என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மின்சார ரெயில்கள் பகுதி நேர ரத்து - தெற்கு ரெயில்வே
    X

    சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மின்சார ரெயில்கள் பகுதி நேர ரத்து - தெற்கு ரெயில்வே

    • காட்டாங்கொளத்தூர் பணிமனையில் வரும் ஜூன் 1-ந்தேதி பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
    • செங்கல்பட்டில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

    சென்னை:

    சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள காட்டாங்கொளத்தூர் பணிமனையில் வரும் ஜூன் 1-ந்தேதி காலை 11.45 மணி முதல் மாலை 3.15 மணி வரையில் (3 மணி நேரம் 30 நிமிடம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, சில மின்சார ரெயில் சேவை மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * சென்னை கடற்கரையில் இருந்து வரும் ஜூன் 1-ந்தேதி காலை 11, 11.45, மதியம் 12.30,1.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு கூடுவாஞ்சேரியில் இருந்து புறப்படும்.

    * சென்னை கடற்கரையில் இருந்து இதேதேதியில் மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

    * செங்கல்பட்டில் இருந்து இதேதேதியில் மதியம் 12,1,1.50 மாலை 3.05 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து புறப்படும்

    * செங்கல்பட்டில் இருந்து இதேதேதியில் மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×