பராமரிப்பு பணி: கடற்கரை-வேளச்சேரி இடையே மின்சார ரெயில் ரத்து

வேளச்சேரியில் இருந்து இன்று இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் ரத்து.கடற்கரையில் இருந்து நாளை அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு வேளச்சேரி செல்லும் மின்சார ரெயில் ரத்து.
பராமரிப்பு பணி: கடற்கரை-வேளச்சேரி இடையே மின்சார ரெயில் ரத்து
Published on

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை கடற்கரை பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, வேளச்சேரியில் இருந்து இன்று(சனிக்கிழமை) இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

அதே போல கடற்கரையில் இருந்து நாளை அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு வேளச்சேரி செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com