து காலை 8.05, 9, 9.30, 10.30, 11.35 மணி ஆகிய நேரங்களில் கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 9.10, 9.55, 11.25 மதியம் 12, 1, 2.30 ஆகிய நேரங்களில் சென்டிரல் வரும் ரெயிகளும் ரத்து செய்யப்படுகிறது.
சென்டிரலில் இருந்து காலை 5.40, 8.35, 10.15, மதியம் 12.10 ஆகிய நேரங்களில் சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், சூலூர்பேட்டையில் இருந்து காலை 10, 11.45, மதியம் 12.35, 1.15 ஆகிய நேரங்களில் சென்டிரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
கடற்கரையில் இருந்து காலை 9.40, மதியம் 12.40 ஆகிய நேரங்களில் கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.55 மணிக்கு கடற்கரைக்கு வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சூலூர்பேட்டையில் இருந்து காலை 7.50 மணிக்கு ஆந்திர மாநிலம் நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து இரவு 9 மணிக்கு சூலூர்பேட்டை வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டில் இருந்து காலை 9.55 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் கடற்கரை-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 3 மணிக்கு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
இதனால் இந்த 2 நாட்களிலும் காலை 8.05, 9, 9.30 மணிக்கு சென்டிரல்-பொன்னேரிக்கும், காலை 9.40, 9.58 மணிக்கு பொன்னேரி-சென்டிரலுக்கும், காலை 10.30, 11.35 மணிக்கு சென்டிரல்-எண்ணூருக்கும், காலை 11.03 மணிக்கு எண்ணூர்-சென்டிரலுக்கும், காலை 9.40, மதியம் 12.40 மணிக்கு கடற்கரை-மீஞ்சூருக்கும், காலை 10.34, மதியம் 12.24, 1.32 மணிக்கு மீஞ்சூர்-சென்டிரலுக்கும், காலை 10.28 மணிக்கு பொன்னேரி-கடற்கரைக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
- ஆவடியில் இருந்து அதிகாலை 4.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி-கவரப்பேட்டை ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை, 28, 29 ஆகிய தேதிகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, நாளை காலை 10.30, 11.35 மதியம் 1.40 மற்றும் மதியம் 1, 2.30, 3.15, 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் அதிகாலை 5.40, காலை 10.15, மதியம் 12.10, 12.35, 1,15, 3.10 நேரங்களில் சென்ட்ரல்-சூலூர்பேட்டை, சூலூர்பேட்டை-சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
மேலும் மதியம் 12.40, 2.40 மற்றும் மாலை 4.30 மணிக்கு கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
மேலும் ஆவடியில் இருந்து அதிகாலை 4.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
- கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30, 3.15 மணிக்கு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
- சென்ட்ரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரப்பேட்டை-கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று மற்றும் வருகிற 16, 19-ந் தேதிகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, சென்ட்ரலில் இருந்து காலை 10.30, 11.35 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள், கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30, 3.15 மணிக்கு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
சென்ட்ரலில் இருந்து காலை 10.15, மதியம் 12.10, 1.05 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்கள், சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 1,15, 3.10 இரவு 9 மணிக்கு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
கடற்கரையில் இருந்து காலை 9.40, மதியம் 12.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.55 மணிக்கு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.
சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 3.50 மணிக்கு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு சூலூர்பேட்டை வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
இந்த நாட்களில் சென்ட்ரல் -பொன்னேரிக்கு காலை 10.30 மணிக்கும், சென்ட்ரல்-மீஞ்சூருக்கு காலை 11.35 மணிக்கும், கடற்கரை-பொன்னேரிக்கு மதியம் 12.40 மணிக்கும், பொன்னேரி-சென்ட்ரலுக்கு மதியம் 1.18, 3.33 மணிக்கும், மீஞ்சூர்-சென்ட்ரலுக்கு மதியம் 2.59 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காட்டாங்கொளத்தூர் பணிமனையில் வரும் ஜூன் 1-ந்தேதி பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
- செங்கல்பட்டில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
சென்னை:
சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள காட்டாங்கொளத்தூர் பணிமனையில் வரும் ஜூன் 1-ந்தேதி காலை 11.45 மணி முதல் மாலை 3.15 மணி வரையில் (3 மணி நேரம் 30 நிமிடம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, சில மின்சார ரெயில் சேவை மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* சென்னை கடற்கரையில் இருந்து வரும் ஜூன் 1-ந்தேதி காலை 11, 11.45, மதியம் 12.30,1.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு கூடுவாஞ்சேரியில் இருந்து புறப்படும்.
* சென்னை கடற்கரையில் இருந்து இதேதேதியில் மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
* செங்கல்பட்டில் இருந்து இதேதேதியில் மதியம் 12,1,1.50 மாலை 3.05 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து புறப்படும்
* செங்கல்பட்டில் இருந்து இதேதேதியில் மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மீண்டும் மாலை 4.30 மணிக்கு பிறகே மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
- கவரப்பேட்டை ரெயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
பொன்னேரி:
பொன்னேரி அருகே உள்ள கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் 11-ந்தேதி நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் விபத்து நடந்த இடத்தில் இருந்த தண்டவாளங்கள் சேதமடைந்தன.
