என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Reels"

    • இளைஞர்களின் இந்த செயலுக்கு இணையத்தில் கடும் கண்டனம் எழுந்தது.
    • இவர்களை கைது செய்யவேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தினர்.

    சிவகாசியில் சாலையில் சண்டையிடுவது போல் நடித்து வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்க வைத்து 2 இளைஞர்கள் எடுத்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலானது.

    இளைஞர்களின் இந்த செயலுக்கு இணையத்தில் கடும் கண்டனம் எழுந்தது. இவர்களை கைது செய்யவேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தினர்.

    இந்நிலையில், ரீல்ஸ் வீடியோ எடுத்த அருணாச்சலபுரத்தைச் சேர்ந்த காளிராஜன் (21), வடபட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார் (21) ஆகிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

    • தனது நண்பரை வீடியோ எடுக்கக் கூறி, பின்னர் எடிட் செய்து ரீல்ஸ் பதிவிட்டுள்ளார்.
    • இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவியது.

    சென்னையில் நீதிமன்றம் உள்ளே குற்றவாளிக் கூண்டில் நிற்பதை வீடியோ பதிவு செய்து பின்னணி இசையுடன் பரத் என்ற நபர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலானது.

    வழக்கு விசாரணைக்கு ஆஜரான அவர், தனது நண்பரை வீடியோ எடுக்கக் கூறி, பின்னர் எடிட் செய்து ரீல்ஸ் பதிவிட்டுள்ளார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவிய நிலையில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்ட பரத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், வீடியோ எடுத்த 17 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்துள்ளனர்

    கைதான பரத் (24) மீது ஏற்கனவே வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் புகைப்படங்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • கேமரா செல்பி ஸ்டிக் போன்ற உபகரணங்களை எடுத்துவர தடை விதிக்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் பாதுகாப்பு குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியதாவது:

    சுப்ரீம் கோர்ட்டில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் பேட்டி எடுப்பது, நேரலை செய்வது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

    உயர் பாதுகாப்பு வளையப் பகுதிகளுக்குள் புகைப்படங்கள் எடுக்கவும், வீடியோ பதிவு செய்யவும் முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.

    புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க பயன்படுத்தப்படும் 'கேமரா செல்பி ஸ்டிக்' போன்ற உபகரணங்களை எடுத்து வரவும் தடை விதிக்கப்படுகிறது.

    இந்தக் கட்டுப்பாடுகளை மீறினால், சுப்ரீம் கோர்ட்டின் உயர் பாதுகாப்பு பகுதிகளுக்குள் ஊடகத்தினர் நுழைய ஒரு மாதம் தடை விதிக்கப்படும்.

    சுப்ரீம் கோர்ட் ஊழியர்கள் இந்த விதிமீறல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தக் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யும் அதிகாரம் பணியமர்த்தப்பட்டுள்ள பாதுகாப்பு படைவீரர்களுக்கு வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

    • சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கு தொடங்கிய ஷீலு, அதில் வரும் ரீல்ஸ்களை பார்த்து ரசித்து வந்தார்.
    • பப்லு காணாமல் போனதற்கு ஷீலுதான் காரணம் என்று கணவர் குடும்பத்தினர் அவரை குற்றம் சாட்டினர்.

    பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்று ஒரு பழமொழி உண்டு. அது இப்படித்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    உத்தரபிரதேச மாநிலம் சண்டிலா அருகே உள்ள முரார்நகரை சேர்ந்தவர் ஷீலு. இவருக்கும் அடமாவ் கிராமத்தை சேர்ந்த சாண்டீரா என்கிற பப்லு என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    புதுமண தம்பதிகள் இருவரும் அடமாவ் கிராமத்தில் 2 மாதங்கள் வசித்து வந்தனர். ஷீலு கர்ப்பிணியானார்.

    இந்தநிலையில் வீட்டை விட்டு சென்ற பப்லு, அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவருடைய தந்தை புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பப்லுவை தீவிரமாக தேடினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    பப்லு காணாமல் போனதற்கு ஷீலுதான் காரணம் என்று கணவர் குடும்பத்தினர் அவரை குற்றம் சாட்டினர்.

    8 ஆண்டுகளாக பப்லு பற்றிய எந்த தகவலும் தெரியாமல், ஷீலு தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு குழந்தையும் பிறந்தது.

    சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கு தொடங்கிய ஷீலு, அதில் வரும் ரீல்ஸ்களை பார்த்து ரசித்து வந்தார். அதில் ஒரு வீடியோவில் மாயமான தனது கணவர் பப்லு இருப்பதை பார்த்தார். பல முறை அந்த வீடியோவை பார்த்து அதில் இருப்பது தனது கணவர்தான் என்பதை உறுதிப்படுத்திய ஷீலு, அதுபற்றி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் பல்வேறு பகுதிகளில் தேடியபோது பப்லு, பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    போலீசார் லூதியானா சென்று பப்லுவை தேடிப்பிடித்தனர். அப்போது அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து 8 ஆண்டுகள் அவருடன் குடும்பம் நடத்தி வந்ததும் அம்பலமாகியது.

    இதையடுத்து அவரை சொந்த கிராமத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். கர்ப்பிணி மனைவியை தவிக்கவிட்டு எதற்காக அவர் வீட்டை விட்டு ஓடினார் என்பது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக போலீசார் கூறினர்.

    பப்லு ஓடிப்போனதற்கு 8 ஆண்டுகளாக பழியை சுமந்து வந்த ஷீலு, மீண்டும் தனது கணவரை ஏற்பாரா என்பதும் பின்னர்தான் தெரியவரும்.

    • தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வந்த இவருக்கு சுமார் 6,000 ஃபாலோயர்கள் இருந்தனர்.
    • விஷம் குடித்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    டெல்லி: சமூக ஊடகங்களில் மனைவி ரீல்ஸ் வீடியோ பதிவிடுவது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் கணவர் அவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    டெல்லி நஜாப்கரின் ரோஷன்புராவில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த 35 வயதான அமன் இ - ரிக்ஷா ஓட்டுநராக பணி செய்து தனது மனைவி மற்றும் 6 மற்றும் 9 வயதுடைய இரண்டு மகன்களை காப்பாற்றி வந்தார்.

    இவரது மனைவி சமூக ஊடகங்களில் மிகவும் தீவிரமாக இருந்துள்ளார். தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வந்த இவருக்கு சுமார் 6,000 ஃபாலோயர்கள் இருந்தனர்.

    இது பிடிக்காத கணவன் அமன் மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதம் செய்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை, இது தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை மூண்டுள்ளது.

    வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அமன், தனது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

     தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அமன், விஷம் குடித்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இருப்பினும் தகவலறிந்து விரைந்த போலீஸ் அமனை காப்பாற்றி அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    தற்போது அவர் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவியின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

    • கோயில் குளத்தில் ஜாஸ்மின் என்ற பெண் காலைக் கழுவுவது போல் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.
    • தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.

    கேரளா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கோயில் குளத்தில் யூடியூப் பிரபலம் ஜாஸ்மின் ஜாஃபர் என்ற பெண் காலைக் கழுவுவது போல் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலானது.

    இந்துக்கள் அல்லாதவர்கள் குருவாயூர் கோவில் குளத்தில் நுழைய அனுமதி இல்லை என்றும் கோவில் குளத்தில் புஸ்கிப்படம் எடுக்க அனுமதி இல்லை என்று கூறி தேவசம் போர்டு ஜாஸ்மின் மீது புகார் அளித்தது.

    இந்நிலையில், குருவாயூர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டு, அதன் புனிதத் தன்மையை மீட்க பரிகாரம் நடத்தப்படும் எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இத்தனிடையே,ரீல்ஸ் எடுத்த ஜாஸ்மின் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டு, மன்னிப்பு கேட்டுள்ளார்.

    ஜாஸ்மின் ஜாஃபர், மலையாள பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்ஸ்டாகிராமில் 'Link a Reel' என்ற புதிய அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது.
    • ஒரு தொடராக ரீல்ஸ்களைப் பார்க்க இந்த அம்சம் உதவும்.

    இன்றைய டிஜிட்டல் உலகில், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களே இளைஞர்களின் உலகை ஆட்சி செய்கிறது.

    உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த சமூக ஊடகங்களில் தங்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளையும், சம்பவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

    கடந்த சில ஆண்டுகளில், சமூக ஊடக தளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம், உலகளவிலும் இந்திய அளவிலும் மிகப்பெரிய சமூக ஊடகமாகவும், வணிகத் தளமாகவும் உருவாகி வருகிறது.

    இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு வசதியாக 'Link a Reel' என்ற புதிய அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது.

    இதன்மூலம் போஸ்ட் செய்யப்படும் ரீல்ஸ்களுக்கு அடுத்து எந்த ரீல்ஸ் வர வேண்டும் என்பதை செட் செய்ய முடியும். ஒரு தொடராக ரீல்ஸ்களைப் பார்க்க இந்த அம்சம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சில நேரம் சட்டத்தை மீறும் வகையில் சாகசம் செய்து போலீசிடம் சிக்கும் சம்பவங்களும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லாவரம்:

    இன்றைய இளைய தலைமுறையினர் சமூகவலைத்தளத்தில் லைக்குகளை அள்ளும் ஆசையில் சாகச வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இதில் சில நேரம் சட்டத்தை மீறும் வகையில் சாகசம் செய்து போலீசிடம் சிக்கும் சம்பவங்களும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

    அந்தவகையில், ரீல்ஸ் எடுப்பதற்காக பைக்கில் அதி வேகமாக சென்ற சிறுவன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பல்லாவரத்தில் கேடிஎம் பைக்கில் அதி வேகமாக சென்ற 17 வயது சிறுவன் மற்றொரு பைக் மீது மோதி தூக்கி வீசப்பட்டதில் அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • படிக்கட்டில் பயணித்த ரெயில் பயணிகளை இளைஞர்கள் சிலர் குச்சியால் தாக்கியுள்ளனர்.
    • இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    பீகார் மாநிலம் நாக்ரி ஹால்ட் என்ற பகுதியருகே ரெயில் சென்று கொண்டிருந்தபோது, படிக்கட்டில் பயணித்த ரெயில் பயணிகளை இளைஞர்கள் சிலர் குச்சியால் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

    ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக ரெயில் பயணிகளை தாக்கியதாக போலீசாரின் விசாரணையில் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். 

    • ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் ரெயில் நிலைய மேலாளர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் இதை கண்காணிப்பார்கள்.
    • ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை:

    செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கோவில்கள் என அனைத்து இடங்களும் ரீல்ஸ்களுக்கான இடங்களாக மாறி இருக்கிறது.

    குறிப்பாக ரெயில் நிலையங்கள், ரெயில் பெட்டிகள், தண்டவாளங்களில் ரீல்ஸ் எடுத்து பதிவிடும் பழக்கம் அதிகமாகி வருகிறது. ரெயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் நின்றுகொண்டு ரீல்ஸ் எடுப்பதால் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க ரெயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ரெயில் நிலையங்களில் செல்போனில் வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

    இது குறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    விதிகளின்படி ரெயில் நிலையங்களில் செல்போனில் வீடியோ எடுப்பது அனுமதிக்கப்படுவதில்லை. புகைப்படம் மட்டுமே எடுக்கலாம். ஆனால், சிலர் செல்போனில் ரீல்ஸ் எடுத்து பதிவிடுவதாக புகார்கள் வந்தவாறு உள்ளது.

    எனவே, ரெயில் நிலையங்கள், தண்டவாளம் ஆகியவற்றில் செல்போனில் ரீல்ஸ் எடுக்கும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் ரெயில் நிலைய மேலாளர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் இதை கண்காணிப்பார்கள். அவ்வாறு ரீல்ஸ் எடுக்கும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். பயணிகளை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் எடுக்கும் நபர்கள் மீது கைது நடவடிக்கையும் பாயும். இதை தீவிரமாக கடைபிடிக்க ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், தண்டவாளங்களில் ரீல்ஸ் எடுப்பதை தடுக்க தண்டவாளப் பகுதிகளை அடிக்கடி ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • கல்லூரி மாணவன் ரீல்ஸ் மோகத்தில் காரை தாறுமாறாக ஓட்டி ஸ்டண்ட் செய்துள்ளார்.
    • படுகாயமடைந்த கல்லூரி மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மகாராஷ்டிராவின் சடாரா மாவட்டத்தில் ரீல்ஸ் மோகத்தில் காரை தாறுமாறாக ஓட்டி ஸ்டண்ட் செய்த கல்லூரி மாணவன் சுமார் 300 அடி பள்ளத்தாக்கில் காருடன் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆனால் 300 அடி பள்ளத்தில் விழுந்த மாணவன் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • அந்த வீடியோவில் ஒரு சிறுவன் ரெயில் செல்லும்போது தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு உள்ளான்.
    • சிறுவர்கள் எடுத்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலானது.

    ஒடிசா மாநிலம் பவுத் மாவட்டத்தில் ரெயில் செல்லும்போது தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு சிறுவர்கள் எடுத்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலானது.

    அந்த வீடியோவில் ஒரு சிறுவன் ரெயில் செல்லும்போது தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு உள்ளான். ரெயில் அவனை கடந்து சென்றவுடன் உற்சாகமாக எழுந்த சிறுவன் இன்னொரு சிறுவனுடன் சேர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறான். இதை அங்கே இருந்து இன்னொரு சிறுவன் வீடியோ எடுத்துள்ளான்.

    உயிரை பணயம் வைத்து சிறுவர்கள் ரீல்ஸ் வீடியோ எடுத்ததற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த வீடியோ வைரலான நிலையில் உயிரை பணயம் வைத்து ரீல்ஸ் எடுத்த 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    ×