இந்த நிலையில் தெற்கு ரெயில்வே நிர்வாகம் சேதமடைந்த தண்டவாளங்கள் மற்றும் சிக்னல்களை சீரமைக்கும் பணிகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இன்றும், நாளை மறுநாளும், பொன்னேரி- கவரைப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று 18 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரல் வரை இன்று காலை 10 மணி வரை புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. அதன்பிறகு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மீண்டும் மாலை 4.30 மணிக்கு பிறகே மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இதையடுத்து இடைப்பட்ட நேரங்களில் சென்னை சென்ட்ரலில் இருந்து பொன்னேரி ரெயில் நிலையம் வரை மட்டுமே புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வேலை நிமித்தமாக செல்பவர்கள் மற்றும் வியாபாரிகள் என பல்வேறு தரப்பு பயணிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
கும்மிடிப்பூண்டியில் இருந்து வரும் பயணிகள் பொன்னேரி வரை பஸ்சில் வந்து, அதன் பின்னர் பொன்னேரி ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு பயணம் செய்தனர். இதனால் கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டை ரெயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
அதேபோல் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி சென்ற பயணிகள் பொன்னேரி ரெயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பஸ்களில் ஏறி கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்றனர்.
- ஒரே தண்டவாளத்தில் ஒரே நேரத்தில 2 ரெயில்கள் வந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- இது ஒரு முறை அல்ல, நிர்வாக குளறுபடியால் நாள்தோறும் நடக்கும் அவலம் என பயணிகள் புகார் தெரிவித்தனர்.
சென்னை பெருநகரத்தோடு புறநகர் பகுதி மக்களை இணைக்கும் போக்குவரத்து சேவையில் மின்சார ரெயில் சேவை முக்கிய பங்காற்றுகிறது.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரெயிலின் சேவை இன்றியமையாதது. அந்தவகையில், தெற்கு ரெயில்வேயின் சென்னை ரெயில்வே கோட்டத்தின் கீழ் நாள்தோறும் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், சென்னை பல்லாவரத்தில் ஒரே தண்டவாளத்தில் 2 ரெயில்கள் வந்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக 2 மின்சார ரெயில்களும் நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஒரே தண்டவாளத்தில் ஒரே நேரத்தில 2 ரெயில்கள் வந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
15 நிமிட இடைவெளியில் வர வேண்டிய மின்சார ரெயில் முன்கூட்டியே வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து பயணிகள் கூறுகையில், இது ஒரு முறை அல்ல, நிர்வாக குளறுபடியால் நாள்தோறும் நடக்கும் அவலம் என புகார் தெரிவித்தனர்.
- கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1.00, 3.45 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
- சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 12.40, 2.40 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி-கவரப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று மற்றும் 17-ந் தேதி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மற்றும் 17-ந்தேதி காலை 10.30, 11.35 மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதே போல, கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1.00, 3.45 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 5.40, 10.15, மதியம் 12.10, மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 12.35, 1.15, 3.10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 12.40, 2.40 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 2.30, 3.15, மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சூலூர்பேட்டையில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு ஆந்திர மாநிலம் நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. ஆவடியில் இருந்து அதிகாலை 4.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தெற்கு ரெயில்வே சார்பில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
- ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் சேவை இருந்து வருகிறது. பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரின் முதல் தேர்வாக மின்சார ரெயில்கள் உள்ளது. இதனால் நாள்தோறும் மின்சார ரெயில்களை லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதன்காரணமாக, தெற்கு ரெயில்வே சார்பில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், ரெயில் பயணிகளின் வசதிக்காக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் அமைக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே உள்ள சார்ஜிங் வசதிகளை மேம்படுத்தவும், சில ரெயில் நிலையங்களில் புதிதாக அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. இது ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிந்தாதிரிப்பேட்டை, மூர்மார்க்கெட், கலங்கரை விளக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி, கோட்டூர்புரம் ஆகிய ரெயில் நிலையங்களில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அடுத்தகட்டமாக செங்கல்பட்டு, திரிசூலம், தரமணி, சென்னை கடற்கரை, ஆவடி, கிண்டி ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. புதிய சார்ஜிங் மையம் பொறுத்தவரையில் சென்னை முழுவதும் உள்ள 28 முக்கிய ரெயில் நிலையங்களில் அமைக்கப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியபோது, 'பயணிகள் வசதிக்காக அனைத்து ரெயில் நிலையங்களிலும் மின்சார இருசக்கர வாகனம் மற்றும் கார்களுக்கு சார்ஜிங் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சிந்தாதிரிப்பேட்டை, சென்ட்ரல் உள்ளிட்ட சில ரெயில் நிலையத்தில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கை மின்சார வாகனங்கள் பயன்படுத்தும் பயணிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். விரைவில் இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து, பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது' என்றனர்.






